Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• 'இப்போதான் நடந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள அஞ்சு வருஷம் ஓடிருச்சு. எப்படி இத்தனை வருஷம் போனதுனே தெரியலை. தேங்க்ஸ் டு சல்மான் கான் அண்ட் அர்பாஸ் கான்’ எனச் சிரிக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. 'தபாங்’ படம் மூலம் சோனாக்ஷி பாலிவுட்டில் அடியெடுத்துவைத்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதாம். அதற்குத்தான் இந்த மகிழ்ச்சி. ஸ்'மைல்ஸ்’ டு கோ!   

• பாலிவுட் குயின் கங்கணா ரனாவத்தின் பப்ளிசிட்டி மீட்டர் எப்போதும் ஹாட். இப்போது ஓர் அதிரடி ஸ்டேட்மென்ட் விட்டு டிரெண்ட் ஆகியிருக்கிறார். பி கிரேடு படங்களில் நடித்துக்கொண்டிருந்த நான்தான், இன்று இந்தியாவின் நம்பர்-1 நடிகை. என் சினிமா வாழ்க்கை ஒரே இரவில் உச்சம் தொடவில்லை. எனக்கு இப்போது கிடைத்திருக்கும் புகழ் அதிகமானது என்பது எல்லாம் கிடையாது. எல்லாவற்றுக்கும் நான் தகுதியானவள்’ என்கிறார் கங்கணா. நீ கலக்கு செல்லம்!

இன்பாக்ஸ்

•  பரிணீதி சோப்ராவின் நியூ ஸ்லிம் லுக் பார்த்து வாயடைத்துப்போனார்கள் அவரது ரசிகர்கள். அந்த ஆச்சர்யம் தீரும் முன்பே 'இரண்டு ஷர்ட் வாங்கியதற்கு பத்து லட்சம் ஆயிருச்சு’ என ஒரு போட்டோவை அப்லோடினார் பரிணீதி. 'பத்து லட்சமா?’ என கமென்ட்டிலே எல்லோரும் வாய்பிளக்க, 'அவங்க இந்தோனேஷியா போயிருக்காங்க. அங்க பத்து லட்சம்கிறது நமக்கு 4,500 ரூபாய்தான்’ என பின்னர் வந்தது ஒரு விளக்கம். 'லட்ச’ணமான அழகி!  

• 'ஜஸ்ட் மிஸ்’ என்ற கவலையில் இருக்கிறார் செரீனா வில்லியம்ஸ். ஒரே வருடத்தில் உலகின் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றால், அது 'காலண்டர் ஸ்லாம்’. இந்த ஆண்டு மூன்று கிராண்ட் ஸ்லாம்களை வென்றுவிட்ட செரீனா, அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியிலும் வென்றிருந்தால், இந்தச் சாதனையைப் படைத்த நான்காவது வீராங்கனை ஆகியிருப்பார். ஆனால், அரை இறுதியில் இத்தாலி வீராங்கனை வின்சி, செரீனாவை வீழ்த்த... எல்லாம் ஓவர். 'நான் மோசமாக விளையாடினேன் எனக் கூற மாட்டேன். ஆனால், வின்சி என்னைவிட சிறப்பாகச் செயல்பட்டார். அதனால் அவர் தோற்க வாய்ப்பு இல்லாமல்போனது... அவ்வளவுதான்’ என்கிறார் செரீனா. அடுத்த வருஷம் பார்த்துக்கலாம் சிஸ்.

•  இன்ஸ்டாகிராம் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார் அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட். 45.5 மில்லியன் ஃபாலோயர்களுடன் 'நான்தான் கண்ணு டாப்’ எனக் கெத்துக்காட்டினார் கிம் கர்தாஷியான். அவரது ஹிட் ஹாட் புகைப்படங்கள்தான் அத்தனை ஃபாலோயர்கள் தொடரக் காரணம் என அறிந்த டெய்லர், அதே பாணியை தானும் பின்பற்றினார். இப்போது டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு 46 மில்லியன் ஃபாலோயர்கள். 'அடுத்து யாருப்பா?’ எனக் காத்திருக்கிறார்கள் இன்ஸ்டா ரசிகர்கள். இன்ஸ்டாகிராம் தேவதைகள்!

இன்பாக்ஸ்

•  'நீ ரொம்ப ஒல்லியா இருக்கியேம்மா’ என தமிழ் ரசிகர்கள் ஒதுக்கிய ரகுல் ப்ரீத் சிங்தான் இப்போது 'அக்கட பூமியின் அல்லிராணி. தமன்னா, சமந்தா... என எல்லோ ரையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் ரகுல். ரவி தேஜாவுடன் கடைசியாக இவர் நடித்த 'கிக்-2’ படமும் ஹிட். சமந்தா நடிக்கவிருந்த ராம் சரணின் அடுத்த படமும் ரகுல் பாக்கெட்டில். அடுத்து அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர் படங்கள் என குஷியில் இருக்கிறார். சம்பளம் குறைவு, ஹிட் ரேட் அதிகம் என டோலிவுட்டில் அள்ளு கிளப்புது பொண்ணு. ஸ்லிம் செல்லம்!  

இன்பாக்ஸ்

•  விராட் கோஹ்லிக்கு லைக்ஸ் போட்டிருக்கிறார் ஸ்டீவ் வாஹ். 'எனக்கு 16 வயதில் மகன் இருக்கிறான். அவன் யாரைச் சிறந்த ரோல்மாடலாக வைத்துக்கொள்ளலாம் எனக் கேட்டால், என் பதில் விராட் கோஹ்லி. 'அவரைப்போல கிரிக்கெட் விளையாட, பயிற்சி செய்’ என்பேன். எத்தனையோ வீரர்கள் இருந்தாலும், தற்போது சிறந்த பேட்ஸ்மேன் கோஹ்லிதான். சில சமயம் எல்லை மீறிக் கோபப்பட்டாலும்கூட, அவரது விளையாட்டு ஆர்வத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன்’ என்கிறார் ஸ்டீவ். வாரே வாவ்!

•  தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த 'மனம்’ சென்சேஷனல் ஹிட். அதன் பட்டர்ஃப்ளை எஃபெக்ட், மற்ற நடிகர்களுக்கும் தங்கள் குடும்பத்தினருடன் நடிக்க வேண்டும் என ஆசை கிளப்பியது. இப்போது மகேஷ் பாபு தன் தந்தை கிருஷ்ணா, மகன் கௌதமுடன் ஒரே படத்தில் நடிக்க விரும்ப, கதைவேட்டையில் இருக்கிறது மகேஷ் பாபு குடும்பம். சூர்யா, கார்த்தி... கேட்குதா?

•  ஜாக்கி ஷெராஃப் மகள் கிருஷ்ணா ஷெராஃப்தான் பாலிவுட்டின் அடுத்த ஜெனரேஷன் ஹாட் ஸ்டார். தற்போது இன்ஸ்டாகிராமில் கிருஷ்ணா ஷெராஃப் தன் கிளாமர் போட்டோ ஷூட் ஸ்டில்களை வெளியிட, 'செம ஹாட் அண்ட் க்யூட்’ என ஒரு பக்கம் புகழ்ச்சி மழை. 'இயக்குநர்களின் கவனத்தை ஈர்க்குமா?’ எனக் காத்திருக்கிறார் கிருஷ்ணா. என் இனிய டமில் இயக்குநர்களே... யூஸ் பண்ணிக்கோங்கப்பா!

•  'இந்தக் காடு ரொம்ப நீளமானது. இங்க இருக்கிற மரங்கள் எல்லாம் பச்சையானவை’ என, தில் காட்டும் டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ் ரசிகர்களின் செல்ல அங்கிள். சமீபத்தில் 'ரன்னிங் வைல்டு வித் பியர் கிரில்ஸ்’ ஸ்பெஷல் எபிசோடுக்காக இவருடன் ஜோடிபோட்டு காட்டுக்குக் கிளம்பியவர் அமெரிக்க அதிபர் ஒபாமா. மீனைப் பிடித்து, நெருப்பில் கொஞ்சமாகச் சுட்டு ஒபாமாவுக்கு கிரில்ஸ் கொடுக்க 'இட்ஸ் நைஸ்’ எனச் சொல்லி ரசித்து ருசிக்கிறார் ஒபாமா. ஒரு நாள் காட்டுவாசி!