Published:Updated:

கடனை அடைக்கமுடியாததால், பிறந்து 30 நாள்களே ஆன குழந்தையை விற்ற சோகக் கதை..

கடனை அடைக்கமுடியாததால், பிறந்து 30 நாள்களே ஆன குழந்தையை விற்ற சோகக் கதை..
கடனை அடைக்கமுடியாததால், பிறந்து 30 நாள்களே ஆன குழந்தையை விற்ற சோகக் கதை..

கடனை அடைக்கமுடியாததால், பிறந்து 30 நாள்களே ஆன குழந்தையை விற்ற சோகக் கதை..

பிறந்து 30 நாள்களே ஆன பெண்குழந்தையை விற்ற நரிக்குறவர்கள் உட்பட 6 ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர் ராம்ராஜ்-மீனா, இவர்களுக்கு 3-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது, இவர்கள் திருமணத்திற்கு வாங்கிய கடன், மற்றும் அவரது மனைவிக்கு உடல் நிலைசரியில்லாத காரணத்தால் 1,லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கியிருக்கிறார். ஏழ்மை காரணமாகவும் 30 நாள்களே ஆன பெண் குழந்தையை விற்று கடனை அடைக்க முடிவு செய்துள்ளனர்.  

 அப்பொழுது கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள சித்த மருத்துவர் மெகருனிஷா என்பவாரின் தொடர்பு கிடைத்தது. அவரின் மூலம் கோவையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் கடந்த 15 நாள்களுக்கு முன் பெண் குழந்தையை 1,50,000 ரூபாய்க்கு விற்றிருக்கிறார்கள், இந்தச் சம்பவம் அக்கம்பக்கத்தினர் மூலமாக வெளியில் வரவே குழந்தை நல அலுவலர்கள் மற்றும் மீன்சுருட்டி வி.ஏ.ஓ ஜாஸ்மின் ஆகியோருக்குத் தகவல் கிடைத்துள்ளது.  

இதுகுறித்து வி.ஏ.ஓ. ஜாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலிஸார் வழக்குப் பதிந்து வடலூர் சென்று அனைவரையும் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை செய்தனர், இதனை அடுத்து குழந்தையை விற்ற தந்தை ராமராஜ், குழந்தையுடன் தாய் மீனா, டாக்டர் மெகருனிஷா, குழந்தையை விலை கொடுத்து வாங்கிய செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எம்.திலீபன்
 

அடுத்த கட்டுரைக்கு