Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• இந்தியா - சீனா கூட்டு முயற்சியில் உருவாகும் படம், 'குங்ஃபூ யோகா’. ஜாக்கி சான்தான் ஹீரோ. ஹீரோயினுக்காக பாலிவுட் முழுக்க வலைவீசியதில், வந்த வாய்ப்பைப் பிடித்து ஷூட்டிங்குக்காக துபாய் பறந்துவிட்டார் இலியானா. சண்டைக் காட்சிகளும் கதாநாயகிக்கு உண்டாம். அதற்கு இலியானா நச்செனப் பொருந்துவார் என டிக் அடித்திருக்கிறார் இயக்குநர் ஸ்டான்லி டோங். ஒல்லி பெல்லி இப்போ நிஜ கில்லி! 

இன்பாக்ஸ்

• சிரஞ்சீவியின் 150-வது படம் அதுவா இதுவா என ஆந்திராவே குழப்பத்தில் இருக்க, 'கத்தி’ படத்தின் ரீமேக்கை டிக் அடித்திருக்கிறார் சிரஞ்சீவி. கமர்ஷியலோடு அரசியலும் பேசுவதால், இந்தப் படம் சரியாக இருக்கும் என முடிவுசெய்திருக்கிறார். தமிழில் ஹிட் அடித்த 'கத்தி’யை டோலிவுட்டுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் வி.வி.விநாயக். செல்ஃபி புள்ள இருக்கும்ல?

இன்பாக்ஸ்

•  வெள்ளித்திரையில் எல்லா சாதனை களையும் உடைத்த 'பாகுபலி’, அடுத்து சின்னத் திரைக்கு ரெடியாகிவிட்டது. தெலுங்கு மா- தொலைக்காட்சியில் அக்டோபர் மாதம் 25-ம் தேதியில் 'பாகுபலி’ ஒளிபரப்பாகிறது என்றதும், விளம்பரப் போட்டிகள் சூடுபிடித்து விட்டன. அனல் பறக்கும் பேரம் முடிந்து, 10 நொடி விளம்பரத்துக்கு 2.5 லட்சம் என முடிவாகியிருக்கிறதாம். இதுவரையில் எந்தப் படமும் இந்த அளவுக்குச் சம்பாதித்தது இல்லை என குஷியில் இருக்கிறது மா டி.வி. காளகேயர்கள் பேசுறதுக்கு சப்டைட்டில் போடுவீங்களா ப்ரோ?

•  ஃபேஸ்புக்கின் வெற்றிக்கு இந்தியக் கோயில் ஒன்றைக் கைகாட்டியிருக்கிறார் மார்க் ஸ¨க்கர்பெர்க். 'ஃபேஸ்புக், ஆரம்ப காலங்களில் நிறையத் தடுமாற்றங்களைச் சந்தித்தது. அப்போது ஸ்டீவ் ஜாப்ஸ், இந்தியாவில் ஒரு கோயிலைக் காட்டி, இங்கு சென்று வந்த பிறகுதான் தனது நிறுவனத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூறினார். அதனால் நானும் நைனிடால் அருகே உள்ள, 'கைஞ்சி தாம்’ என்ற அனுமார் ஆசிரமத்தில் இரண்டு நாட்கள் தங்கினேன். பின்னரே ஃபேஸ்புக்கிலும் நிறைய மாற்றங்கள் வந்தன’ என மனம் திறந்திருக்கிறார் மார்க். ஜெய் ஹனுமான்!

இன்பாக்ஸ்

•  ஐக்கிய நாடுகள் அறக்கட்டளையின் உலக பெண்களுக்கான அட்வகேட்டாக நியமிக்கப்பட்டுள்ளார் பாடகி ஜெனிபர் லோபஸ். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள், அகதிகள் முகாம் போன்ற பின்தங்கிய பகுதிகளுக்குச் சென்று பெண்களுக்கு ஊக்கம் தரவேண்டும். 'நான் தாயான பின்புதான் பெண்ணின் முழுமையான கஷ்டங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. முழுமையான சமத்துவம் பெற, இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். அந்தப் பயணத்தில் நானும் பங்குகொள்வது மகிழ்ச்சி’ என்கிறார் ஜெனிபர். சல்யூட்!

•  ஷாரூக் கானின் மகன் ஆர்யன், பாலிவுட்டின் சென்சேஷன் வாரிசு. அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நந்தாவுடன் ஆர்யன் நெருக்கமாக இருந்த வீடியோ, சில மாதங்கள் முன்பு வாட்ஸ்அப் வைரல் ஆனது. இப்போது மீண்டும் இருவரின் செல்ஃபிக்கள் ட்ரெண்டிங். ஷாரூக்கின் நகல் மாதிரியே இருக்கும் ஆர்யனுக்கு பாலிவுட்டில் விசிட்டிங் கார்டு தர பலர் தயாராக இருந்தாலும், முதலில் படிப்பை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்ற தந்தையின் கட்டளைப்படி இருக்கிறார் ஆர்யன். ஒழுங்காப் படி ராசா!

இன்பாக்ஸ்

•  மீண்டும் ஃபார்முக்கு வந்து 500-வது கோலை அடித்து 'ஐ’ம் பேக்’ என்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவரின் வாழ்க்கையை அவர் பெயரிலேயே  டாக்குமென்ட்ரியாகத் தயாரித்திருக்கிறார்கள். நவம்பர் 9-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் ஹிட் அடித்ததில் எக்ஸ்ட்ரா ஸ்மைலிங்கில் இருக்கிறார் ரொனால்டோ. அவர் வாழ்க்கையை டேட்டிங், சர்ச்சை, கொண்டாட்டம் என மட்டுமே பார்ப்பவர்களுக்கு, அவர் இளமையில் பட்ட கஷ்டம், உழைப்பு என அத்தனையையும் எடுத்துச் சொல்லும் படமாக இருக்கும் என்கிறார்கள். வீ ஆர் வெயிட்டிங்.

இன்பாக்ஸ்

•  'மென் இன் பிளாக்’ கதாநாயகன் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் ஏற்கெனவே படம், மாடலிங் என பிஸியாகிவிட்டார். இவர் நடித்த 'கராத்தே கிட்’ ஹிட். தற்போது மகள் வில்லோவும் நியூயார்க்கின் மாடல் சொசைட்டி மேனேஜ்மேன்ட்டில் இணைந்துவிட்டார். இனி முன்னணி நிறுவனங்கள் இதன் மூலம் வில்லோவை மாடலிங் செய்ய அழைக்குமாம். அப்பா, அண்ணன் என இரண்டு பிரபலங்கள் இருக்கும்போது வில்லோவுக்கு என்ன பிரச்னை இருக்கப்போகிறது? செம மாடல் குடும்பம்! 

இன்பாக்ஸ்

•  நாட்டையே உலுக்கிய சிறுமி ஆருஷி தல்வாரின் கொலை வழக்கை அப்படியே படமாக்கி லைக்ஸ் குவித்திருக்கிறது பாலிவுட். மேக்னா குல்சார் இயக்கியிருக்கும் படத்தில் எந்தவிதமான தீர்ப்பையோ, தீர்வையோ சொல்லாமல் வழக்கில் என்ன நடந்ததோ அதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள். உண்மைக்கு மிக நெருக்கமாக இருப்பதால், பாசிட்டிவ் ரிவ்யூக்கள் குவிய, பாக்ஸ் ஆபீஸிலும் படம் பாஸ். இதனால்  சமீபத்தில் பரபரப்பு கிளப்பிய  ஷீனா போராவின் கதையைப் படமாக்க, தற்போதே போட்டி ஆரம்பித்துவிட்டது. இது கோர்ட் சீஸன்!