Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

'இசிட்ரோ’... என்னது இது? ஸ்ருதி ஹாசன் தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர். 'பல வருஷக் கனவு இப்போதான்  நனவாகியிருக்கு. இதில் அனிமேஷன், குறும்படம், மியூசிக்னு எல்லா கிரியேஷன்களும் இருக்கும். எனக்குக் கிடைச்ச வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்கணும். அதான் 'இசிட்ரோ’. தரமான படைப்புகளை உருவாக்க என்னால் ஆன முயற்சி’ என்கிறார் ஸ்ருதி. சரி 'இசிட்ரோ’ என்றால்... ஸ்பானிஷ் மொழியில் 'பல ஐடியாக்களுடன் பரிசளிக்கப்பட்டவள்’ என அர்த்தம். ட்ரீம் ஹீரோயினின் ட்ரீம் புராஜெக்ட்! 

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்க, தோனி பாராசூட் பயிற்சியில் தீவிரமாக இருக்கிறார்.  ஆக்ரா எலைட் பாரா ராணுவ முகாமில் தீவிரப் பயிற்சியில் இருப்பவர், வானத்தில் இருந்து ஐந்து முறை பாராசூட்டில் இருந்து குதிப்பாராம். விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, ராணுவத்தில் பணிபுரியத்தான் ஆர்வமாக இருக்கிறாராம் தோனி. கேப்டன் அப்புறம் லெப்டினென்ட் ஆகிடுவார்!

இன்பாக்ஸ்

 இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கவே இல்லை. அதற்குள் சோனாக்ஷி சின்ஹாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. சோனாக்ஷி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் 'ஹசீனா’. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் தங்கைதான் ஹசீனா. தாவூத் மும்பையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, தாவூத்தின் மூளையாக, மும்பையின் ராணியாக இருந்தவராம் ஹசீனா. பாலிவுட் கி ராணி!  

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 இயற்பியல் ஜாம்பவான்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் ஆகியோரின் ஐ.க்யூ புள்ளிகள் 160. ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி நிக்கோலேவின் ஐ.க்யூ 162.  'எந்தப் புத்தகம் வாசித்தாலும் அதில் இருக்கும் தவறுகளைக் கண்டுபிடிப்பதே என் வழக்கம். பள்ளியில் தரும் ஹோம்வொர்க்குகள் ஏன் போதவில்லை என என் ஐ.க்யூ ரிசல்ட் பார்த்த பிறகுதான் தெரிகிறது’ எனச் சிரிக்கிறாள் நிக்கோலே. சூப்பர் சுட்டி!

இன்பாக்ஸ்

 'ஆப்பிள் போன்’ மட்டும் அல்ல... அது தொடர்பான எல்லாமே காஸ்ட்லிதான். ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக்கின் பாதுகாப்புக்கு ஒரு வருடத்துக்கு 4.46 கோடி ரூபாய் செலவிடுகிறது ஆப்பிள் நிறுவனம். மருத்துவக் காப்பீடு, ஓய்வுக் காப்பீடு, பாதுகாப்புச் செலவு என எல்லாம் இதில் அடக்கம். 30 ஆயிரம் ரூபாய் மொபைலுக்கான கவரே 2,000 ரூபாய்க்கு விக்கிற கம்பெனி... இது சகஜம்தானே!

இன்பாக்ஸ்

 உலகில் அதிக சம்பளம் வாங்கும் சினிமா ஹீரோ... ஹாலிவுட்டின் ராபர்ட் டவுனி ஜூனியர். 2014-ம் ஆண்டில் சூப்பர்ஹிட் 'அவெஞ்சர்ஸ்’ பட ஹீரோ ராபர்ட், கடந்த வருடம் சம்பாதித்த தொகை மட்டும் 80 மில்லியன் டாலர். பட்டியலின் ஆச்சர்யம்... டாப் 10 இடங்களுக்குள் மூன்று இந்தியர்கள். ஏழாவது இடத்தை அமிதாப்பும் சல்மானும் பகிர்ந்துகொள்ள, ஒன்பதாவது இடம் அக்‌ஷய் குமாருக்கு. நம்ம ஹீரோக்கள் அடக்கித்தானே வாசிப்பாங்க!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

'ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்’ என்பது அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு விளையாட்டுத் தொடர். லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸில், 173 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார்கள் இந்திய வீரர்கள். 275 இந்திய வீரர்கள் 47 தங்கம், 54 வெள்ளி, 72 வெண்கலம் என பதக்க வேட்டையாடி இருக்கிறார்கள். 'இது இந்தியாவின் பெருமை’ என மோடி ட்வீட்ட, பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறது இந்தியக் குழு. ஜெய்ஹோ!

இன்பாக்ஸ்

 விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துக்கு சினிமா காய்ச்சல் உச்சத்தில் இருக்கிறது. லண்டன் சென்று நடிப்புப் பயிற்சி பெற்று வந்த சூட்டோடு இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். முதல் படத்துக்குப் பெயரே வைக்காத நிலையில், இரண்டாவது படத்துக்கு 'ஹோம்கம்மிங்’ எனப் பெயர் வைத்துள்ளனர். 'நம்பிக்கைதானே எல்லாம். எனது சிறிய முயற்சிகள், பெரிய வெற்றிகளை நோக்கி அழைத்துச்செல்லும் என நம்புகிறேன்’ என்கிறார் சித்தார்த். எத்தனை நாள்தான் ஹீரோக்களுக்கு ஃப்ரெண்டாவே இருக்கிறதுனு கிளம்பிட்டார்போல!  

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

வாட்ஸ்அப் வைரல், 'அஹல்யா’ குறும்படம் என வாரம் ஒரு டிரெண்டிங் அடிக்கும் ராதிகா ஆப்தேவின் இந்த வார சென்சேஷன்... ரஜினி ஹீரோயின்! பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடி ராதிகா. 'ரஜினிகூட நடிப்பேன்னு நினைச்சே பார்க்கலை. இப்போ இந்தச் செய்தியை நம்பவே எனக்குக் கொஞ்ச நாள் ஆகும். அப்புறம்தான் அந்தச் சந்தோஷத்தையே அனுபவிக்கணும்’ என மகிழ்மொழிகிறார் ராதிகா ஆப்தே. ர, ர, ரா இணைந்து கலக்கும்...

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

 'நேரம்’, 'பிரேமம்’ படங்களின் இயக்குநர்  அல்ஃபோன்ஸ் புத்தரன் வீட்ல விசேஷங்க. சாருக்கு கல்யாணம். படத் தயாரிப்பாளர் மகள் அலீனாவைத் திருமணம் செய்யவிருக்கிறார். 'ஆமாஜி... காதல் கல்யாணம்தான். 'சில வருட நட்பு, காதலானது. இப்போது இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணமாக இருக்கிறது’ எனப் பூரிக்கிறார் காதல் ஸ்பெஷல் இயக்குநர். இனி முழு நேரமும் பிரேமம்தான்!

இன்பாக்ஸ்

 'மேக்சிம்’ பத்திரிகையின் அட்டைப்படத்தை அட்டகாச அழகிகள் மட்டுமே அலங்கரிப்பார்கள். அதைப் புரட்டிப்போட்டிருக்கிறார் இட்ரிஸ் எல்பா.  வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 'மேக்சிம்’ அட்டைப்படத்தில் சோலோவாக இடம்பெற்ற முதல் ஆண் என்ற பெருமையைத் தட்டியிருக்கிறார் நடிகர் இட்ரிஸ். ' 'மண்டேலா’ படத்தில் நடித்தது முதல் உலகில் எல்லோருமே என் மேல் அன்பு செலுத்துகின்றனர். ரசிகர்கள் அடுத்த 'ஜேம்ஸ்பாண்டு’ என்கிறார்கள். எல்லோரின் அன்புக்கும் நன்றி’ என நெகிழ்கிறார் இட்ரிஸ். அவ்ளோ நல்லவய்ங்களா பாஸ் அந்த வாசகர்கள்!