Published:Updated:

சல்மான் குர்ஷித்திற்கு எதிராக போராட்டம்: கெஜ்ரிவால் அமைப்புக்கு அனுமதி!

விகடன் விமர்சனக்குழு

பரூக்காபாத்: அறக்கட்டளை நிதி முறைகேடு புகாரில் சிக்கிய மத்திய சட்டத் துறை  அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சொந்த மாவட்டத்தில்,'ஊழலுக்கு எதிரான இந்தியா'  அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளையில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கெஜ்ரிவால்  தலைமையிலான 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பு குற்றம்சாட்டியது. மேலும்  இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லியில் கெஜ்ரிவால்  தலைமையில் போராட்டம் நடந்தது.

##~~##
பின்னர் குர்ஷித்தின் சொந்த மாவட்டமான உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில்  நவம்பர் 1-ம் தேதி முதல் போராட்டம் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்  அவர்களின் போராட்டத்திறகு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து இன்று மாவட்ட நீதிமன்ற அலுவலகத்தின் முன்பு அந்த அமைப்பினர்  போராட்டம் நடத்தினர்.அப்போது நவம்பர் 1-ம் தேதி குர்ஷித்துக்கு எதிராக போராட்டம்  நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.அதன்பின்னர்  போராட்டத்திற்கு மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார்.