Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• பாலிவுட் மீம் மேக்கர்களின் தற்போதைய ஹாட் மாடல் அமீர் கான். கங்கணா ரனாவத்தின் 'கட்டி பட்டி’ படம் ப்ரிவ்யூ பார்த்துவிட்டு, கண்களைத் துடைத்துக்கொண்டே வெளியே வந்தார் அமீர். அந்தப் புகைப்படம் வைரல் ஆக, 'இவருக்கு இதே வேலையாப்போச்சு’ என மீம்ஸ் கிரியேட்டர்கள் களத்தில் குதித்தனர். 'மொதல்ல இவர் அழறார்... அப்புறம் படம் பார்த்து நாம அழணும்’, 'அமீர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 'last crying at ..'என அன்லிமிட்டெட் ட்ரோலிங்கில் இறங்கிவிட்டார்கள் நெட்டிசன்கள். கொஞ்சம் ஈவுஇரக்கம் காட்டுங்க பாஸ்! 

இன்பாக்ஸ்

• ஹாலிவுட் ஹீரோயின்கள், அங்கே ஹீரோக்களுக்கே டஃப் ஃபைட் கொடுப்பது உண்டு. 'இப்போ யாருப்பா நம்பர் ஒன்?’ என்றால், எல்லா விரல்களும் ஜெனிஃபர் லாரன்ஸ் நோக்கி நீள்கின்றன. பளபள அழகு, பரபர ஆக்‌ஷன் என இரண்டிலும் மிரட்டும் ஜெனிஃபர் கடந்த வருடம் சம்பாதித்தது 52 மில்லியன் டாலர். மில்லியன் டாலர் பேபி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்

• உலகப் பிரபல கிரிக்கெட்டர்கள் ஓய்வுபெறும் வரிசையில், இப்போது சங்ககாரா. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்தான் அவரின் கடைசி மேட்ச். 'என் அணிக்கும் ரசிகர்களுக்கும் நாட்டுக்கும் நன்றி. எனது கடைசி நான்கு இன்னிங்ஸ் விக்கெட்களையும் அஷ்வின் வீழ்த்தினார். ஆனால், எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான பந்துவீச்சாளராக நான் நினைப்பது, இந்தியாவின் ஜாகிர்கான் மற்றும் இங்கிலாந்தின் ஸ்வான் இருவரும்தான். இவர்களால் பலமுறை என் இன்னிங்ஸ் பாதித்தது. ஆனாலும் நான் சந்தோஷமாகவே விளையாடியிருக்கிறேன். கிரிக்கெட் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் பெருமைப்படும் அளவுக்கு சில விஷயங்களைச் செய்திருக்கிறேன்!’ என நெகிழ்கிறார். மிஸ் யூ சங்கா.

• உலகில் 150 கோடி பேருக்கு ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் இருக்கிறதாம். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மாதத்துக்கு ஓரிரு முறைதான் லாக் இன் செய்கிறார்கள். ஆனால், சென்ற வாரம் ஒரே நாளில் 100 கோடி பேர் ஃபேஸ்புக்கில் மேய்ந்திருக்கிறார்கள். 'பில்லியன் டே’ என அதைப் பெருமையாகக் கொண்டாடுகிறது ஃபேஸ்புக். 'ஃபேஸ்புக்கின் வாழ்க்கையில் இது ஒரு மைல்கல். உலகில் ஏழு பேரில் ஒருவர் அன்று ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தினார்கள். இந்த நவீன உலகில் உங்களின் நினைவுகளை, தகவல்களைப் பகிர உங்களின் ஃபேவரிட்டாக நாங்கள் இருப்பதில் பெருமை’ என்கிறார் மார்க் ஸ¨க்கர்பெர்க். லைக்கோ லைக் ஜி!

• நவீன ஏகலைவன் உருவாகியிருக்கிறார். கென்யாவின் ஜூலியஸ் யேகோ உலக தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றவர். அவரைவிட, அவரின் பயிற்சியாளரைப் பார்த்துதான் எல்லோருக்கும் ஆச்சர்யம். காரணம், ஜூலியஸ் ஈட்டி எறிய கற்றுக்கொண்டதே மற்ற வீரர்களின் யூ-டியூப் வீடியோக்கள் பார்த்துதான். 'என் அடுத்த திட்டம், நான் ஈட்டி எறிந்ததை யூ-டியூபில் பார்த்து என் தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான்’ எனச் சிரிக்கிறார் ஜூலியஸ். நெக்ஸ்ட்... செல்ஃபி ஏகலைவன்!

இன்பாக்ஸ்

• திருமண வாழ்க்கைக்கு அசின்  தயார். மைக்ரோமேக்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராகுலுடன் இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவான திருமணம், படங்களால் தள்ளிப்போனது. 'இந்த வருட முடிவில் கல்யாணம் நிச்சயம்’  எனச் சொல்லியிருக்கிறார் அசின். ராகுல் அனுப்பிய மலர்க்கொத்துகளை அசின் இணையத்தில் வெளியிட, 'மைக்ரோமேக்ஸ் போன்ல நிறையப் பிரச்னைகள் வருது. விலை அதிகம். இதை எல்லாம் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க அசின்’ என மெர்சல் ஆக்கிவிட்டார்கள் ரசிகர்கள். 'கல்பனா’வுக்கே கலாய்யா?

• 'ஐ அம் பேக்’ என்கிறார் வின் டீசல். 2002-ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பாம் வெடித்துக் கொண்டாடிய படம் 'XXX’. அதன் இரண்டாம் பாகத்தில் வின் டீசல் நடிக்கவில்லை. 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ போன்ற படங்களில் பிஸியாகிவிட்டார். இப்போது 'XXX - 3’ எடுக்கப்போகிறார்கள். அதில் கேப்டனாக நடிக்க தயாராகிவிட்டார் வின் டீசல். வரணும்... பழைய பன்னீர்செல்வமா வரணும்!

• 'ஓ கே கண்மணி’ தந்த வெற்றியில் மணிரத்னம் அடுத்த படத்துக்கும் துல்கரையே டிக் அடித்திருக்கிறார். நம்ம கார்த்தியையும் துல்கர் சல்மானையும் வைத்து எடுக்கப்போகும் படத்தின் கதை கேங்ஸ்டர் த்ரில்லர். 'மறுபடியும் தளபதியா?’ என ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்ஸைக் கொட்டி யிருக்கிறார்கள். 'பழிவாங்கல் மட்டுமே எதற்கும் தீர்வாகாது’ என்ற தத்துவ மெசேஜ் சொல்லப்போகும் படத்தின் நாயகி, இன்றைய ஹாட் சென்சேஷன் கீர்த்தி சுரேஷ். வி ஆர் வெயிட்டிங்!  

• 'கூல் கேப்டன்’ தோனி என்ன முடிவு எடுத்தாலும் ஒரு லாஜிக் இருக்கும். அவர் 'ஏன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்?’ என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் ரவி சாஸ்திரி. 'டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மூன்று வகைப் போட்டிகளிலும் கேப்டனாக இருப்பதில் இருக்கும் கஷ்டங்களை தோனி உணர்ந்திருந்தார். அதேசமயம் அடுத்த கேப்டனாக கோஹ்லி உருவானதையும், அவர் தலைமை ஏற்க சரியான நேரம் வந்துவிட்டதையும் மனதில் வைத்து அவருக்கு வழிவிட்டார்’ என்கிறார் ரவி சாஸ்திரி. கூல்!

இன்பாக்ஸ்

• டென்னிஸ் ஸ்டார் ஷரபோவா தெரியும்... சுகர்போவா தெரியுமா? சாக்லேட் கேர்ள் மரியா ஷரபோவாவின் சாக்லேட் பிராண்ட்தான் சுகர்போவா. 'உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகளை குழந்தைகள் உண்ணும்போதெல்லாம் வருத்தமாக இருக்கும். சாக்லேட்களில்கூட செயற்கை சர்க்கரை, சாயம் இருக்கின்றன. அப்படி எதுவும் இல்லாமல் ஆரோக்கியமான சாக்லேட்டை 'சுகர்போவா’ தருகிறது. அதையே நானும் விரும்புகிறேன்’ என்கிறார் மரியா. உலகம் முழுவதும் சுற்றி, புதுப்புது கடைகளைத் திறந்துவைக்கிறார் இந்த டென்னிஸ் குயின். காரணம், அது அழகியின் நிறுவனம். எப்ப கண்ணு இங்கிட்டு வர்ற?

• மீண்டும் வின்னர் ஆகியிருக்கிறார் ரன்னர் உசேன் போல்ட். சீனாவில் நடந்த உலகத் தடகளப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில், மூன்றாவது தங்கம் வென்றிருக்கிறார். 29 போட்டிகளாக தோல்வியே காணாத அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினைவிட 0.01 விநாடி முன்பாக எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டார் போல்ட். 'நம்பிக்கையே இல்லாமல்தான் போட்டியில் பங்கெடுத்தேன். 'இந்த மாதிரி பலதடவை உன் வாழ்க்கையில நடந்திருக்கு. நீ எல்லாத்தையும் மீறி ஜெயிச்சிருக்க. தைரியமா போ’னு என் கோச் மில்ஸ் சொன்னார். அவர் சொன்னதைச் செஞ்சேன்’ என அடக்கம் காட்டுகிறார் போல்ட். 5G போல்ட்!