Published:Updated:

2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள்: பிரதமர்

2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள்: பிரதமர்
2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள்: பிரதமர்
2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள்: பிரதமர்

ஜெய்ப்பூர்:2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
 
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பென்சன் உள்ளிட்ட  பல்வேறு சமூக நலத்திட்டங்களின் கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு நேரடியாக பணம்  வழங்கும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் ஆதார் அடையாள  அட்டை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 20 கோடி பேருக்கு ஆதார் சிறப்பு அடையாள  அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 21-வது கோடி ஆதார் அடையாள  அட்டை வழங்கும் விழா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் துடு நகரில் இன்று  நடந்தது.
 
விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஆதார் சிறப்பு  அடையாள அட்டைகளை வழங்கி பேசுகையில்,"தனிச்சிறப்பு அடையாள எண்கள்  கொண்ட ஆதார் அட்டைகள் வழங்கப்படுவதால் நாட்டில் 1.5 கோடி மாணவர்கள்  ஸ்காலர்ஷிப் பெறவும், 2 கோடி முதியவர்கள் பென்சன் பெறவும், 3 கோடி பேர்  மருத்துவ காப்பீடு பெறவும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ்  5 கோடி மக்கள் பயன்பெறவும் உதவியாக இருக்கும்.
 

##~~##
மேலும் பயனானிகளுக்கான சலுகைகள் நேரடியாக கிடைப்பதுடன், ஊழல் மற்றும்  விரயம் தொடர்பான புகார்கள் குறையும்.ஊழலை தடுக்கவும், ஆட்சி முறையில்  வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசு  விரும்புகிறது. இதில் ஆதார் மிக முக்கியமான நடவடிக்கை ஆகும்.
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் 24 கோடி மக்கள் ஆதார் திட்டத்தின்கீழ் பதிவு  செய்யப்பட்டுள்ளனர். 2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள்  வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
 
விழாவில் சோனியா காந்தி பேசுகையில்,
” ஆதார் திட்டம், சாதாரண மனிதனுக்கும் ஒரு அடையாளத்தைத் தருகிறது. மேலும்  அரசு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டைகள் ஒரு கருவியாகும்.
 
இந்த அட்டையைப் பயன்படுத்தி நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் அரசு சலுகைகளை  பெற உரிமை உள்ளது. ஆதார் அட்டைக்காக 25 கோடி பேர் முன்பதிவு செய்து  காத்திருக்கிறார்கள். இத்திட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனையாகும்”  என்றார்.