Published:Updated:

கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதாரத் தூதுவராக்கிய கலெக்டர்!

செ.சல்மான் பாரிஸ்
கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதாரத் தூதுவராக்கிய கலெக்டர்!
கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதாரத் தூதுவராக்கிய கலெக்டர்!

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை பற்றி எடுத்துக் கூறி, தன் வீட்டில் மட்டுமல்லாமல் ஊர்க்காரர்களையும் கழிப்பறை கட்ட வைத்த பத்தாம் வகுப்பு மாணவி ரமாதேவியை சுகாதர தூதுவராக விருது வழங்கி பாராட்டினார் விருதுநகர் கலெக்டர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேது நாராயணபுரத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் ரமாதேவி. தன்  வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால், மிகவும் மனம் நொந்தவர், பள்ளியிலும், ஊடகங்களிலும் வெளிவரும் தூய்மை இந்தியா திட்ட விளம்பரங்களைப் பார்த்து, தன் பெற்றோரிடம் வற்புறுத்தி தன் வீட்டில் கழிப்பறை கட்ட வைத்துள்ளார்.

அதோடு அவர் இருக்கவில்லை... தங்கள் கிராமத்தில் சுகாதரமற்ற முறையில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் வழக்கத்தை மாற்ற முடிவு செய்தவர், கிராம மக்களிடம்  வீட்டில் கழிப்பறை கட்ட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். அதற்கு அரசு தரும் நிதியுதவி பற்றியும் விளக்கி கூறியுள்ளார்.

தொடர்ந்து இவரின் வற்புறுத்தலால் ஊர்காரர்கள் வீடுகளில் கழிப்பறை கட்ட தொடங்கியுள்ளார்கள். இத்தகவல் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்து ரமாதேவியை இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பாராட்டி சுகாதர தூதுவர் என்ற விருதினை வழங்கி  கௌரவித்தனர்.