Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷர்ட், டீ-ஷர்ட்டுக்கு எது மேட்ச்...? ஆண்களுக்கான ஃபேஷன் வழிகாட்டி!

Chennai: 

பெண்களிடம் 100 உடைகள் இருந்தாலும் போதாது. ஆனால், ஆண்களிடம் ஒரு ஜீன் நாலு ஷர்ட் இருந்தாபோதும், ஒரு மாசத்த ஈஸியா ஓட்டிருவாங்க. அப்படிப்பட்ட பிசி பாய்ஸ்களுக்காகவே 'சலவையில்லாத ஜீன்ஸ்', 'டபுள் சைட் ஷர்ட் (Double Side Shirt)' உள்ளிட்டப் பல வகையான ஃபேஷன் ஆடைகள் சந்தையில் இறங்கியுள்ளது. ஆடைகள் மட்டுமன்றி, காலணிகள், ஹேர் கலரிங் (Hair Colouring), டாட்டூ போன்றவைகளும் இந்தக் காலத்து இளைஞர்களால் அதிகம் கவரப்பட்டு வருகின்றது. கல்லூரி மற்றும் பணி செல்லும் ஆண்களுக்கான தற்போதைய ட்ரெண்ட் லிஸ்ட் இதோ.

ஃபேஷன்


நீலம்-வெள்ளை காம்போ

எத்தனை நிறங்கள் இருந்தாலும், வெள்ளை நிறம் என்றைக்குமே கிளாஸ். நீல நிற ஜீன்ஸ்களுக்கு பக்கா ஜோடி இந்த வெள்ளை நிற ஷர்ட் மற்றும் டீ-ஷர்ட். கல்லூரி, அலுவலகம், சுற்றுலாதலம் முதலிய எல்லா இடங்களுக்கும் இந்த காம்போ டாப். அலுவலகத்துக்குச் செல்லும்போது வெள்ளைச் சட்டையுடன் நீல நிற பேன்ட், ப்ரவுன் லெதர் ஷூ, பெல்ட் அணிந்து செல்லலாம். கல்லூரி மற்றும் சுற்றுலாவுக்கு வெள்ளை நிற கேன்வாஸ், ஸ்னீக்கர்ஸ் உள்ளிட்ட ஷூக்கள் பெஸ்ட் சாய்ஸ். கைக்கடிகாரம், கண்ணாடி இருந்தால் இன்னும் சிறப்பு.

 ஃபேஷன் காம்போ


கறுப்பின் அழகு

வெண்மையைப்போல் கறுப்பும் என்றுமே மாஸ்தான். ஆடை முதல் காலணி வரை, அதிகபட்ச ஆண்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் கறுப்பு. ஷர்ட், டீ-ஷர்ட், குர்த்தா, சூட் போன்றவற்றுக்கு க்ளாஸிக் டச் கொடுப்பது கறுப்பு நிறமே. கறுநிற ஷர்ட்டுடன் காக்கி அல்லது சாம்பல் நிற பேன்ட், ப்ரவுன் அல்லது கறுப்பு பெல்ட் மற்றும் லெதர் ஷூ அணிந்தால், எடுப்பாக இருக்கும். இது அலுவலகத்துக்கு ஏற்ற ஸ்டைலிஷ் உடை.

கல்லூரிகளுக்கு கறுப்பு நிற டீ-ஷர்ட்டுடன் ஜீன்ஸ் மற்றும் ஸ்னீக்கரை மேட்ச் செய்து மாடர்ன் தோற்றத்தைப் பெறலாம். கறுப்பு கைக்கடிகாரம், ஃபேன்சி பேண்ட் (Fancy Band), கூலர்ஸ் ஆகியவை கூடுதல் அழகு.

கறுப்பு ஃபேஷன்


டீ-ஷர்ட் அண்ட் ஓபன் ஷர்ட் காம்போ
கல்லூரி செல்லும் ஆண்களுக்கென உருவான ஸ்டைல்தான் இந்த டீ-ஷர்ட் அண்ட் ஓபன் ஷர்ட் காம்போ. ப்ளெய்ன் டீ-ஷர்ட்டுடன் கட்டமிட்ட ஓபன் ஷர்ட் ஸ்மார்ட்டான இணைப்பு. அதே ப்ளெய்ன் டீ-ஷர்ட்டுடன் டெனிம் ஜாக்கெட்டுகளை இணைத்து புதுவிதமான தோற்றத்தைப் பெறலாம். இவ்வகை உடையுடன் ஸ்னீக்கர், கைக்கடிகாரம், கண்ணாடி போன்றவற்றை அணிந்து,  'ஃபேஷன் ஐகான்' ஆக ட்ரை பண்ணலாம். ஒரு நாள் ஷர்ட், மற்றொரு நாள் டீ-ஷர்ட் என்று ஒரே வகையான உடைகளை உடுத்துபவர்கள் இப்படியும் முயற்சி செய்துபார்க்கலாம்.

ஃபேஷன் ஷர்ட்


பிரின்ட்டெட் அண்ட் செக்டு (Checked) ஷர்ட் :
ப்ளெய்ன் அல்லது சாலிட் வகை சட்டைகள் ஸ்மார்ட்டான தோற்றத்தைத் தந்தாலும், பிரின்ட்டெட் மற்றும் செக்டு வகையான சட்டைகளுக்கு கொடுக்கப்படும் வரவேற்பே தனி. அலுவலகம், கல்லூரி என எல்லா இடங்களுக்கும் ஏற்றவாறு வடிவமைத்த இந்த உடைகள் 300 ரூபாய் முதல் சந்தையில் கிடைக்கும். இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் பிடித்ததுபோல், பல வண்ணங்களில், தனிப்பட்ட டிசைன்களில் ஆடைகளை வடிவமைத்திருக்கின்றனர். இதற்கு இணையாக ஃபார்மல் பேன்ட் முதல் ஜீன்ஸ், ஷார்ட்ஸ் வரை அணியலாம். 

பிரிண்டெட் அண்ட் செக்கெட் ஃபேஷன்


இதோடு டார்ன்ட் ஜீன்ஸ் (Torned Jeans - ஜீன்ஸ் பேன்ட்களில் ஆங்காங்கே கிழிந்த டிசைன்), செக்கெட் ஷார்ட்ஸ் (Checked Shorts), பூட்ஸ் (ஒரு வகையான காலணி) ஆகியவைகளும் உள்ளடங்கும். அனைத்தும் கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் ஆண்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. விலையும் மிகக் குறைவு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement