Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

•  ஐஸ்வர்யா ராயின் நான்கு வயது மகள் ஆராத்யா... கடந்த வார வைரல் செல்லம்! விநாயகர் சதுர்த்திக்குக் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்தபோது, ஆராத்யாவை மொய்த்துக்கொண்டன கேமரா க்ளிக்குகள். 'அம்மாவைவிட பாப்பா கொள்ளை அழகு!’ என குஷி கமென்ட்கள். சுத்திப்போடுங்க! 

இன்பாக்ஸ்

•  உலகம் முழுவதும் மூன்று பில்லியன் மக்கள் ஆங்ரி பேர்ட்ஸ் விளையாடுகிறார்கள். அவர்களைக் குதூகலப்படுத்த பாப் பாடகி ஷகிரா பெயரில் ஒரு 'ஆங்ரி பேர்டை’ விளையாட்டில் சேர்த்திருக்கிறார்கள். அமிதாப், ரஜினி, கமல், ஐஸ்வர்யானு இங்கே பெரிய லிஸ்ட் இருக்குஜி!

•  கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது பிரேசில் அரசு. இந்தச் சூழ்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்தியாக வேண்டும். ஆகவே, 'லண்டன் ஒலிம்பிக் பட்ஜெட்டில் 10 சதவிகிதம் மட்டுமே நாங்கள் செலவு செய்யப்போகிறோம். பிரேசிலின் தற்போதைய நிலைமை அனைவருக்குமே தெரியும். ஆனால், நிகழ்ச்சிகளின் தரத்தில் எந்தச் சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்’ என்கிறது பிரேசில் ஒலிம்பிக் குழு. பட்ஜெட் ஒலிம்பிக்ஸ்!

இன்பாக்ஸ்

•  போட்டோஷூட், ரியாலிட்டி ஷோ, படங்கள் என அள்ளு கிளப்பும் பூனம் பாண்டேவின் அடுத்த அஸ்திரம் மெகா சீரியல். இப்போது இரண்டு ஃபேன்டசி தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 'சினிமா மாதிரி இல்லை. எல்லாமே புதுசா இருக்கு. என் ரசிகர்கள் நிச்சயம் என்னை ஃப்ரெஷ்ஷா பார்ப்பாங்க’ எனச் சிரிக்கிறார் பூனம். ஐடியா... நம்மூர்ல ஒரு சீரியலுக்கு நமீதாவைப் பிடிச்சுப்போடுங்கப்பா!

•  பிரியாணி என்றாலே டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா குஷியாகிவிடுவார். இந்த வருடம் பக்ரீத் பண்டிகைக்கு, ஷாரூக் கான், கஜோல் நடிக்கும் 'தில்வாலே’ படத்தின் மொத்த யூனிட்டுக்கும் பிரியாணி கொடுத்து அனுப்பியிருக்கிறார். ஷாரூக், கஜோலை ஸ்கிரீனில் பார்க்கிறப்ப எல்லாம் நான் சந்தோஷப்படுவேன். அதான் அந்த டீமுக்கு ஒரு சின்ன சந்தோஷ ஷாக்’ என்கிறார் சானியா. பிரியாணி எடு... கொண்டாடு!

•  உலகில் சுறா மீன் தாக்கி உயிர் இழந்தவர்களைவிட, செல்ஃபி எடுக்கும்போது உயிர் இழந்தவர்களே அதிகம் என பகீர் கிளப்புகின்றன புள்ளிவிவரங்கள். பாம்புடன் செல்ஃபி, துப்பாக்கியுடன் செல்ஃபி, வழுக்கி விழுவது, வாகன விபத்துகள்... எனப் பல காரணங்கள். லெட்ஸ் நாட் டேக் டேஞ்சரஸ் செல்ஃபி புள்ள!

இன்பாக்ஸ்

•  'சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் இந்தியா சார்பில், 'பிகே’, 'பாகுபலி’, 'பஜ்ராங்கி பைஜான்’ ஆகிய படங்களில் எது போகும்?’ என எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்க, அறிமுக இயக்குநர்  சைதன்யா தம்ஹானேவின் மராத்திப் படம் 'கோர்ட்’ தேர்வாகியிருக்கிறது. மூத்த கவிஞர் ஒருவர் ஒரு வழக்குக்காக எதிர்கொள்ளும் நீதித் துறை நடைமுறைகளே 'கோர்ட்’ படம். 'இந்தப் படம் உருவாகத் தொடங்கியதில் இருந்தே, ஒவ்வொரு முறையும் நாங்கள் நினைத்ததைவிட சிறப்பான தருணமாக அமைகிறது’ எனச் சிரிக்கிறார் சைதன்யா. ஆஸ்கர் தீர்ப்புல வாய்தா சொல்லிராதீங்க!

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த மங்கள்யான், விண்வெளிக்குள் 'கலம் பதித்து’ ஒரு வருடமாகிவிட்டது. ஆறு மாதங்கள் மட்டுமே அங்கு இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்ததைப் பொய்யாக்கி, இன்றும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது மங்கள்யான். எதிர்பார்த்ததைவிட குறைந்த எரிபொருளையே அது பயன்படுத்துவதால் இது சாத்தியமாகி இருக்கிறதாம். அந்த மெக்கானிசத்தை பைக், காருக்கும் கொடுங்க விஞ்ஞானிகளே!

•  அதிகம் சம்பாதிக்கும் சூப்பர் மாடல்கள் பட்டியலில் முதல் ரேங்க் மட்டும் கடந்த ஒன்பது வருடங்களாக மாறவில்லை. பிரேசிலைச் சேர்ந்த ஜிசெல் பண்ட்சென் விடாப்பிடியாக அந்த இடத்தைத் தக்கவைத்திருக்கிறார். சென்ற ஆண்டு 44 மில்லியன் டாலர் சம்பாதித்திருப்பவர், இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட அட்டைப் படங்களை அலங்கரித்திருக்கிறார். அதில் இருந்து சிறந்த 300 படங்களைத் தொகுத்து ஒரு புத்தகம் தயாரிக்கிறார்களாம். ஒரு புத்தகத்தின் விலை 700 டாலர். அடுத்த வருஷமும் வருமானம் கொட்டும்!

இன்பாக்ஸ்

•  ரன்பீர் கபூரும் தீபிகா படுகோனும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லவ் பேர்ட்ஸ். பிரேக்-அப்புக்குப் பிறகு இருவரும் 'தமாஷா’ என்ற இந்திப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அது தொடர்பான விழாவில் தீபிகா, ரன்பீரை 'நல்லாச் சொன்னீங்க ப்ரோ’ எனப் பாராட்டியிருக்கிறார். 'என்னது... ப்ரோவா?!’ என திக்பிரமையடித்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். அப்போ பிராணநாதா... இப்போ 'ப்ரோ’ணநாதா!

இன்பாக்ஸ்

•  பிரியங்கா சோப்ரா இப்போது சர்வதேசப் பிரபலம்! 'குவான்டிகோ’ என்ற ஆங்கில சீரியலில் நடிக்கிறார் பிரியங்கா. ஒளிபரப்பான நாள் முதலே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிகின்றன. 'அந்தத் தொடரின் நட்சத்திர அடையாளமே பிரியங்காதான். உலக அழகிப் பட்டம் வென்றிருந்தாலும், சீரியலில் எளிமையான தோற்றம், ஆக்ஷன் அமர்க்களம் என இயல்பாகக் கவர்கிறார்’ எனச் சிலாகித்துப் பாராட்டியிருக்கிறது நியூயார்க் டைம்ஸ். சீக்கிரமே தமிழ் டப் பண்ணுங்கப்பா!