வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (09/11/2017)

கடைசி தொடர்பு:13:25 (09/11/2017)

செவ்வாய் கிரகத்துக்கு டிக்கெட் எடுத்தாச்சா?: ஒரு லட்சம் இந்தியர்கள் முன்பதிவு

செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல ஒரு லட்சம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகம்

நாசாவின் ‘இன்சைட்’ (Interior Exploration using Seismic Investigations, Geodesy and Heat Transport) திட்டம் மூலம் பூமியிலிருந்து சிவப்புக் கிரகமான செவ்வாய் கிரகத்துக்கு வருகிற 2018-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி ராக்கெட் புறப்படுகிறது. இந்தப் பயணத்துக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் அனுப்பப்படும் என நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தப் பயணத் திட்டத்துக்கு உலகம் முழுவதும் பலர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 1,38,899 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. டிக்கெட்டில் பயணிகளின் பெயர் சிலிகான் மைக்ரோ சிப்களில் எழுதப்படுகிறது. மனித தலைமுடியை விட நூறு மடங்கு மெல்லிய எலக்ட்ரான் இலைகள் மூலம் பெயர் எழுத்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

நேற்று நாசா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்துக்கு முன்பதிவு செய்துள்ளோர் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. 6,76,773 முன்பதிவு பயணிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 2,62,752 பேருடன் சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது.