உயரப் பறந்திட உதவிடும் கல்வி! | Education that can make you fly (Sponsored Content)

வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (14/12/2017)

கடைசி தொடர்பு:11:25 (19/12/2017)

உயரப் பறந்திட உதவிடும் கல்வி!

மருத்துவத்துக்கு ‘நீட்’ தேர்வு, இன்ஜினீயரிங் படிப்புக்கு ஒரு நுழைவுத் தேர்வு என கடினமான தேர்வு முறைகளைக் கடந்து, மெடிக்கல் அல்லது இன்ஜினீயரிங் படிப்பைப் படித்துவிட்டு நல்ல வேலைக்காகக் காத்திருப்போர் ஏராளம். அதற்கு மாற்றாக, இன்றைய இளைஞர்கள் தங்களுடைய வளமான எதிர்காலத்தைச் சிறப்பாகத் தொடங்க, சிறந்த துறையாக ஏவியேஷன் துறை இருக்கிறது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். தொழில்நுட்பம் சார்ந்தும் தொழில்நுட்பம் அல்லாத படிப்புகளும் ஏராளம் இந்தத் துறையில் உள்ளன. ஏவியேஷன் பற்றிய படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தவர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகளும் இருக்கின்றன.

இந்தக் கருத்தரங்கில் இலவசமாகக் கலந்துகொள்ள இங்கே  ‘க்ளிக்’ செய்து உங்கள் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

“ஏவிஸ்” என்றால் லத்தீன் மொழியில் பறவை என்று பொருள். பறவைபோல் பறக்க உதவும் விமானத்தை வடிவமைத்தல், தயாரித்தல், இயக்குதல் போன்றவற்றை கற்றுக்கொடுக்கும் ஏரோநாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தின் செயல்முறை வடிவத்தை ‘ஏவியேஷன்’ என்று அழைப்பார்கள். 

ஏவியேஷன் துறையில், விமானத்தைச் செலுத்த கற்றுக்கொடுக்கும் பைலட் டிரெயினிங், ஏர் ஹோஸ்டஸ் பணியிடங்களுக்கான பயிற்சிகள், பைலட்டுடன் இணைந்து செயல்படும் ப்ளைட் டிஸ்பாட்சர், விமானத்திலிருந்து தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் ரேடியோ டெலிபோன் பயிற்சிகள், பயணம் மற்றும் சுற்றுலா பற்றிய படிப்புகள், விமானம் மற்றும் விமான நிலைய மேலாண்மை பற்றிய படிப்புகள் ஆகியவை கற்றுக்கொடுக்கப்படும். ஏவியேஷன் துறையில் கல்வி கற்றவர்கள் விமான நிறுவனங்களில் மட்டுமல்லாது, விமான நிலையங்கள் மற்றும் கஸ்டமர் கேர் நிறுவனங்களிலும் பணிபுரியலாம். 

 

இன்று விமான சேவை நிறுவனங்கள் பலவற்றிலும் ஏராளமான பணியிடங்கள் உள்ளன. குறிப்பாக ஏவியேஷன் துறையில் தொழில்முறை பட்டதாரிகளுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. மற்ற தொழில்முறை படிப்புகளுடன் ஒப்பிடுகையில் இதற்கு ஆகும் செலவு குறைவே. கல்வி கற்கும்போதே விமானம் ஓட்டுவதற்கும் பயிற்சி பெற முடிவதால், இந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எளிதில் அமைகிறது. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் பெரும்பாலானோர்க்கு, படித்துக்கொண்டிருக்கும்போதே வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.


ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்.
ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்
.

என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க, மாணவர்கள் நம் நாட்டில் பயின்று, உலகம் முழுக்கப் பறந்து, நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்பதே இந்தக் கருத்தரங்கின் உள்நோக்கம்.

ஏவியேஷன் துறை பற்றியும், அதன் பாடப்பிரிவுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள விகடன்.காம் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளது

இந்தக் கருத்தரங்கில் இலவசமாகக் கலந்துகொள்ள இங்கே  ‘கிளிக்’ செய்து உங்கள் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க