Published:Updated:

சச்சினை ஆஸி. பிரதமர் ஆக்க வேண்டி்யதுதானே...? மேத்யூ ஹைடன் கடுப்பு!

சச்சினை ஆஸி. பிரதமர் ஆக்க வேண்டி்யதுதானே...? மேத்யூ ஹைடன் கடுப்பு!
சச்சினை ஆஸி. பிரதமர் ஆக்க வேண்டி்யதுதானே...? மேத்யூ ஹைடன் கடுப்பு!
சச்சினை ஆஸி. பிரதமர் ஆக்க வேண்டி்யதுதானே...? மேத்யூ ஹைடன் கடுப்பு!

புதுடெல்லி: சச்சின் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்குவதற்கு  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க  வீரர் மேத்யூ ஹைடன், சச்சினை ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஆக்க  வேண்டியதுதானே...?என கடுப்புடன் கேட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட்,இரு தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்தார்.  டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கிரிக்கெட் விளையாட்டில் பல  சாதனைகளை புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கு, ஆஸ்திரேலியாவின் மிக உயரிய 'ஆர்டர்  ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதை வழங்குவதாக அறிவித்தார்.

அவரது அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்  முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன்,சச்சினை ஆஸ்திரேலியாவின் பிரதமராக  ஆக்க வேண்டியதுதானே...?என கடுப்புடன் கேட்டுள்ளார். 

##~~##
இது தொடர்பாக ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு  கூறிய அவர்,"ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற கவுரவ விருதினை ஆஸ்திரேலிய  குடிமக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.நமது நாட்டின் புனிதமானவைகளில் இந்த  விருதும் ஒன்று.
கிரிக்கெட் உலகின் குறிப்பிடத்தக்க நபராக டெண்டுல்கர் அறியப்படுகிறார் என்ற வகையில்  இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.அவர்  ஆஸ்திரேலியாவில் பிறந்தவராக இருந்தால் அவருக்கு பிரதமர் பதவி தந்தாலும் நான்  வரவேற்பேன்.ஆனால், அவர் இந்தியாவில் வசிக்கிறார் என்பதை நாம் எண்ணிப்பார்க்க  வேண்டும்”என்று மேலும் தெரிவித்தார்.