வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (29/11/2017)

கடைசி தொடர்பு:10:58 (29/11/2017)

`பெரு நிறுவனங்களின் சோதனை எலிகளா நாம்?' - மெசேஜ் சொல்லும் அனிமேஷன் குறும்படம்!

யூடியூப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்கள் அனைத்தும் ஷார்ட் ஃபிலிம், ஷார்ட் ஃபிலிம் சார்ந்த இடங்களாகவே காட்சியளித்துக்குறும்படம்கொண்டிருக்கும் காலம் இது. ஒரு கலைவடிவம் எல்லா மக்களிடமும் எளிதாகச் சென்று அடைவதும், மக்களும் அதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள எத்தனிப்பதும் நல்ல தொடக்கம்தான். ஆனால், அந்தக் கலைவடிவத்துக்குரிய பொறுப்பு உணர்வோடு அணுகுவதும் உள்ளடக்க மற்றும் வடிவரீதியாக அந்தப் படைப்பை வெளிக்கொணர்வதும் முக்கியமான ஒன்று.

ஹாலிவுட்டில் திரைப்படங்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் குறும்படங்களுக்கும் கிடைக்கிறது. உலகெங்கும் பல்வேறு திரைப்பட விழாக்களில் குறும்படங்களும் திரையிடப்படுகின்றன. இப்படி இந்தத் தலைமுறையில் விஸ்வரூப வளர்ச்சி எடுத்துள்ளது குறும்படம். 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் கட்ஸ், அனிமேஷன் குறும்படங்களை தன்னுடைய களமாக்கிக்கொண்டவர். அடிப்படையில் ஓவியரான அவர், தன் படைப்புகளின் வழியே நவீன வளர்ச்சியடைந்த உலகத்தின் மீது தன் விமர்சனங்களை முன்வைக்கிறார். வளர்ச்சி என்ற பெயரில் நாம் எவ்வாறு நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையாகியுள்ளோம் என்ற பார்வையை, தன் படைப்புகளின் வழியே முன்வைப்பவர். இந்த உலகில் மனிதர்கள் தொலைத்துவிட்ட மனிதத்தை, சற்று கவனமாகத் தேடச் சொல்பவர்.

சமீபத்தில் தனது `Happiness' என்ற அனிமேஷன் குறும்படத்தை வெளியிட்டார். வெளியிட்ட மூன்றே நாளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ள அந்தக் குறும்படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்பதைப் பார்ப்போம். 

குறும்படம்

வாழ்வை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என அனுதினமும் ஓடிக்கொண்டிருக்கும் நாம், மகிழ்ச்சியை அடைந்துவிட்டோமா என்பதுதான்  குறும்படத்தின் ஒன்லைன். எலி ஒன்று மெதுவாக ஓட ஆரம்பித்து, தன்னைப் போன்ற பல லட்சக்கணக்கான எலிகள் ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தில் சேர்ந்து வேகமாக ஓட ஆரம்பிப்பதோடு தொடங்குகிறது படம். நகரின் மால்களின் பதாகைகைள், திரையரங்கில் ஓடும் திரைப்படம், அங்காடிகளில் உள்ள பொருள்கள் என அனைத்திலுமே `Happines'  என்ற வார்த்தைகளே பொறிக்கப்பட்டிருக்கும். அலைந்துகொண்டே இருக்கும் எலிகள் `மெகா சேல்' ஒன்று வரும்போது சக எலிகளையும் கடித்துக் குதறி களேபரம் செய்து பொருள்களை வாங்கிச் செல்லும். களேபரங்கள் முடிந்து தனியாக ஒரு எலி மகிழ்ச்சியைத் தேடிக் கிளம்பி, மீண்டும் அல்லல்பட்டு ரூபாய் நோட்டைப் பிடிக்கும்போது எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு டைப் அடிக்கத் தொடங்கிவிடும். அங்கு அந்த எலியைப் போலவே பல லட்சம் எலிகள் பொறியில் மாட்டி `டைப்' அடித்துக்கொண்டிருக்கும். இந்த உலகில் மனிதர்கள் முழுக்கவே பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்களையும் மருந்துகளையும் உபயோகப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் `சோதனை' எலிகள்தான் என்பதை குறியீட்டில் கூறியுள்ளார் படத்தின் இயக்குநர்.

`வாழ்க்கையில நிம்மதியே இல்லை' என்ற சொல்லாடலை நாம் அனுதினமும் பலமுறை கடந்திருப்போம். நாமோ அல்லது நம்மைச் சுற்றி உள்ளவர்களோ, நம் அலுவலக நண்பர்களோ யாராவது ஒருவரின் வழியே இந்த வார்த்தைகளை கடந்து வந்திருப்போம். நல்ல வேலை, குடும்பம், நண்பர்கள் சூழ் கட்டமைப்பில் வாழ்ந்தபோதும் ஏதோ ஓர் இயந்திர மனிதனாகவே வாழ்வது போன்ற உணர்வு எழுவதை நம்மால் தவிர்க்க முடியாது. அதிகாலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை பரபரப்பாகவே நாம் செயல்படுகிறோம். சிக்னலில் காத்திருந்து பச்சை விளக்கு எரிந்ததும் விரையும் வாகனங்களைப்போல சாப்பிடுவது, குழந்தையைக்  கொஞ்சுவது, நண்பர்களுடன் பேசுவது என அனைத்தையும் டைம் டேபிள் போட்டு செய்வதைப்போல செய்துகொண்டிருப்பதை நாம் உணர்ந்திருப்போம். பெரிதாக வேறு வேலையையும் செய்ததாக நமக்கு ஞாபகமிருக்காது. சுற்றிவளைத்துப் பார்த்தால் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதைத் தாண்டி நம் வாழ்வில் நாம் எதைப் பெற்றோம் என முதுமையில்  சுய விமர்சனத்துக்குள்ளாவோம். இதைத்தான் இந்தக் குறும்படம் இன்னும் விரிவாகப் பேசுகிறது.


டிரெண்டிங் @ விகடன்