வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (13/12/2017)

கடைசி தொடர்பு:20:59 (13/12/2017)

ரொனால்டோவின் அண்டர் கட் ஆர்ட், ஜஸ்டின் பெய்பரின் ஃபோஹாக்... 2017-ன் ஸ்டைலிஷ் ஹேர்ஸ்டைல்!

`என்னதான் வெரைட்டியான டிரெஸ் அணிந்தாலும் ஸ்டைலா தெரியலையே!' என்பது பலரின் மைண்ட்வாய்ஸ். மேலாடை விதவிதமாக உடுத்தியும் மாறாத தோற்றம், லேசாகத் திருத்தம் செய்யப்படும் சிகையலங்காரத்தால் வெளிப்படும். அந்த வகையில், ஹேர் கலரிங், ஸ்ட்ரெயிட்னிங், கர்லிங் போன்றவற்றின் மீது இந்தக் காலத்து இளைஞர்களுக்கு ஆர்வம் எக்கச்சக்கம். அதிலும், தனக்குப் பிடித்த பிரபலங்களின் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு, அவர்களைப்போல் தங்களை மாற்றிக்கொள்ள விரும்பும் டீன்ஸோ ஏராளம். அவர்களுக்காகவே, பிரபலங்கள் சிலரின் சூப்பர் டூப்பர் ஹேர்ஸ்டைல் டீட்டெய்ல்.

டேவிட் பெக்காம் :

டேவிட் பெக்காம் ஹேர்ஸ்டைல்

கால்பந்து வீரரான டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்காம், 19 முறை வெற்றிக்கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டவர். இவரின் விளையாட்டுத் திறமைக்கு மட்டுமல்ல, விதவிதமான ஹேர்ஸ்டைலுக்கும் தீவிர ரசிகர் பட்டாளம் உண்டு. ஒவ்வொரு முறையும் விதவிதமான ஸ்டைல்களில் தோன்றும் பெக்காமின் தாய் சாண்ட்ரா ஜார்ஜினா, சிகையலங்கார நிபுணர். இதனால்தான் என்னவோ டேவிட்டின் ஒவ்வொரு ஹேர்ஸ்டைலும் பலரால் ஈர்க்கிறது. ஷார்ட், லாங் என எல்லா வகையான ஸ்டைல்களிலும் டேவிட் டாப். பஸ்கட் (Buzzcut), மொஹாக் (Mohawk), தி மேன் பன் (The man Bun) போன்ற விதவிதமான ஸ்டைல்களை அறிமுகப்படுத்தியது டேவிட்தான். சலூன்களில் அவரை உதாரணமாகக் காட்டி முடித்திருத்தம் செய்துகொள்ளும் ஆண்கள் பலர்.


பிராட் பிட் :Brad Pitt Hairstyle

பிராட் பிட் என்றாலே நினைவுக்கு வருவது `லாங்' ஹேர்ஸ்டைல்தான். தனf நடிப்பால் மட்டுமல்ல, மிடுக்கான தோற்றத்திலும் ஆண், பெண் அனைவரையும் கட்டிப்போட்டவர். புதுமையான பல ஹேர்ஸ்டைல்களை அறிமுகம் செய்தவர். 90-களின் ஹாலிவுட் நாயகனாக விளங்கிய பொன்னிற சிகை அழகன் பிராட் பிட், பல இளைஞர்களின் கனவு ஹேர்ஸ்டைல்களுக்குச் சொந்தக்காரர். அதில், `ஸ்வீப் பாக் (Sweep Back)' என்பது மீடியம் அளவு சிகைக்கென உருவான ஸ்டைல். இதன் ஸ்பெஷாலிட்டி, சிறிதளவு ஜெல்லை தலையில் தடவி, அனைத்து முடிகளையும் பின்னே தள்ளப்பட்டு, பாதி கலைந்தும் மீதி திருத்தமான அமைப்பையும் கொடுக்கும். இது யூத்களால் அதிகம் வரவேற்கப்பட்ட ஸ்டைல். இதுபோல பல ஹேர்ஸ்டைல்களை உலகுக்கு அறிமுகம் செய்தவர் பிராட் பிட். 

 

ஜஸ்டின் பெய்பர் :
ஷார்ட், லாங், மீடியம் என எந்த வகையாக இருந்தாலும், விதவிதமான ஹேர்கட்டுக்கு பேர்போன பிரபலங்களில் ஒருவர் தான் ஜஸ்டின் பெய்பர். அதிகளவில் ஹேர்ஸ்டைலில் ட்ரெண்ட் செட் செய்தவர். பல இளைஞர்கள் அவரின் கன்டெம்போரரி ஸ்டைலைத்தான் பின்பற்றுகின்றனர். ஹேர்கட் அல்லது ஹேர்ஸ்டைல் என்றாலே டீன்ஸ்களின் மனதில் சட்டெனத் தோன்றுவது பெய்பர்தான். பௌல் கட் (Bowl Cut), பாப் பங்க் (Pop Punk), க்விஃப் (Quiff) போன்ற ஹேர்ஸ்டைல் பெய்பரின் ட்ரேட்மார்க். ஜஸ்டின் பெய்பரின் இந்த ஆண்டின் சூப்பர் கட்டின் பெயர் அன்டர்கட் ப்ரஷ்ட் அப் ஃப்ரிஞ் (UnderCut Brushed Up Fringe). இது அன்டர்கட் மற்றும் ஃபோஹாக் (Fohawk) என இரு வெவ்வேறு ஹேர்கட்டை இணைத்து உருவான புதுமையான மாடல்.

Justin Hairstyle


கிறிஸ்டியானோ ரொனால்டோ :
CR7 உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மட்டுமல்ல, அழகான ஃபேஷன் ஐகானும்தான். தன்னை மெருகேற்றவே அதிக நேரத்தை செலவிடுவார். முக்கியமா ஹேர்ஸ்டைலுக்காக. கிறிஸ்டியானோவின் ஹேர்கட் அனைத்தும் மீடியம்-ஷார்ட் அளவிலானது. தற்போது அதிகம் இளைஞர்கள் செய்துகொள்ளும் அன்டர்கட் ஆர்ட் டிசைனுக்கு இவரே முன்னோடி. வின்ட் ப்லோன் (Wind Blown), வெட் லுக் முதலியவை ரொனால்டோவின் டாப் ஸ்டைல்.  இந்த ஆண்டு அன்டர் கட், ஹார்ட் பார்ட் (Hard Part), கோம்ப் ஓவர் (Comb Over) ஆகிய ஸ்டைல்களை ஒன்றுசேர்த்து முற்றிலும் புதிய தோற்றத்தில் இருக்கிறார் ரொனால்டோ.

Ronaldo Hairstyle


கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் :
'தோர்' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த், நீளமான ஹேர்ஸ்டைலில்தான் அதிகம் காணப்படுவார். இப்பொழுதெல்லாம் பெண்களின் சாய்ஸ் ஷார்ட் ஹேர்ஸ்டைல், ஆண்களின் ஆப்ஷன் லாங் ஹேர்ஸ்டைல் என ட்ரெண்ட் மாறிக்கொண்டு வருகிறது. நீளமான முடி உள்ளவர்கள், விதவிதமான ஸ்டைல்களை முயற்சி செய்து பார்க்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஹேம்ஸ்வொர்த்தின் ஸ்டைல் உதவும். பார்டெட் லாங் ஹேர் (Parted Long Hair) எனப்படும் எளிமையான ஹேர்ஸ்டைல்தான் கிறிஸின் தற்போதைய சாய்ஸ்.

Thor Hairstyle


இதுபோல் நிறைய ட்ரெண்டி ஹேர்ஸ்டைல் வந்துகொண்டே இருக்கிறது. அவையெல்லாம் உலகிலுள்ள பல பிரபலங்கள் மூலம் நம்மையும் வந்து சேர்ந்துவிடுகிறது. நம்ம நாட்டிலும் பிரபலங்கள் பலர், தங்களின் திரைப்படத்துக்காகவும், விளம்பரங்களுக்காகவும் விதவிதமான ஹேர்ஸ்டைலில் தோன்றுவதுண்டு. அந்த வகையில் 'அவள்' திரைப்படத்தில் சித்தார்த்தின் ஸ்டைல் முதலிடத்தில் உள்ளது. `கிளாசிக் சைடு பார்ட் (Classic Side Part) எனும் அவரின் ஹேர்ஸ்டைல், பெரும்பாலான இளைஞர்களின் ஃபேவரைட். மருத்துவருக்கான அத்தனை பண்புகளையும் உள்ளடக்கி, தன் நடிப்பால் கைதட்டல்களைக் குவித்த சித்தார்த்தின் காஸ்டியூம்கள் அனைத்தும் `வாவ்' சொல்லவைக்கும். அதற்கேற்ற வகையில் சிகையலங்காரம் கூடுதல் ப்ளஸ்.

Sidharth Hairstyle


ஆனால், நடைமுறையில் எல்லா ஹீரோக்களும் ரொம்ப சிம்பிள். கிளாசிக் ஸ்டைல்தான் நம்ம ஹீரோக்களின் இன்றைய விருப்பமாக உள்ளது. தோனி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் நம் ஊர் ஃபேஷன் ஐகான்களாக வாழ்ந்தவர்கள்.


டிரெண்டிங் @ விகடன்