Published:Updated:

ஆளில்லா மூங்கில் தெப்பம்... புத்தர் சாயலில் குட்டி சிலை! - ஆச்சர்யத்தில் மீனவர்கள் 

சிதம்பரம் அருகே ஆளில்லா தெப்பம் ஒன்று சிலை மற்றும் பூஜை பொருள்களுடன் கடலில் கரை ஒதுங்கியது அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஆளில்லா மூங்கில் தெப்பம்... புத்தர் சாயலில் குட்டி சிலை! - ஆச்சர்யத்தில் மீனவர்கள் 

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ளே எம்.ஜி.ஆர் திட்டு கடலில் மீனவர்கள் சிலர் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் மூங்கில் வேலைப்பாடுகளுடன்கூடிய அழகிய தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியதை மீனவர்கள் கவனித்துள்ளனர். அருகில் சென்று பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

ஆளில்லா மூங்கில் தெப்பம்... புத்தர் சாயலில் குட்டி சிலை! - ஆச்சர்யத்தில் மீனவர்கள் 

10 அடி அகலம் , 10 அடி நீளமான அழகிய வேலைப்பாடுகளால் ஆன தெப்பம். அந்தத் தெப்பத்தில் ஒன்றரை அடி உயரத்தில் வெண்கல சிலை, வர்ணம் தீட்டப்பட்ட பூஜை தட்டு உள்ளிட்ட பொருள்கள் என அழகு அள்ளியது. அந்தச் சிலை புத்தரின் சாயலை ஒத்திருந்தது. தெப்பத்தைச் சுற்றி வெவ்வேறு வண்ணங்களில் கொடிகள் பறந்துகொண்டிருந்தன. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் தெப்பத்தை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்த சிதம்பரம் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று தெப்பத்தை ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். 
 
அடுத்த கட்டுரைக்கு