Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

அம்பேத்கர் சொன்னால் கேட்பீர்களா?

பிரீமியம் ஸ்டோரி
##~##

'' 'டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தால் எனது இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று புலம்புகிறாரே ப.சிதம்பரம்?''

 ''வேட்டில் இருந்து அல்ல, நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையிலேயே அவரது இமேஜ் பணால் ஆகிவிட்டது!''

- ஆர்.ஆர்.உமா, நெல்லை.

''மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று ஏராளமான மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்தாலும், சிலர் 'மரண தண்டனையை நீக்கக் கூடாது’ என்கிறார்களே விடாப்பிடியாக?''

'' 'மனித உரிமை’ என்கிற ஒரு விஷயமே பேசப்படாதபோது ஒருவர் மரண தண்டனையைப் பற்றி சொன்ன கருத்து இது: 'மரண தண்டனையின் மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் விசாரிக்கலாம்

நானே கேள்வி... நானே பதில்!

என்பதற்குப் பதிலாக, மரண தண்டனையை முழுமையாக ஒழித்துவிடுவதை நான் ஆதரிக்கிறேன். இதனால் பல முரண்பாடுகள் முடிவுக்கு வரும்!’

மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் கவனத்துக்கு... மேற்கண்ட கூற்றைச் சொன்னவர் பெயர் அம்பேத்கர். அவர்தான் இந்திய அரசியல் சாசனத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்!''

- பனிமொழி சாதனா, மதுரை.

''ஒருவர் அறிவாளியா, முட்டாளா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?''

''அறிவாளி, பிறரைப்பற்றி உங்களிடம் பேசுவான். முட்டாள், தன்னைப்பற்றி உங்களிடம் பேசுவான். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, உங்களைப்பற்றியே உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் சாமர்த்தியசாலியிடம்தான். பீ கேர்ஃபுல்!''

- சிக்ஸ்முகம், விஜயமங்கலம்.

''சீருடைகள், மதிய உணவு, முட்டை இப்போது லேப்டாப். இதற்கு மேல் மாணவர்களுக்கு எதை இலவசமாக வழங்க வேண்டும்?''

''கல்வி. இதற்கு மேல் அல்ல, முதலில் இருந்தே ஓர் அரசு தன் குடிமக்கள் மீது அக்கறை இருந்தால், கல்வியைத்தான் இலவசமாக அளிக்க வேண்டும். கல்வியைக் காசாக்கிவிட்டு, மற்றவற்றை இலவசமாக வழங்குவது குதிரை வாங்கு, சேணம் இலவசமாகத் தருகிறோம் என்பது மாதிரியான வியாபாரத் தந்திரம்!''

- மதிமலர், கும்பகோணம்.

''பல சமயங்களில் நவீன கவிதைகள் புரிவது இல்லையே?''

''உங்களுக்காக ஒரு கவிதைப் பதில்.

பொதியவெற்பனின் கவிதை இது...

'நகுலனைப் பிடிக்குமா?’
'பிடிக்கும்.’
'பிடிபடுகிறாரா நகுலன்?’
'பிடிக்கும்
அவ்வளவுதான்!
பிடிபட
வேண்டுமென்பது
அவசியமா என்ன?
பிடிபட்டால்
ஒருவேளை
பிடிக்காமலேகூடப்
போகலாம்!’
''

- சுந்தரம், சென்னை.

நானே கேள்வி... நானே பதில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு