இப்படியும் உழைப்பவர்களை கௌரவிக்கலாம்! #ProudVelaikkaran (Sponsored Content)

ஆட்டோ ஓட்டுற அண்ணே, பூ விக்குற அக்கா, இளநீர் விக்கிற பெரியவரு, பேப்பர் போடுற தம்பி, பத்து பேரு சுத்தி நின்னாலும் அசால்ட்டா டீ ஆத்துற டீ மாஸ்டர், ஊர சுத்தமா வச்சுக்க தங்கள அழுக்கா ஆக்கிக்குற துப்புறவு தொழிலாளிங்க... திடீர்னு நாளைக்கே இவங்கல்லாம் அவங்களோட வேலைய செய்யாம போய்ட்டா? நெனச்சேபார்க்கமுடியாது, சத்தியமா ​இந்த ​உலகமே ஸ்தம்பிச்சுபோய்டும்! இப்படி நம்ம சமுதாயம் தினமும் நிக்காம ​இயங்கிகிட்டே இருக்க ஆயிரமாயிரம் காலுங்க அயராம ஓடிக்கிட்டே இருக்குது, இதுதான் மறுக்கமுடியாத நிஜம்!

 

இதுமாதிரி உங்க வீட்டு அக்கம் பக்கத்துல, ஆஃபீஸ் கிட்ட, நீங்க தினமும் பார்க்குற எத்தனையோ 'வேலைக்கார' நண்பர்கள் இருப்பாங்க. அவங்ககிட்ட ஒரு நிமிஷம் மனம்விட்டு பேசி சின்னதா வீடியோ எடுத்து உங்களோட பேஸ்புக், ட்விட்டர் கணக்குல #ProudVelaikkaran அப்டிங்ற ஹேஷ் டேக்கோட பதிவு செய்யுங்க. இது இந்த வேலைக்கார உடன்பிறப்புகளுக்காக நாம செய்யிற சின்ன கௌரவமா இருக்கட்டும். நீங்க செய்யிற வேலையைப் பெருமையா நெனச்சீங்கன்னா, தயங்காம உங்க வேலையைப்பத்தி ஒரு வீடியோ எடுத்து , 'நான் ஒரு #ProudVelaikkaran' ன்னு போஸ்ட் போடுங்க! #ProudVelaikkaran ஹேஷ்டேக் மூலமா இதுபோல எத்தனை பேரோட அன்றாட உழைப்பு நமக்கு அவசியமா இருக்குன்னு இந்த உலகம் தெரிஞ்சுக்கட்டும்.

ஒரு குறிப்பிட்டத் துறையில ஒருத்தர் எல்லாருக்கும் தெரியிற மாதிரி சாதிச்சா, அவரைத் தலையில தூக்கி வச்சு கொண்டாடுறோம், விருது கொடுக்குறோம். உண்மையிலேயே இப்படி சிலர்தான் நம்மளோட பாராட்டுதலுக்கு உரியவங்களா என்ன? இல்லவே இல்ல. சுய விளம்பரமே இல்லாம, செய்யிற வேலைக்கு தகுந்த கூலியத் தவிர வேற எந்தப்பயனையும் எதிர்பார்க்காத, தினசரியா அவங்கவங்க வேலைய சிறப்பா செய்யிற ஒவ்வொரு தொழிலாரும் கண்டிப்பா பாராட்டப்பட வேண்டியவங்கதான்! இவங்களுக்கு நாம மேடையெல்லாம் போட்டு மெடலெல்லாம் கொடுக்கணும்னு அவசியமில்ல, கைமாறா செய்யவேண்டியது இவங்களுக்குன்னு சின்னதா ஒரு அங்கீகாரத்த கொடுக்குறதுதான்! வேர்வை சிந்தி உழைக்கிறவங்கக் கிட்ட 'பெரிய வேலைக்காரன்யா நீ'னு, சொல்லிப்பாருங்க. அத கேக்கும்போது சும்மா ஜிவ்வுன்னு எங்கயிருந்தோ அவங்களுக்கு ஒரு தெம்பு வரும், இந்த ஊக்கத்தைவிட வேறென்ன நாம அவங்களுக்கு கைம்மாறு செய்யமுடியும்?

இதுபோல சிரமப்பட்டு உழைக்கும் வர்க்கத்தோட கதைகள இந்த உலகத்துக்கு சொல்லி, எல்லாரையும் உற்சாகப்படுத்துவோம்! வேலைக்காரன்னு சொல்லிக்கறதுல பெருமைப்படுவோம்!

நீங்க எடுத்த வீடியோவை எங்களோட இந்த '73974 11711' வாட்சாப் எண்ணுக்கும் மறக்காம அனுப்புங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!