வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (12/12/2017)

கடைசி தொடர்பு:20:24 (12/12/2017)

`பேல் பிங்க்' லெஹெங்கா சோலியில் இளவரசியாக ஜொலித்த அனுஷ்கா #Virushka

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர ஜோடி விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா திருமணம், நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ இத்தாலியில் இனிதே நடைபெற்றது. 29 வயதான விருஷ்கா ஜோடி, இந்து சமய சடங்குகளைப் பின்பற்றி திருமணம் செய்துகொண்டனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விருஷ்காவின் திருமண காணொளியில், வெட்கப்பட்டு மணமேடை ஏறும் அனுஷ்கா, அதை ரசித்தபடியே அனுஷ்காவின் கரம் பிடித்து உதவி புரியும் கோலி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அதுமட்டுமா... மெஹெந்தி, நிச்சயதார்த்தம், ஹல்டி என அனைத்து திருமண நிகழ்வுகளிலும் விருஷ்கா ஜோடி அழகோ அழகு. இந்தியாவின் மிகப் பெரியத் திருமண ஆடை வடிவமைப்பாளரான சப்யாசச்சி முகர்ஜிதான்  (Sabyasachi Mukherjee) அனுஷ்கா மற்றும் விராட்டின் ஆடைகளையும் டிசைன் செய்துள்ளார். மெஹெந்தி முதல் திருமணம் வரை அனைத்து சடங்குகளுக்கும் முகர்ஜியின் படைப்பிலான ஆடைகள் எல்லாமே டாப் கிளாஸ். இவற்றை, 67 ஆடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு 32 நாட்களில் தயார் செய்துள்ளார். அவற்றின் விரிவான விவரங்கள் இதோ

 
மெஹெந்தி உடைகள் :

Anushka Mehendi Dress


மணமக்களின் உறவினர்கள் அனைவரையும் அழைத்து, அனைவருக்கும் கை நிறைய மருதாணியிட்டுக் கொண்டாடுவது தான், வடஇந்திய இந்துத் திருமண நிகழ்வுகளில் ஒன்றான மெஹெந்தி. இதற்கு அனுஷ்கா தேர்ந்தெடுத்த உடை மிகவும் எளிமையாகவும் புதுமையாகவும் இருந்ததது. அனுஷ்காவின் ஃபேவரைட் நிறமான ஹாட் பிங்க்கில் ஆடையை வடிவமைத்துள்ளார் முகர்ஜி. பிங்க், டர்காய்ஸ் மற்றும் ஆரஞ்சு நிறத்தில், 'போஹோ (Boho)' எனப்படும் புதுமையான ஸ்டைலைக் கொண்ட லெஹெங்கா சோலி அனுஷ்கா ஷர்மாவக்கு அவ்வளவு பொருத்தம். இதை மேட்ச் செய்ய காதுகளில் 22 காரட் தங்கத்திலான கம்மல். இதில் இரானியன் டர்காய்ஸ், டர்மலின்ஸ், அன்கட் வைரம் மற்றும் முத்து போன்றவற்றைப் பதித்துள்ளனர். சர்தோசி மற்றும் ப்ரோகேட் வேலைப்பாடுகளுடைய ஜுட்டி (Jutti) காலணிகள் கூடுதல் ப்ளஸ். இவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் விராட்டும் வெள்ளை குர்தா பைஜாமாவுடன் பிங்க் நேரு ஜாக்கெட்டைத் தேர்ந்தெடுத்துள்ளார்.  அனுஷ்கா கை முழுவதும் மருதாணி இருக்க, உள்ளங்கையில் சிறு வட்டமிட்டு க்யூட் போஸ் கொடுக்கும் கோலியின் புகைப்படம் வைரல்.

Virushka


நிச்சயதார்த்த உடைகள் :

கலகலப்பான மெஹெந்தி நிகழ்வைத் தொடர்ந்து, மணமக்கள் இருவரும் 'ரிங் செரிமணி' எனும் நிச்சயதார்த்த விழா, பிரகாசமான ஒளிக்கும் இனிமையான ஒலிக்குமிடையே அரங்கேறியது. இதில் இருவரும், ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவித்து, மணமுடிக்கப் போவதை உறுதிப்படுத்தினர். மின்வெட்டொளிக்கிடையே நடைபெற்ற இந்த விழாவில், அனுஷ்காவின் சாய்ஸ் புடவை. சாதாரணப் புடவை அல்ல, பல முத்துக்கள், சர்தோசி, மர்ரோரி உள்ளிட்ட வேலைப்பாடுகள் நிறைந்த கலக்கல் வெல்வெட் புடவை. மெரூன் நிற புடவைக்கு மேட்சாக, 'பன் (Bun)' சிகை அலங்காரத்தோடு அழகிய ரோஜா செண்டு சூடிருந்தார். 'அன்கட்' வைரம் மற்றும் முத்துக்கள் பதித்த சோக்கர் செட், நெற்றியில் ஐகானிக் மெரூன் வண்ணப் பொட்டு அனுஷ்காவுக்கு கட்சிதமாகப் பொருந்தியிருந்தது. வெள்ளைச் சட்டை, நேவி ப்ளூ ப்ளேசர் செட், கை கடிகாரம், லேஸ்-அப் ஷூ, ஜெல் தடவிய சைடு பார்ட் ஹேர்ஸ்டைல் என கோலியும் ஸ்டைலில் அனுஷ்காவுக்கு ஈடுகொடுத்தார். 

Virushka


ஹல்தி உடைகள் :
உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி, தூய்மையான மஞ்சளைக் குழைத்து, மணமக்கள் உடம்பு முழுக்கப் பூசுவதே 'ஹல்தி' நிகழ்வு. இது திருமணநாள் அன்று அதிகாலை பின்பற்றக்கூடிய சடங்கு. இதில் விராட் சாதாரண மஞ்சள் நிற குர்தா, வெள்ளை பைஜாமா அணிந்திருந்தார். உறவினர்கள் மஞ்சள் பூசுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருந்தார் கோலி. அடுத்து, மணமேடை ஏறத் தயாராகிக் கொண்டிருந்தனர் விருஷ்கா ஜோடி.

Virushka


திருமண உடைகள் :

Virushka


அனுஷ்காவின் திருமண உடை 'பேல் பிங்க்' லெஹெங்கா சோலி. முத்து, போலி மணிகள் மற்றும் வெள்ளி-தங்க மெட்டல் நுல்களாலான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த இந்த உடை அனுஷ்காவுக்கு பக்கா கிளாசிக் டச். மேலும், பேல் பிங்க் ஸ்பைனல், அன்கட் டைமண்ட், பரோக் முத்து போன்றவற்றைக்கொண்டு முகர்ஜியின் வடிவமைப்பிலான சொக்கர், நெக்லஸ், சுட்டி, வளையல், ஜிமிக்கி, மூக்குத்தி ஆகியவை அனுஷ்காவுக்கு இளவரசி தோற்றத்தைக் கொடுத்தது. ஐவரி நிறத்திலான பட்டு ஷெர்வானிதான் கோலியின் வெட்டிங் காஸ்ட்யூம். வின்டேஜ் பனாரசி பேட்டர்னுடன் கோட்டா (Gota) வேலைப்பாடுகளைக்கொண்ட இந்த ஷெர்வானிக்கு மேட்ச் ரோஸ் பட்டு கோட்டா தலைப்பாகை. அடர்த்தியான செந்தூரம் இட்டு, பார்க்க இளவரசன் கோலி போல் இருந்தார்.

Virushka


முன்னறிவிப்பு ஏதுமின்றி ரகசியமாக மணமுடித்த விருஷ்கா ஜோடியின் வரவேற்பு விழா, உறவினர்களுக்காக டிசம்பர் 21 அன்றும், திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை நண்பர்களுக்காக டிசம்பர் 26 அன்றும், டெல்லியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலியில் மணமுடித்த இவர்களுக்கு இந்திய திரைதுறைப் பிரபலங்கள் பலர், சமூக வலைதளங்கள் மூலம் தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்