Published:Updated:

காரைக்குடியில் பழைய கார் கண்காட்சி..!

காரைக்குடியில் பழைய கார் கண்காட்சி..!
காரைக்குடியில் பழைய கார் கண்காட்சி..!

காரைக்குடியில் பழைய கார் கண்காட்சி..!

காரைக்குடியில் பழைய கார் கண்காட்சி..!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பாண்டியன் தியேட்டர் அருகில் செட்டிநாடு பாரம்பரிய கார் கிளப்,1931ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரையிலான கார், மற்றும் பைக் கண்காட்சி நடத்தினார்கள். இதில் 34 பழைய கார்களும், புல்லட் பைக்குகளும் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சிக்காக மதுரை, கோயம்புத்தூர், சேலம், பள்ளடம், ஊட்டி, ராஜஸ்தான், சென்னை ஆகிய ஊர்களில் இருந்தும், அதுபோலவே கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளின் கார்களும், போர் காலங்களில் பயன்படுத்திய ராணுவ ஜீப்களும் வந்திருந்தன. 

கண்காட்சியில் 1934ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 'கேரவன்' வேன் வீடு போல் அனைத்து வசதிகளையும், அதாவது ஏசி, மினி குளிர்சாதன பெட்டி, கழிப்பறை, செல்ப், படுக்கைகள் என அசத்தலாக காண்போரை கவர்ந்திழுத்தது. இதில் கூடுதல் ஸ்பெஷல் வேனின் கதவுகள், ஜன்னல்கள் என உள் பகுதிகள் அனைத்துமே மரத்தால் செய்யப்பட்டிருப்பது ஹைலைட்டான விஷயம்.

1931ம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார் 'சவர்லெட்' நிறுவனத்தின் கார் ஆங்கிலேயர்கள் வேட்டைக்காகவும், தொலைதூரப் பயன்பட்டன. இதுபோன்று நிறைய கார்கள் இடம்பெற்றிருந்தது பார்வையாளர்களை ரெம்பவே கவர்ந்தது. காரைக்குடி மக்களுக்கு இதுபோன்ற கார் கண்காட்சி புதுமையான அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு