Published:Updated:

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது செருப்பு வீச்சு!

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது செருப்பு வீச்சு!
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது செருப்பு வீச்சு!
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது செருப்பு வீச்சு!

டெல்லி: விலைவாசி, மின் கட்டண உயர்வை கண்டித்து டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது பெண் ஒருவர் செருப்பு வீசி உள்ளார்.

டெல்லியில் உள்ள நருதிநகரில் மாநில உணவு வழங்கல்துறையின் வட்டார அலுவலக தொடக்க விழா நடந்தது. விழாவில் முதலமைச்சர் ஷீலா தீட்சித் பேசினார். அவர் பேச தொடங்கியதும் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் அவருக்கு எதிராக கறுப்பு கொடி கட்டினார்கள்.

விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வை எதிர்த்து கோஷங்களை முழங்கினார்கள். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்த ஒரு பெண் ஷீலா தீட்சித்தை நோக்கி செருப்பு வீசினார். ஆனால்  செருப்பு ஷீலா தீட்சித்தை தாக்காமல் மேடை அருகே விழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.  செருப்பு வீசிய பெண் குறித்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.