பல்லெரினா முதல் லோஃபர்ஸ் வரை... 2017-ன் ஸ்டைலிஷ் கேஷுவல் காலணி கலெக்க்ஷன்!

உடைகளுக்கு எந்த அளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதே அளவு அக்கறை காலணிகளுக்கும் தருகிறோம். காரணம், ஃப்லாட்ஸ் (Flats) முதல் ஹீல்ஸ் வரை அனைத்திலும் அத்தனை வெரைட்டி. 100 ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரை கொட்டிக்கிடக்கும் காலணிகளைத் தேர்வு செய்யும்போது நிச்சயம் குழப்பம் வரும். ஒவ்வொரு விழாவுக்கும் உடைக்கு ஏற்றதுபோல் அணியும் விதவிதமான காலணிகள் மார்க்கெட்டில் குவிந்துள்ளன. அவற்றில் தினசரி நாம் பயன்படுத்தும் கேஷுவல் காலணிகள் சிலவற்றை பார்ப்போம்.


பல்லெரினா (Ballerina) :

பல்லெரினா காலணி


ஷாப்பிங், சினிமா, பீச், பார்க் போன்ற இடங்களுக்குப் போகும்போது எளிமையான உடைகளைத்தான் தேர்ந்தெடுப்போம். காலணிகளும் அப்படித்தான். அந்தவகையில் தற்போது சந்தையில் அதிக்ம விற்பனையாவது பல்லெரினா (Ballerina) ஷூக்களே. மிகவும் குறைந்த எடை கொண்ட இந்த ஷூ, 'பல்லெட்' எனும் நடனத்திற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. நாளடைவில் அனைவரும் அணியும் கேஷுவல் காலணிகளில் ஓர் அங்கமானது. சாஃப்ட் லெதர், கேன்வாஸ், சாட்டின் போன்ற பொருட்களைக்கொண்டு உருவாக்கப்படுகிறது. ஏராளமான வண்ணம், பிரின்ட், பேட்டர்ன்களில் மார்க்கெட்டில் கிடைக்கும். ஜீன்ஸ், ஸ்கர்ட்ஸ், மிடி உள்ளிட்ட உடைகளுடன் இந்த பல்லெரினா பக்கா மேட்ச்.


ஃப்லிப் ஃப்ளாப்ஸ் :

ஃப்லிப் ஃப்ளாப்ஸ்


1500 கி.மு. காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்து வரும் காலணிதான் ஃப்லிப் ஃப்ளாப்ஸ். தட்டையான சோல் பகுதியைக் கொண்டிருக்கும் இந்த காலணியை, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அணியலாம். முதன்முதலில் எகிப்தியர்களால் இவ்வகை காலணி அணியும் பழக்கம் வந்தது. பிறகு, இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து ஃப்லிப் ஃப்ளாப்ஸ் அனைத்து வர்க்க மக்களால் ஏற்கப்பட்டது. பிளாஸ்டிக், லெதர் போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இதன் விலையும் மிகக் குறைவு. நீச்சல் உடை முதல் ஜீன்ஸ், சல்வார் போன்ற கேஷுவல் உடைகளுக்கும் சரியான ஜோடியாக இருக்கும். ஆண் பெண் இருவருக்கும் வெவ்வேறு கலர் மற்றும் பேட்டர்ன்களில் கிடைக்கும்.


மியூல் :

மியூல்


சாதாரண ஷூக்களின் ஹீல்களைத் தாங்கிக்கொள்ளும் பிற்பகுதி இல்லாமல் வடிவமைக்கும் காலணி தான் மியூல். இவ்வகையான ஷூக்களை முதன்முதலில் பண்டைய ரோமர்கள் பயன்படுத்தியதாக வரலாறு உண்டு. ஆரம்பத்தில் மியூல் படுக்கையறை காலணியாகத்தான் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் அதன் வடிவமைப்பும் பயன்பாடும் மாறியது. பிரபலமான ஓவியங்கள் முதல் பிரபலங்கள் வரை மியூல் காலணிகள் அணிந்திருப்பதை பிரசித்தி பெற்ற கலாசாரங்களின் மூலம் காணலாம். ஃப்லிப் ஃப்ளாப்ஸின் மேம்பட்ட தயாரிப்பான மியூல், அனைத்து வகையான கேஷுவல் உடைகளுக்கும் ஏற்றது.


லோஃபர்ஸ் :

லோஃபர்ஸ்

லேஸ் அல்லது காலணிகளைக் கட்டும் நாடா இல்லாத ஷூக்களை லோஃபர்ஸ் என்று சொல்லலாம். வில்ஸ்மித் மற்றும் ஆர்லான்ஸ்கோயென் என்பவர்களால் இரு வேறுபட்ட லோஃபர்ஸ் ஷூக்கள் டிசைன் செய்யப்பட்டது. ஒன்று சாதாரண உடைகளுக்கு அணியக்கூடியதாகவும் மற்றொன்று லாஞ்ச் சூட் (Lounge Suit) எனும் பண்டிகைக்கால சூட்களுடன் அணியக்கூடியதாகவும் உருவாக்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் லோஃபர்ஸின் தனி சிறப்பு, இதில் எலாஸ்டிக் இருப்பது. இதனால் கால்களை எளிதாக காலணிக்குள் நுழைக்கவும், இறுக்கமாக தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. ஆண் பெண் இருவருக்கும் வெவ்வேறு ஸ்டைல்களில் வரும் இந்த லோஃபர்ஸ், ஜீன்ஸ், ஸ்கர்ட்ஸ் போன்ற உடைகளுடன் பயன்படுத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!