Published:Updated:

ஜம்முவில் தீவிரவாத அச்சம் நீங்கிவிட்டது: உமர் அப்துல்லா

ஜம்முவில் தீவிரவாத அச்சம் நீங்கிவிட்டது: உமர் அப்துல்லா
News
ஜம்முவில் தீவிரவாத அச்சம் நீங்கிவிட்டது: உமர் அப்துல்லா

ஜம்முவில் தீவிரவாத அச்சம் நீங்கிவிட்டது: உமர் அப்துல்லா

ஜம்முவில் தீவிரவாத அச்சம் நீங்கிவிட்டது: உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: ஜம்முவில் தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர் என்றும் தீவிரவாத அச்சம் நீங்கிய பகுதியாக இனி ஜம்மு விளங்கும் என்றும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

ஜம்முவில் தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். தீவிரவாத அச்சம் நீங்கிய பகுதியாக இனி ஜம்மு விளங்கும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். பூலோக சொர்க்கம் என்ற அழைக்கப்படும் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக தீவிரவாத செயல்கள் தலைவிரித்து ஆடி வருகின்றன. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல்களும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பிரிவினைவாத குழுக்களின் சதிச் செயல்களும் நாள்தோறும் அரங்கேறியது.

பாகிஸ்தான் எல்லையோரமாக அமைந்துள்ள ஜம்மு பகுதி, தீவிரவாத செயல்களால் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் முக்கிய சுற்றுலா தலமான ஜம்முவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நிலைமையை கட்டுப்படுத்தி, சீர்குலைந்த சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

மேலும், ஜம்முவில் தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க கிராம மக்களை கொண்ட பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது. இதன் விளைவாக, ஜம்மு பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல்களும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் குறைந்து வருகின்றன. கடந்த ஆண்டு 192 ஆக இருந்த தீவிரவாத தாக்குதல்கள், இந்த ஆண்டு 100 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறைந்து வருகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா, "ஜம்மு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைந்து விட்டது. சில இடங்களில் ஒரு தீவிரவாதியை கூட பார்க்க முடியவில்லை. தற்போது தீவிரவாதம் இல்லாத பகுதியாக ஜம்மு மாறி வருகிறது" என்று கூறியுள்ளார்.

"இதைப்போன்று அமைதியான நேரத்தில் தீவிரவாதிகள் 'திடீர்' தாக்குதல் நடத்தி போராளி குழுக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்கள். மாநில அரசும், போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தற்போதைய நிலை குறித்து திருப்தி அடைந்தாலும், அவர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்று அம்மாநிலத்தின் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. கஜுரியா கருத்து தெரிவித்துள்ளார்.