Published:Updated:

விஷவாயுத் தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்: பட்டறை உரிமையாளர் கைதாகி விடுதலை

விஷவாயுத் தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்: பட்டறை உரிமையாளர் கைதாகி விடுதலை
விஷவாயுத் தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்: பட்டறை உரிமையாளர் கைதாகி விடுதலை

விஷவாயுத் தாக்கி 3 பேர் உயிரிழந்த விவகாரம்: பட்டறை உரிமையாளர் கைதாகி விடுதலை

கோவை தங்கப்பட்டறையில், விஷவாயுத் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் பட்டறை உரிமையாளர், கைதாகி உடனடியாக ஜாமீனில் விடுதலை ஆனார்.

கோவை ஆர்.எஸ்.புரம் ஃபாதர் ரேண்டி சாலையில் ஏராளமான தங்கப்பட்டறைகள் உள்ளன. அதில், ரவிசங்கர் என்பவருக்குச் சொந்தமான தங்கப்பட்டறையில் உள்ள கழிவுநீர் தொட்டியை, நேற்று அதிகாலை சுத்தம் செய்யும் பணியில், இளைஞர்கள்  ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென்று விஷவாயுத்தாக்கியதில், கௌரிசங்கர், ஏழுமலை, சூர்யகுமார் ஆகிய மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர்.

இதில் கௌரிசங்கர் மற்றும் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொரு இளைஞரான சூர்யகுமார் உயிரிழந்துள்ளார். இவர்களின் இறப்பு, அவர்களது உறவினர்களிடையே கடும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ரவிசங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துவந்தனர். இதுகுறித்து, பட்டறை உரிமையாளர் ரவிசங்கர் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரித்து வந்தனர். போலீஸார் நடத்திய நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, ரவிசங்கர் கைது செய்யப்பட்டார். ஆனால், ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், கைதான உடனேயே அவர் ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு