Published:Updated:

சீட்டுக் கம்பெனி நடத்திய பெண், மகன், மகளுடன் தற்கொலை முயற்சி... கும்பகோணத்தில் பரபரப்பு!

சீட்டுக் கம்பெனி நடத்திய பெண், மகன், மகளுடன் தற்கொலை முயற்சி... கும்பகோணத்தில் பரபரப்பு!
சீட்டுக் கம்பெனி நடத்திய பெண், மகன், மகளுடன் தற்கொலை முயற்சி... கும்பகோணத்தில் பரபரப்பு!

கும்பகோணத்தை அடுத்துள்ள பாபநாசத்தில், சீட்டு நிறுவனம் நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால், பெண் ஒருவர் தானும் தற்கொலைக்கு முயன்று, மகன், மகளுக்கும் விஷம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்துள்ள வளத்தமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர், புண்ணியமூர்த்தி. இவரது மனைவி  கலைச்செல்வி, கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஹெச்.பி.என் என்ற தனியார் சேமிப்பு நிறுவனத்தின் முகவராக செயல்பட்டுவந்தார். இதில், 5000 உறுப்பினர்கள் வரை சேர்ந்து பணத்தை சேமித்துவந்தனர். திருச்சி, திருவாரூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் கிளைகள் தொடங்கி நடத்தப்பட்டுவந்தன. கலைச்செல்வியின் கீழ் 114 பேர் உறுப்பினர்களாக சேர்ந்து பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிதி நிறுவனம், 2012-ல்  திருச்சி, திருவாரூர், சென்னை ஆகிய பகுதிகளில் இருந்த கிளைகளைத் திடீரென மூடியது. பணத்தைக் கட்டிய உறுப்பினர்கள், கலைச்செல்வியிடம் கேட்டுத் தொந்தரவுசெய்துள்ளனர். இதனால் மனமுடைந்த கலைச்செல்வி, மகன், மகளுக்கு பூச்சிமருந்து கொடுத்து, அவரும் குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்  சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.