Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் நிச்சயமாகக் கைவிட வேண்டிய 5 விஷயங்கள்! #GoodParenting

பெற்றோர்

குழந்தை வளர்ப்பில்  ஒவ்வொரு தருணமும் முக்கியமானது. மகிழ்ச்சியோடு கடக்க வேண்டியது. குழந்தைகளின் சிறுசிறு வளர்ச்சியைக் கண்டு பூரிப்படைய வேண்டிய தருணம். அதே நேரத்தில் சில பெற்றோர்கள் மனதில் புரையோடிப்போன சில விஷயங்களை மறக்காமல் கைவிட வேண்டியது அவசியம். அவற்றில் பிரதானமான ஐந்து விஷயங்களைப் பார்ப்போம்.  

ஒப்பீடு: பெற்றோர்கள் கைவிட வேண்டிய முதல் விஷயம் இதுதான். வீட்டில் இருக்கும் இன்னொரு குழந்தையோடு, பள்ளியில் படிக்கும் சக மாணவரோடு, உறவினர். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு எனத் தினந்தோறும் ஒரு முறையாவது உங்கள் வீட்டுக் குழந்தைகளை ஒப்பிட்டு பேசிவிடுவீர்கள். இது இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று, ஒப்பிடப்படும் குழந்தையை விட, தான் மட்டம் எனும் தாழ்வு மனப்பான்மை, அடுத்தது யாரோடு ஒப்பிடப்படுகின்றனரோ அந்தக் குழந்தை வெறுக்கும் மனநிலை. இவை இரண்டுமே ஆபத்தானது. ஒருவரை ரோல் மாடலாக முன்னிறுத்தி, வழிக்காட்டுவதற்கும் மற்றவரோடு ஒப்பிட்டுப் பேசுவதற்குமான நுணுக்கமான வேறுபாட்டைப் பெற்றோர்கள் நிச்சயம் அறிந்துகொள்வதோடு, களைய வேண்டியதும் அவசியம்.

கனவுகள் தனித்தனி: நீங்கள் பாசம் கொட்டி வளர்க்கும் குழந்தைகள் உங்களைப் போன்ற வார்ப்பாகவே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, உங்களுக்கு நிறைவேற முடியாமல் போன கனவுகளின் மேல், குழந்தைகளை ஏற்றிவிடாதீர்கள். சிலரின் கனவுகளின் காலம் காலாவதியாகியிருக்கும். அதைக் கூட அறிந்துகொள்ளாமல், அதை நோக்கி தம் பிள்ளைகளைத் தள்ளுவர். முதலில், சரியான கல்வியைத் தரும் பட்சத்தில்தான் என்னவாக வேண்டும் என முடிவெடுக்கும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

children

தனித்திறன்களை அவமதிப்பது: இந்த உலகின் ஆயிரம் பிரச்னைகளிலிருந்து சற்றே ஆறுதலையும் நிம்மதியையும் தருவது கலைகள்தான். ஆனால், நம் வீட்டுக் குழந்தைகள் பாடினாலோ, நடனம் ஆடினாலோ வேறு கலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ இவையெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையில்லை எனச் சொல்லி அவமதித்துவிடுகிறோம். நல்ல பாடல் ஒன்றைக் கேட்கும்போது நம்மை அறியாமல் அழும்போது சற்றே யோசித்துப் பாருங்கள், அந்தக் குரலுக்குச் சொந்தக்காரராக உங்கள் வீட்டுப் பிள்ளைகள் ஏன் இருக்கக் கூடாது. ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ள தனித்திறன்களை அவமதிப்பதை நிறுத்தி, அவற்றை வளர்த்தெடுக்க உதவுங்கள். அப்படிச் செய்யும்போது இந்த உலகின் கோடிக்கணக்கான மனிதர்களின் உங்களின் குழந்தைகள் தனித்துப் புகழடைவர்.

ஆலோசனையில் தவிர்ப்பது: குழந்தைகள் சிறியவர்களாக இருப்பினும் அவர்களும் வீட்டின் ஓர் அங்கம். ஆனால், பெரும்பாலான பெற்றோர் வீட்டுக்கான பல முடிவுகளை எடுக்கும்போது குழந்தைகளின் கருத்துகளைக் கேட்பது இல்லை. முக்கிய முடிவுகள் என்றவுடன் பெரிய விஷயங்கள் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். வீட்டுக்கு வாங்கவிருக்கும் ஃபிரிட்ஜ் நிறம் என்னவாக இருக்கலாம் என்பது தொடங்கி, சின்னச் சின்ன விஷயங்களையும் குழந்தைகளுடன் ஆலோசிக்கலாம். பல நேரங்களில் பெரியவர்களை விடவும் சிறப்பான ஆலோசனைகளைக் குழந்தைகள் வழங்கக்கூடும். கூடவே, தம் விருப்பத்துடன் வீட்டுக்குள் வந்த பொருளுடன் அவர்கள் இன்னும் நெருக்கமான உறவை வெளிப்படுத்துவார்கள். அதைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவார்கள். 

அவகாசம் தர மறுப்பது: 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறைதான் குறிஞ்சி மலர் பூக்கும் என்பார்கள். ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் தேவை. ஆனால், பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அந்த அவகாசத்தைத் தருவதே இல்லை. ஒரு பள்ளியிலிருந்து வேறொரு பள்ளியில் சேர்த்துவிடுவார்கள். ஆனால், குழந்தை அந்தப் புதிய பள்ளியை மனதளவில் ஏற்றுக்கொள்ளவும் புதிய நண்பர்களைச் சேர்த்துக்கொள்ளவும் சில நாள்கள் ஆகலாம். அதனால் பள்ளிக்குச் செல்வதற்கும் அங்கிருந்த வந்த பிறகு சுணக்கமாகவும் இருக்கலாம். ஆனால், அதையே திரும்பத் திரும்பக் கேட்டுச் சுணக்கத்தை அதிகப்படுத்தும் பெற்றோர்களும் உண்டு. இது ஓர் உதாரணம்தான். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் குழந்தைகளை அவசரப்படுத்துவதைக் கைவிடுவதற்கு அவகாசம் எடுத்துக்கொள்ளாதீர்கள்.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close