மயில் தோகை... சோப்பு நுரை... எண்ணெய்க் குமிழி... வர்ணஜாலம் காட்டுவது ஏன்? #Iridescence

Iridescence

 வண்ணங்கள் மிகவும் அழகானவை. வண்ணங்களை நோக்கி சட்டென மனித கண்கள் ஈர்க்கப்பட்டு விடும். வண்ணங்களைப் பார்க்கும்  பொழுது மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சியை உணரமுடிகிறது. ஆனால், இத்தகைய வண்ணங்கள் எப்படி கண்களுக்குத் தெரிகிறது?

ஒரு பொருளின்மீது வெளிச்சம் படும்போது அந்தப் பொருள் வெளிச்சத்தைப் பிரதிபலித்தால் அப்போது வண்ணங்கள் உண்டாகும். இதற்கு ஆக்கபூர்வமான தலையீடு என்று பெயர். ஆனால், ஒளியைப் பிரதிபலிக்காமல் தடை செய்தால் அவை அழிவுகரமான தலையீடு.  

Iridescence என்பதற்கு வானவில் என்று பொருள். மற்ற நேரங்களுடன் ஒப்பிடுகையில் Iridescence  வானவில் வண்ணங்கள் ஒரு தனித்துவத்தைப் பெற்றுள்ளது. இதுகுறித்த  ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள் அரிசோனா மாநிலப் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்கள். இவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள விஞ்ஞானிகளைக் கொண்டு (குறிப்பாக ஒளியியல், வளர்ச்சி, பாரம்பர்யம், வேதியல், தயாரிப்பு, பரிணாமம்) இயற்கையாக நிகழும் மாறுபட்ட வண்ணங்களின் செயல்பாடுகளை "உயிரியோமேடிக் தொழில்நுட்ப பயன்பாட்டை"  ஆய்வு செய்தனர்.  மேலும், இந்த மாணவர்கள் அறிவியலாளர்களையும், கல்வியாளர்களையும், கலைஞர்களையும் ஒரு மாநாட்டில் பங்குபெறச் செய்து Iridescence பற்றி கலந்துரையாடினர். 

Iridescence :
இவை  கோனியோகுரோமிசம் (Goniochromism) என்றும் அறியப்படுகிறது. பொதுவாக பார்வைக் கோணம் அல்லது வெளிச்சத்தின் கோணத்தை மாற்றும்பொழுது இந்த வானவில் வண்ணங்கள் தோன்றும். உதாரணத்துக்கு, ஒரு மயில்  தோகையை விரித்தாடும்போது அதை எதிரில் நின்று பார்ப்பவருக்கும், பக்கவாட்டில் நின்று பார்ப்பவருக்கும், தொலைவில் நின்று பார்ப்பவர்க்கும் வெவ்வேறு விதமான வண்ணங்களோடு தெரியும்.  மயிலின் இறகானது பழுப்பு நிறம்தான். ஆனால், ஒரு நபரின் பார்வைக்கோணம் மாறும்பொழுது அவை மின்னும்  நீலமாகவும், பச்சை வண்ணங்களாகவும் தெரியும்.

இந்த வண்ணங்கள் பெரும்பாலும் பிரகாசிக்கும்; மினு, மினுக்கும் தன்மையுடன் இருக்கும். உதாரணமாக , தெருவில் சிந்தப்பட்ட எண்ணெய் தூரத்தில் இருந்து  நடந்துவருபவருக்கு பிரகாசித்து, மினுமினுப்பாக பல வண்ணங்களோடு தெரியும்.பார்வைக் கோணம் அல்லது வெளிச்சத்தின் கோணம் மாறும்போது சில பொருள்களின் மேற்பரப்பில் பல வண்ணங்கள் தோன்றும். இதற்கு உதாரணமாக சோப்பு குமிழிகளைக் கூறலாம். சோப்புக் குமிழியின் மீது வெளிச்சத்தின் கோணம் மாறும்போது அதன் மேற்பரப்பில் பல வண்ணங்கள் தோன்றும். இந்த வண்ணங்களின் நிகழ்வுகளை, பட்டாம்பூச்சி இறக்கைகள், கடல் சிப்பிகள் மற்றும் சில கனிமங்களிலும் காணலாம்.

Iridescence

உயிரியலில் இரிடெசன்ஸ் (Iridescence):
இந்த வானவில் வண்ணங்களை சில தாவரங்கள் மற்றும் பல விலங்குகளிலும் காணலாம். இரண்டு அல்லது  மூன்று நிறங்களுக்கிடையே  உள்ள கோண மாற்றம் அல்லது மாறுபட்ட வண்ணங்களைக் காணமுடியும். சிலவகையான மலரிதழ்கள் ஒரு சிதறல் வண்ணத்தை உருவாக்குகிறது. பெரும்பாலும் இவை மனிதக் கண்களுக்கும், மலரில் அமரும் பூச்சிகளுக்கும் தெரிவதில்லை. ஏனெனில் இவை தாவரத்தின் நிறங்களோடு ஒத்திருப்பதால் மறைந்துவிடுகின்றன.

  எந்தெந்த உயிரினங்களிலும், பொருள்களிலும் இந்த வானவில் வண்ணங்களைக் காணமுடியும்???    

1. பறவைகளின் இறக்கைகள்: (கிங் பிஷர்,  ஹம்மிங் பறவை, கிளிகள், வாத்து, மற்றும் மயில்)

2. பிஸ்மத் படிகம்

3. இயந்திர எண்ணெய் கசிவு

4. (குறுந்தகடு) சிடி-யின் மேற்பரப்பு, டிவிடி-க்கள் .

5. மேக சீர் குலைவின்போது மேகங்களின் ஓரங்களில் உருவாகும் வண்ணங்கள்.

6. நீரில் விடப்பட்ட எண்ணெய் மற்றும் சோப்பு குமிழி.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!