Published:Updated:

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடலோரக் காவல்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடலோரக் காவல்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடலோரக் காவல்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையினர் மீது மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இந்திய கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் படகில் இருந்த மீனவர்கள் பிச்சை மற்றும் ஜஸ்டின் ஆகிய இருவருக்கு கைகளில் குண்டு காயம் ஏற்பட்டது. இதன் பின்னரும் அவர்களை விசாரணை என்ற பெயரில் இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடலோரக் காவல்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு


மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் காயமடைந்த மீனவர் பிச்சை மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழு போலீஸாரிடம் இந்திய கடலோரக் காவல்படையினர் மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் இந்திய கடலோரக் காவல்படை கப்பல் 77-ன் அதிகாரிகள் மீது கொலை முயற்சி, காயம் ஏற்படுத்துதல் மற்றும் இந்திய ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடலோரக் காவல்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு


கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களது படகின்மீது மோதி கடலில் மூழ்கடித்ததாக இந்திய கடலோரக் காவல்படையினர் மீது முதன்முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்காகக் கொலை முயற்சி பிரிவுடன் இந்திய ஆயுத சட்டப் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கடலோரக் காவல்படையினர் மீது ஆயுத சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

 இதனிடையே மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 16-ம் தேதி மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், இந்திய கடலோரக் காவல்படையினரைக் கண்டித்தும் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.