Published:Updated:

தேசிய விவசாயிகள் தினத்தில் மாணவர்கள் பெற்ற விவசாயப்பயிற்சி

தேசிய விவசாயிகள் தினத்தில் மாணவர்கள் பெற்ற விவசாயப்பயிற்சி
தேசிய விவசாயிகள் தினத்தில் மாணவர்கள் பெற்ற விவசாயப்பயிற்சி

தேசிய விவசாயிகள் தினத்தில் மாணவர்கள் பெற்ற விவசாயப்பயிற்சி

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு  பள்ளி மாணவர்களுக்கு விவசாயத் தோட்டத்தில் செயல்முறை  விவசாயப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

தேசிய விவசாயிகள் தினத்தில் மாணவர்கள் பெற்ற விவசாயப்பயிற்சி

இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான். நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைப் பெற்று வருகிறது.  பசுமைப் புரட்சியினால் மண் வளம் பாதிக்கப்பட்டது ஒருபுறம் இருந்தாலும் விவசாயிகளின் தொடர் உழைப்பால் ஆண்டு ஒன்றுக்கு 265 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்தநாளே, "தேசிய விவசாயிகள் தின" மாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலம் நூர்பூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சரண் சிங், உ.பி., மாநில முதல்வராக இருந்தபோது நிலக் கையிருப்பு சட்டத்தை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார்.  நாட்டின் 5வது பிரதமராக அவரது ஆட்சி காலத்திலேயே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக "வேளாண் விளைபொருள் சந்தை மசோதா"வையும் அறிமுகப்படுத்தினார். தன் வாழ்நாளில் விவசாயிகளின் உரிமைக்காக குரல் கொடுத்ததால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினம் கடைபிடிக்கபடுகிறது. 

தேசிய விவசாயிகள் தினத்தில் மாணவர்கள் பெற்ற விவசாயப்பயிற்சி

இத்தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நாடார் நடுநிலைப்பள்ளியின் தேசியபசுமைப்படை மாணவர்கள் தீத்தாம்பட்டியிலுள்ள விவசாயி அந்தோணி என்பவரின் தோட்டத்தில் விவசாயப் பணிகளை பார்வையிட்டனர். மாணவர்களுக்கு எலுமிச்சைப்பழம் கொடுத்து வரவேற்ற விவசாயி அந்தோணி, தனது நிலத்தில் பயிரிட்டுள்ள உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களையும், மா, நெல்லி, எலுமிச்சை, தென்னை ஆகிய பழமரக்கன்றுகளையும் காண்பித்து ஒவ்வொன்றின் மருத்துவ பயன்பாட்டை விளக்கினார். 

தேசிய விவசாயிகள் தினத்தில் மாணவர்கள் பெற்ற விவசாயப்பயிற்சி

விவசாயத்தின் அடிப்படையான உழவுக்குப் பிந்தைய நிகழ்வான வரப்பு அமைத்தல் குறித்து மாணவர்களுக்கு செயல்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து குழி எடுத்தல், கன்று நடுதல், களை எடுத்தல் ஆகியவற்றை விவசாயி அந்தோணி செய்து காட்ட மாணவர்களும் செய்தனர். வறட்சியை சமாளிக்கவும் பெய்யும் மழைநீரை அறுவடை செய்து சேமித்து வைக்கும் நீர்மேலாண்மை முறையான அவரது நிலத்தில் அமைத்துள்ள பண்ணைக் குட்டையையும் அதில் மழைநீர் சேமிக்கப்பட்டுள்ளதையும் காட்டி விளக்கினார். இறுதியாக மாணவர்களுக்கு செலவில்லாத வகையில் வீடுகளில் கிடைக்கும் கழிவு பொருள்களில் காய்கறிகள் வளர்க்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. 

"வீட்டில் அவரவர் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். செய்வீர்களா மாணவர்களே..?" என்ற விவசாயி அந்தோணியின் கேள்விக்கு "செய்வோம் ஐயா..!" என கோரசாக பதில் கூறியதோடு மாணவர்களின் விவசாய செயல்முறைப் பயிற்சி முடிந்தது. 

அடுத்த கட்டுரைக்கு