Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:

• சமீபமாக வெளியே தலைகாட்டாமல் இருந்தார் அமெரிக்க நடிகை செலீனா கோம்ஸ். உடனே காதல் தோல்வி, பட வாய்ப்புகள் இல்லை என்றெல்லாம் கிசுகிசுக்கள் கிளம்ப, 'தயவுசெய்து நிறுத்துங்கள். தற்போது கீமோதெரப்பி சிகிச்சையில் இருக்கிறேன். என்னைப் பற்றி எழுதுவதைவிட லூபஸ் பற்றியாவது எழுதுங்கள்!’ எனப் பொங்கியிருக்கிறார் கோம்ஸ். அது என்ன லூபஸ்? ஒருவிதமான தோல் சிதைவு நோய். அதைக் குணமாக்குவது கடினமாம். கட்டுக்குள் மட்டுமே வைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நோய்க்கான சிகிச்சையில்தான் இருக்கிறார் செலீனா. டேக் கேர் கண்ணு!

இன்பாக்ஸ்

•  ட்விட்டர், இப்படி ஒரு சண்டையைப் பார்த்து இருக்காது. 'தில்வாலே’ படத்தில் கஜோலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் ஷாரூக் கான், 'நானும் கஜோலும்தான் உலகத்தின் மோசமான டான்சர்ஸ்’ என ட்விட்டினார். இதைக் கண்ட அமிதாப், 'தப்பு ஷாரூக். அந்தப் பட்டம் எனக்குத்தான் பொருத்தம்’ என பதில் சொல்ல, 'அதை நாங்கதான் சொல்லணும். இப்போதைக்கு நீங்க போய் வேலையைப் பாருங்க’ என ட்வீட்டித் தள்ளிவிட்டனர் ரசிகர்கள். சல்மான் பாய்.. கொஞ்சம் என்னன்னு கேளுங்க!

• மரப்பாச்சியில் தொடங்கி பார்பி வரை பல  பொம்மைகளைப் பார்த்திருப்போம். இப்போது, 'வெண்டி’ எனும் பொம்மை தயாரிப்பு நிறுவனம், மலாலா, ஜே.கே.ரௌலிங் போன்ற பல்வேறு துறை சாதனையாளர்கள் சாயலில் பொம்மைகளைத் தயாரித்திருக்கிறது. குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்க இந்த முயற்சியாம்! கலாம், சகாயம்னு நம்ம பசங்க ஆரம்பிப்பாங்களே!

இன்பாக்ஸ்

•  'இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை ஏற்றிய அனுஷ்கா, 'பாகுபலி-2’க்காக மீண்டும் 'இஞ்சி இடுப்பழகி’ ஆகவேண்டிய கட்டாயம். எடை இழக்க அமெரிக்கா சென்றிருக்கிறார். இயற்கையான முறையில் எடை இழக்கத்தான் அனுஷ்காவுக்கு எப்போதும் பிடிக்கும். ஆனால், 'பாகுபலி-2’ டெட்லைன் நெருக்குவதால், இந்த அமெரிக்கப் பயணமாம். நல்லது சீக்கிரம் நடந்தா நல்லதுதானே!

இன்பாக்ஸ்

•  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார் ஜாஹீர் கான். 'போன வாரம் வரைக்கும் திரும்ப டீமுக்கு வரணும்னுதான் பிராக்டீஸ் பண்ணேன். ஆனா, என் உடல் ஒத்துழைக்கலைனு தெரிஞ்சதும் ரிட்டையர்டு ஆகலாம்னு முடிவுபண்ணிட்டேன். இந்த முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடி சச்சினிடம் நீண்ட நேரம் பேசினேன். இது சரியான முடிவுதான்’ என்கிறார் 37 வயதாகும் ஜாஹீர். அடுத்த ஐ.பி.எல் சீஸனோடு அதற்கும் ஓய்வுதரப்போவதாக அறிவித்திருக்கிறார். 'இந்திய அணி டெஸ்ட் ரேங்கிங்கில் முதல் இடத்தையும், உலகக் கோப்பையை வென்றதலிலும் ஜாஹீரின் பங்கு முக்கியமானது’ என தோனியும் பாராட்டியிருக்கிறார். மிஸ் யூ ஜாஹீர்!

•  'அதுவா... இதுவா... அவரா... இவரா?’ என 'எந்திரன்-2’ அப்டேட்கள்தான் இப்போது இண்டஸ்ட்ரி வைரல். படம் 3ஞி, அர்னால்டு வில்லன் என ஏகப்பட்ட வதந்திகளுக்கு இடையே, ஹீரோயின் ஏமி ஜாக்சன் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறதாம். மிஸ்டர் சிட்டி...இதையாவது நம்பலாமா?

இன்பாக்ஸ்

•  இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்த சந்தோஷத்தை, மனைவி சானியாவுக்கு  டெடிகேட் செய்திருக்கிறார் பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக். 'விளையாட்டில் சாதிக்க எங்கள் இருவரிடையே எப்போதும் ஆரோக்கியமான போட்டி உண்டு. ஆனால், அவர் அளவுக்கு சாதிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் நான்தான் எப்போதும் இருப்பேன். அதனாலேயே என் எல்லா வெற்றிகளுக்கும் அவர்தான் காரணம்!’ என மனைவி புகழ் பாடுகிறார் மாலிக். 'லவ் எவர்’ ஜோடி!

•  சர்ச்சை வைரலில் சிக்கிக்கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. இவர் மகன் ராம் சரண் நடித்த 'புரூஸ்லீ’ பட விழாவில் கலந்துகொண்டவரிடம் ரசிகர் ஒருவர் ஆட்டோகிராஃப் கேட்க, 'என்னைப் பார்க்கும்போதெல்லாம் இதே வேலையா... உங்களுக்கு எத்தனை முறை சொல்வது? ஸ்டுப்பிட் ஃபெல்லோஸ்’ எனத் திட்டிவிட, அது எகிடுதகிடாகப் பரவிவிட்டது. கேர்ஃபுல்...இல்லைன்னா வெச்சு செஞ்சுருவாங்க!

இன்பாக்ஸ்

•  'பிரேமம்’ லைக்ஸுக்குப் பிறகும் 'படிப்புதான் முக்கியம்’ என சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார் அனுபமா பரமேஸ்வரன். ஆனால், டோலிவுட் விடாமல் காலிங்பெல் அழுத்தி, மூன்று படங்களில் நடிக்க கமிட் செய்துவிட்டது.  கோலிவுட் பாய்ஸ்... இதுதானா உங்க டக்கு?

இன்பாக்ஸ்

•  'லே பால்’ என்பது பாரிஸில் நடக்கும் ஒரு ஸ்பெஷல் பார்ட்டி. உலகம் முழுவதும் இருக்கும் வி.வி.ஐ.பி குடும்பங்களில் 16 - 22 வயதில் இருக்கும் 25 பெண்களை மட்டும் அழைத்து நடக்கும் சம்திங் ஸ்பெஷல் பார்ட்டி இது. சென்ற ஆண்டு இந்தியாவில் இருந்து விஜய் மல்லையா, முகேஷ் அம்பானியின் மகள்கள் கலந்துகொண்டார்கள். இந்த ஆண்டு அமிதாப்பின் பேத்தி நவ்யா நவேலிக்கு சான்ஸ். 'ஹீல்ஸ் அணிந்து விழாமல் நடக்க இப்போதான் பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். இன்னும் டான்ஸ் வேற பழகணும். ஆனா, புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்களேனு இதெல்லாம் செய்யிறேன்!’ எனச் சிரிக்கிறார் நவ்யா. அக்ஷராஹாசன் போகலையா?

• 'ஊப்ஸ்... பிகினின்னா சும்மா இல்லை!’ என்கிறார் அலியா பட். 'பிகினி அணிவதற்கான ஸ்லிம் உடல்வாகைக் கொண்டுவர, படப்பிடிப்பின்போது ஸ்பெஷல் டயட், ஜாக்கிங் என எப்போதும் பயிற்சியிலேயே இருந்தேன். ஷூட்டிங் இல்லை என்றாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுவேன். அவ்வளவு வியர்வை சிந்தியதால்தான், இப்போது ஸ்டில்ஸ் பார்க்க அழகாக இருக்கிறது!’ எனத் தனக்குத்தானே பாராட்டிக்கொள்கிறார். நாலு பேருக்கு நல்லதுனா...

•  'ஹீரோக்களுக்கு இணையாகத்தான் நாங்களும் உழைக்கிறோம். ஆனால்,  சம்பளத்தில் அது பிரதிபலிப்பது இல்லை’ என அழகாக ஆவேசப்படுகிறார் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸ். சில நாட்களுக்கு முன்னர்தான் ஹாலிவுட்டில் எம்மா வாட்சனும், பாலிவுட்டில் கங்கனாவும் இதே காரணத்துக்காகப் பொங்கினார்கள். இந்த ஹீரோயின்களுக்கு எந்த ஹீரோ உதவப்போறாரோ?!