Published:Updated:

பிளாஸ்டிக் தேசியக் கொடிக்கு தடை விதிக்க முடிவு?

பிளாஸ்டிக் தேசியக் கொடிக்கு தடை விதிக்க முடிவு?
பிளாஸ்டிக் தேசியக் கொடிக்கு தடை விதிக்க முடிவு?
பிளாஸ்டிக் தேசியக் கொடிக்கு தடை விதிக்க முடிவு?

புதுடெல்லி:பிளாஸ்டிக்கில் தேசியக் கொடியைத் தயாரிப்பதற்குத் தடைவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க இம்முடிவு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.கருத்துகளைத் தெரிவிக்க குறிப்பிட்ட கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மத்திய அரசின் பரிந்துரையை அனைத்து அமைப்புகளும் ஏற்கும்பட்சத்தில், உடனடியாகத் தடைவிதிக்கப்படவுள்ளது.இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாவது: குடியரசு மற்றும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர், சிறிய அளவிலான பிளாஸ்டிக் கொடிகள் தரையில் வீசி எறியப்படுகின்றன. இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் எனவே, இது உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

##~~##
இந்த தடை அமலுக்கு வந்தால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஓரளவு தவிர்க்கப்படும். காகிதங்களில் மட்டுமே சிறிய அளவிலான தேசியக் கொடிகள் தயாரிக்க அனுமதிக்கப்படும்.
அரசியலமைப்பு விதிமுறைகளின் படி, தேசியக் கொடி சேதமடைந்திருந்தால் அதனை உரிய மரியாதையுடன் தனிப்பட்ட இடத்தில் வைத்து எரித்தோ அல்லது வேறு முறைகளிலோ அழிக்க வேண்டும். பொது இடங்களில் தேசியக் கொடியைக் கிழித்தல், எரித்தல் உள்பட எவ்வித அவமதிப்புக்கும் மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.