வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (02/12/2017)

கடைசி தொடர்பு:15:54 (02/12/2017)

உங்க காரை எப்பவும் புதுசா வெச்சுக்க ஐந்து டிப்ஸ்!  (Sponsored Content)

car pop out

இந்த டிப்ஸை உங்களுக்கு அளிப்பது: Ceramic Pro, Chennai.

‘பண்ணையாரும் பத்மினியும்’னு ஒரு படம். அதுல பத்மினி கார்தான் படத்தோட ஹீரோ. அதுல வர்ற பண்ணையாரும் சரி, காரோட டிரைவரும் சரி. காரை கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பாங்க. பொதுவா, நாம எல்லாருமே அப்படித்தான். நம்ம காரை வீட்டுல ஓர் உறுப்பினர் போலதான் பார்த்துப்போம். காருக்கு ஏதாவது அடிபட்டாலோ, கொஞ்சமா பெயின்ட் போனாலோ பதறிப் போயிடுவோம். உங்க காரை பளபளப்பா, எப்பவும் புதுசு போன்ற தோற்றத்துடன் வெச்சுக்க, பத்திரமா பாதுகாக்க சில டிப்ஸ்...

காரை நிறுத்தும்போது...

காரை பார்க்கிங் செய்யும்போது அது ‘நோ பார்க்கிங்’ இல்லைன்னு உறுதி செஞ்ச பிறகு நிறுத்துங்க. பக்கத்துல கார் எதுவும் இருந்தா, போதிய இடம்விட்டு நிறுத்தணும். கொஞ்சம் நடந்தாலும் பரவாயில்லை. பிரச்னை எதுவும் இல்லாத இடமா தேர்ந்தெடுங்க. ஷாப்பிங் கார்ட், குப்பைத் தொட்டி, கம்பி வேலி... இதெல்லாம் இருந்தா, காரைக் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா தள்ளி நிறுத்துங்க.

காரை ஓட்டும்போது...

எப்போதும், உங்க காரை சுத்தி போதுமான இடம்விட்டு ஓட்டுங்க. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் அல்லது நகரும் வாகனங்களுக்கு அருகே செல்லும்போது மிகுந்த கவனத்துடன் செல்லவும். தாழ்ந்து நிற்கும் மரக்கிளைகளைக் கவனத்தில் கொள்ளவும். ஆடு, மாடுகள் ரோட்டைக் கடந்தால், பொறுமையாக நின்று கடந்து செல்லுங்கள். 

கார் வாஷ் செய்யும்போது..

உங்க காரை முடிந்தவரை கைகளால் கழுவுங்கள் (ஆட்டோமேட்டிக் கார் வாஷ் செய்வதைத் தவிர்க்கவும்). கழுவும்போது மிகுந்த கவனத்துடனும், சுத்தமான துணியைக்கொண்டும் சுத்தம் செய்யுங்க. காரில் மேற்பகுதியில் இருக்கும் சிறு கல் அல்லது தூசுத் துகள்கள் பெயின்ட்டை உதிரச் செய்யலாம். முதலில் காரின் மீது படிந்திருக்கும் அழுக்கைச் சுத்தம் செய்துட்டு, பின் காரை வாஷ் செய்யுங்க. காரை சுத்தம் செய்ய ஈரமான துணியையே பயன்படுத்துங்க. 

காரை நிறுத்தி வைத்திருக்கும்போது...

உங்கள் வசதிக்காக, காரின் மீது அல்லது முன்புறத்தில், எந்தப் பொருள்களை வைப்பதையும் தவிருங்க. காரின் மீது நீங்க அமர்வதோ, உங்கள் குழந்தைகளை அமர்த்தி வைப்பதோ கூடாது. 

இது மட்டும் போதுமா?

என்னதான் பார்த்து பார்த்து வெச்சிருந்தாலும் பெயின்ட்டின் நிறம் சூரியஒளி, மழை, பனி, புற ஊதாக் கதிர்கள், தொழிற்சாலை மற்றும் இயற்கை மாசுப் பொருள்களின் தாக்குதல்களால், அமிலங்கள் அல்கலைன்களின் அரிப்பினாலும் மேற்புற பூச்சு பாதிக்கப்படும். இதைத் தடுக்க பெயின்ட் கோட்டிங்கின் மீது செராமிக் ப்ரோ (Ceramic Pro) கோட்டிங் அடிப்பது அவசியம். இந்தப் பூச்சு UV கதிர்களால் பெயின்ட்டின் நிறம் மங்காமல் பாதுகாக்குது. உங்க வாகனத்தைப் பொலிவுடன் வெச்சுக்க  உதவுது. அழுக்குகள் எளிதில் தங்கவிடாமல் காக்குது. அதனால, காரை சுத்தம் செய்றதும் ரொம்ப ஈஸி. மொத்தத்தில், தினம் தினம் புது கார் ஓட்டுகிற உணர்வைக் கொடுக்குது.

காரை எப்பவும் ஸ்டைலா, பளபளப்பா வெச்சுக்கங்க!

இந்த டிப்ஸை உங்களுக்கு அளிப்பது: Ceramic Pro, Chennai.

நீங்க எப்படி பீல் பண்றீங்க