Published:Updated:

ராபர்ட் வதேரா மீதான புகார் குறித்து விசாரணை இல்லை: ப.சிதம்பரம்

ராபர்ட் வதேரா மீதான புகார் குறித்து விசாரணை இல்லை: ப.சிதம்பரம்
ராபர்ட் வதேரா மீதான புகார் குறித்து விசாரணை இல்லை: ப.சிதம்பரம்
ராபர்ட் வதேரா மீதான புகார் குறித்து விசாரணை இல்லை: ப.சிதம்பரம்

புதுடெல்லி: ராபர்ட் வதேரா மீதான நில ஊழல் புகார் குறித்து விசாரணை   நடத்தப்படமாட்டாது என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திட்டவட்டமாக   தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா   மீது,ஊழலுக்கு எதிரான அமைப்பை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்,கடந்த   வெள்ளிக்கிழமையன்று பரபரப்பான ஊழல் புகார்களை கூறினார்.

பிரசித்தி பெற்ற டி.எல்.எப். ரியல் எஸ்டேட் நிறுவனம் வதேராவுக்கு 2007-2010   காலக்கட்டத்தில் வட்டியின்றி ரூ. 65 கோடி கடன் வழங்கியுள்ளதாகவும், இந்தப்   பணத்தைக் கொண்டு அவர் அடிமாட்டு விலைக்கு ரூ.300 கோடி சொத்துக்களை வாங்கிக்   குவித்துள்ளதாகவும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ.500 கோடி எனவும் அரவிந்த்   கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

##~~##
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய   ப.சிதம்பரம், இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், இந்த புகார் குறித்து விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று   திட்டமாக அறிவித்தார். குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால், தனியார்   நிறுவனங்களின் வர்த்தக பரிமாற்றங்கள் குறித்து அரசு விசாரணை நடத்த முடியாது என்று   அவர் விளக்கம் அளித்தார்.
அரசு தரப்பில் இந்த பிரச்னை குறித்து என்னால் இங்கு பதில் அளிக்க முடியாது.   குற்றச்சாட்டுகளை கூறியவர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டு உள்ளனர்.   தொடர்புடைய நிறுவனம் தனது கருத்துகளை வெளியிட்டு இருக்கிறது. அதில்   சம்பந்தப்பட்ட தனி நபரும் தனது கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்கள்;   அவ்வளவுதான் என்று அவர் மேலும் கூறினார்.