இவை கண்ணாடிப் பொருள்கள் அல்ல... கண்ணாடி உயிர்கள்! #TransparentSpecies

இது இயற்கையின் மற்றுமோர் ஆச்சர்யம். ஒவ்வொரு உயிரையும் நிறத்தின் அடிப்படையில் குறிக்கும் வழக்கம் காலங்காலமாக இருக்கிறது. கருப்பு, வெள்ளை என மனிதர்களிடத்தில் அந்த நிறம் வேற்றுமைகளையும் உருவாக்கியிருக்கிறது என்பதும் நிஜம். ஆனால், இதோ இந்த சில உயிரினங்கள் குறிப்பிட்ட நிறமாக அல்லாமல்,  "ட்ரான்ஸ்பெரண்ட்" (Transparent) தோல் உடைய உயிரினங்கள். 

க்ளாஸ்விங்க்டு பட்டர்ஃப்ளை (GlassWinged Butterfly):

ஸ்பானிய மொழியில் இதை "எஸ்பெஜிடோஸ்" (espejitos) என்று சொல்வார்கள். அதாவது "சின்ன கண்ணாடி" (Little Mirrors) என்று அர்த்தம்.
இந்தப் பட்டாம்பூச்சிகளுக்கு "Greta Oto" என்றொரு பெயரும் உண்டு.

கண்ணாடி உயிர்கள்

 பட்டாம்பூச்சிகளுக்கான இந்த ட்ரான்ஸ்பெரன்ட் தன்மை என்பது, எதிரிகளிடமிருந்து அதைக் காக்க உதவுகிறது. எந்தப் பகுதியில் அது இருந்தாலும், அதன் இறக்கைகளின் வழி ஒளிபுகும் என்பதால், அதனை அடையாளம் காண்பது மிகவும் கடினம். இது எதிரிகளிடம் தங்களை தற்காத்துக் கொள்ள அந்தப் பட்டாம்பூச்சிகளுக்கு பெருமளவில் உதவி புரிகிறது. 

எதிரிகளிடமிருந்தான பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல், வெப்பத்தைத் தடுக்கவும் இந்த ட்ரான்ஸ்பெரன்ட் இறக்கைகள் அவைகளுக்கு உதவுகின்றன. 

கண்ணாடி உயிர்கள்

நீண்ட தூரம் வலசை (Migration) செய்யும் இயல்பு கொண்டவை.

இதன் இறக்கைகள் மிகவும் மெல்லியதாக தெரிந்தாலும், தன்னைவிட 40 மடங்கு எடை அதிகமான பொருட்களை இதனால் சுமக்க முடியும். இறக்கைகளின் அளவு 5.6செமீ இருந்து 6.1செமீ வரை இருக்கும். 

கண்ணாடி உயிர்கள்

மதிய நேரத்திலோ அல்லது மாலை நெருங்கும் வேளையில் கூடும் வழக்கம் கொண்டவை. ஆங்கிலத்தில் LEK என்று சொல்லக்கூடிய, ஆண் தன்னை நிரூபித்து பென்ணை வெல்லும் நிகழ்வு இந்தப் பட்டாம்பூச்சிகள் மத்தியில் நடக்கின்றன. 

க்ளாஸ் ஈல்ஸ் (Glass Eels) :

தன் வாழ்நாளின் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிறங்களில் உருவெடுக்கும் ஓர் நீர்வாழ் உயிரினம் இந்த ஈல்ஸ்.

பிறந்து பல வருடங்களுக்கு ட்ரான்ஸ்பெரன்ட்டாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் நிறத்தை உருவாக்கும் செல்களான "க்ரோமாடோஃபோர்ஸ்" (Chromatophores)) மற்றும் "மெலனோஃபோர்ஸ்" (Melanophores) இல்லாததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. 

கண்ணாடி உயிர்கள்

5 வருடங்களிலிருந்து 20 வருடத்திற்குள்ளாக சில்வர் நிறத்திற்கு மாறும். 

நீருக்குள் இருக்கும் போது இதை அடையாளம் காண்பது மிகவும் கடினம். தண்ணீரைப் போலவே தான் இதுவும் தெரியும். இதனால், தன் எதிரிகளிடம் அவ்வளவு எளிதில் சிக்கிவிடாது. 

கண்ணாடி உயிர்கள்

நீண்ட தூரங்களுக்குப் பயணம் செய்யும் வழக்கம் கொண்டது. இதைப் பிடித்து தொட்டியில் அடைத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட போது 85 ஆண்டுகள் வரை வாழ்ந்தது. இயற்கையான சூழலில் இதன் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

க்ளாஸ் ஃப்ராக் (Glass Frog):

இந்த தவளையின் உடலுக்குள் என்ன இருக்கிறது என்பதை நம் வெறும் கண்களால் தெளிவாக பார்க்கும் அளவிற்கு இதன் தோல் ட்ரான்ஸ்பெரன்ட் தன்மை கொண்டது.

கண்ணாடி உயிர்கள்

இலைகளின் மீது உட்கார்ந்திருக்கும் போது, ஏதோ இலைகயோடு இலையாய் உருகி ஒட்டியிருப்பதைப் போல் தெரியும்.
மத்திய மற்றும் தென் அமெரிக்க மழைக்காடுகளில் அதிகம் இருக்கிறது. பூமி வெப்பமயமாதலின் காரணமாக இந்த மழைக்காடுகளின் வெப்பம் அதிகரிக்க, அது இந்த தவளை இனத்தின் அழிவிற்கு வித்திட்டிருக்கிறது. 

கண்ணாடி உயிர்கள்

இரவில் தான் சுறுசுறுப்பாக இயங்கும். மழைக்காலங்களில் இணை சேரும் பெண் தவளைகள் ஒரே தடவையில் 20லிருந்து 30 முட்டைகள் வரை இடும். 

ஸீ ஸால்ப் (Sea Salps):

அண்டார்டிகா கடல் பகுதியிலும், வாஷிங்கடனை ஒட்டியிருக்கும் கடற் பகுதியிலும் அதிகமாக வாழக்கூடியது. பீப்பாய் வடிவில் இருக்கக் கூடிய உயிரினம். 

கண்ணாடி உயிர்கள்

ஒரு ஸால்ப்பினுடைய அளவு என்பது 10செமீ வரை இருக்கும். பல ஸால்ப்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து, ஒரு பெரிய சங்கிலியாய் நகரும். அந்தச் சங்கிலி என்பது 15 அடி நீளம் வரை இருக்கும்.

கண்ணாடி உயிர்கள்

க்ளாஸ் கேட்ஃபிஷ் (Glass Catfish):

உலகிலேயே அதிக ட்ரான்ஸ்பரென்ட் தன்மைக் கொண்ட ஓர் உயிரினம். 

உயிர்கள்

அதன் பெரும்பாலான உறுப்புகள், அதன் தலையைச் சுற்றியே அமைந்திருக்கும். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அதன் இதயம் துடிப்பதைக் கூட தெளிவாகப் பார்க்க முடியும். 

கண்ணாடி உயிர்கள்

ஒரு சில சமயங்களில் ஒளி நேராக அதன் மீது படும்போது, அது வானவில் நிறத்தில் ஜொலிப்பதைப் பார்க்க முடியும். 
தாய்லந்து, மலேசியா, இந்தோனேசியாவில் அதிகம் இதைப் பார்க்க முடியும். இறந்த பின், பால் வெள்ளை நிறத்திற்கு மாறிவிடும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!