Published:Updated:

ஊழல் புகார்: பிரதமரிடம் விளக்கம் அளிக்கிறார் குர்ஷித்!

ஊழல் புகார்: பிரதமரிடம் விளக்கம் அளிக்கிறார் குர்ஷித்!
ஊழல் புகார்: பிரதமரிடம் விளக்கம் அளிக்கிறார் குர்ஷித்!
ஊழல் புகார்: பிரதமரிடம் விளக்கம் அளிக்கிறார் குர்ஷித்!

புதுடெல்லி: தம் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து மத்திய சட்ட அமைச்சர் சல்மான்  குர்ஷித் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் குர்ஷித்தும்,அவரது மனைவி லூயிஸ் குர்ஷித்தும் ஜாகீர்  ஹுசேன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர்.அதன் மூலம் மாற்றுத்  திறனாளிகளுக்கு உதவி வழங்க மத்திய அரசு ரூ.71.50 லட்சம் ஒதுக்கியது.

அந்த நிதியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், குர்ஷித்தின் மனைவி நடத்தி வரும்  தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை அபகரித்துக்கொண்டதாகவும்,  இதையடுத்து சல்மான் குர்ஷித் பதவி விலக வேண்டும் எனவும் சமூக சேவகர் அரவிந்த்  கெஜ்ரிவால் புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால் கெஜ்ரிவாலின் புகாரை குர்ஷித் மறுத்துள்ளார்.இருப்பினும் கெஜ்ரிவால், குர்ஷித்  மீதான குற்றச்சாட்டில் உறுதியாக உள்ளார்.மேலும் தமது புகாருக்கு வலு சேர்க்கும்  மேலும் பல ஆதாரங்களை இன்று மாலை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை11.30 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை,  குர்ஷித்தும் அவரது மனைவியும் சந்தித்து தம் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம்  அளிக்க உள்ளார்.