Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

'அன்னைக்கு ரோட்ல ஒரு பொண்ணைப் பார்த்தேன். நல்லா சிரிச்ச மாதிரி அழகா ஒரு செல்ஃபி எடுக்க 15 நிமிஷம் டைம் வேஸ்ட் பண்றா. யெஸ்... எனக்கு செல்ஃபி பிடிக்கவே இல்லை. நல்ல செல்ஃபி க்ளிக் பண்ற அளவுக்கு பொறுமையும் இல்லை. அது ஏன்னும் தெரியலை’ என ஸ்டேட்டஸ் தட்டிய ஹீரோயின்... நம்ம இலியானா. லெட்ஸ் நாட் டேக் எ செல்ஃபி புள்ள! 

இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்

 தாஜ்மஹாலை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள் ஏலியன்கள். இதுதான் 'பிக்ஸல்ஸ்’ படத்தின் ஹைலைட் காட்சியாம். பூமியில் இருந்து சென்ற சிக்னலைத் தவறாகப் புரிந்துகொண்ட ஏலியன்கள், பூமியின் அதிசய லேண்ட்மார்க்குகள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் மீடியம்... வீடியோ கேம்ஸ். தியேட்டரில் ஏலியன்களின் வீடியோ கேம் அட்டகாசங்களை விசிலடித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் உலகக் குடிமகன்கள். ஒருநாள் நிஜமாவே கிளம்பி வரப்போறானுங்க பாருங்க!  

இன்பாக்ஸ்

 'பெண்களின் உடலுக்கு மரியாதை கொடுங்கள். நான் ஆண்களை மட்டும் சொல்லவில்லை. பெண்களே... உங்களையும்தான்’ என அதட்டுகிறார் 'டைட்டானிக்’ அழகி கேட் வின்ஸ்லெட். 'நானும் டீனேஜில் இருந்து பார்க்கிறேன்... பெண்களை, உடல் அமைப்பை வைத்தே கேலி செய்கிறார்கள். பெண்களும் தங்கள் உடலைப் பற்றி பெருமையாக நினைப்பது இல்லை. நான் இப்போது கொஞ்சம் குண்டாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த வயதுக்கே உரிய உடல் அமைப்பை பெற்றிருக்கிறேன். அது எனக்கு சந்தோஷம்தானே’ என்கிறார் கேட். நோட் பண்ணுங்க கேர்ள்ஸ்!

இன்பாக்ஸ்

 92,50,000 ரூபாயாம்... இந்தியாவில் யோகா தினம் அன்று மேட் வாங்கிய செலவு. கிட்டத்தட்ட ஒரு கோடி. அதுவும் யோகா தினம் அன்று 35,000 பேர் பங்கேற்ற பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கு என வாங்கப்பட்ட 37,000 மேட்கள் சீனாவில் இருந்து வாங்கப்பட்டவையாம். அப்புறம் எதுக்கு 'மேட் இன் இந்தியா’ கோஷம் போடுறீங்க மோடி?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 'அது என்ன எதற்கெடுத்தாலும் என்னைக் குற்றம் குறை சொல்வது? நானும் மனுஷிதானே... சின்னச் சின்னத் தப்பு செய்வேன்தானே! ஆனால், இனி அமைதியாக இருக்க மாட்டேன். பதிலுக்குப் பதில் வெளுத்துக் கட்ட வேண்டியதுதான்’ என ட்விட்டரில் சபதமிட்டிருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. என்னவாம்? விராட் கோஹ்லியுடனான காதல் தொடங்கி அப்துல் கலாமுக்கான அஞ்சலியில் அவர் பெயரைத் தப்பாகக் குறிப்பிட்டது வரை அனுஷ்காவுக்கு குவியும் வசைகளால்தான் ரௌத்திரமாகிவிட்டார் அனுஷ். ஆல் இன் த கேம்!

இன்பாக்ஸ்

 'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’-இதை வைத்து எக்குதப்பாக மீம்ஸ் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் ஆந்திரா நெட்டிசன்கள். 'பாகுபலி, கட்டப்பாவுக்கு கேண்டி க்ரஷ் ரெக்வஸ்ட் கொடுத்திருப்பான்?’ என ஆரம்பித்து, பல காரணங்களை அடுக்குகிறார்கள். ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தில், 'நீங்கள் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்வீர்களாமே! கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என விசாரித்துச் சொல்லுங்களேன்’ - இப்படியெல்லாம் கொக்கிப் போடுகிறார்கள். 'உங்கள் அப்பாதானே... நீங்கள் கேட்டால் சொல்ல மாட்டாரா? ஏன் பாகுபலியைக் கொன்றார் எனக் கேட்டுச் சொல்லுங்களேன்’ என சிபிராஜுக்கு ட்வீட்டுவது என ஏக அக்கப்போர். நக்மாவுக்குப் பதிலா கவுண்டமணி கால்ல சூடு போட்ட  அந்தக் கட்டப்பா மீம்... தூள் பட்டாசு!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 ஆச்சர்யம்... ஹாலிவுட் டாப்ஸ்டார் டாம் க்ரூஸ் கடந்த 30 வருடங்களில் நடித்த எந்தப் படமும் ஃப்ளாப் ஆனது இல்லையாம். அந்த அசாத்திய சாதனையை கடந்த வாரம் வெளியான 'மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் ஐந்தாம் பாகமும் தக்கவைத்திருக்கிறது. படம் தெறி ஹிட். '53 வயதில் டாம் செய்யும் சாகசங்கள், நம் அனைவரின் அடிமனதில் இருக்கும் சூப்பர் மேன் ஆசைக்கு ஒரு வடிகால்’ என, இந்த ஆக்ஷன் படத்துக்கான விமர்சனங்களும் மாஸ் கூட்டுகின்றன. சூப்பர் லைக்ஸ்!  

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 நித்யா மேனன் செம ஹேப்பி. 'ஓ.கே கண்மணி’ படத்துக்குப் பிறகு தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், கண்டுகொள்ளாமல் இருந்தவர் இப்போது சூர்யாவுடன் '24’ என்ற த்ரில்லர் படத்தில் நடிக்க 'ஓ.கே’ சொல்லியிருக்கிறார். படத்தில் இன்னொரு ஹீரோயின் சமந்தா. 'போட்டி நல்லது பாஸ்’ எனச் சிரிக்கிறார் நித்ஸ். ஓ.கே... ஓ.கே.!