Published:Updated:

கெஜ்ரிவாலுடன் ராக்கி சாவந்தை ஒப்பிட்ட திக்விஜய் சிங்!

Vikatan Correspondent
கெஜ்ரிவாலுடன் ராக்கி சாவந்தை ஒப்பிட்ட திக்விஜய் சிங்!
கெஜ்ரிவாலுடன் ராக்கி சாவந்தை ஒப்பிட்ட திக்விஜய் சிங்!
கெஜ்ரிவாலுடன் ராக்கி சாவந்தை ஒப்பிட்ட திக்விஜய் சிங்!

புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுடன், தம்மை  ஒப்பிட்டுப்  பேசிய திக்விஜய் சிங் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக  நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சித்தலைவர்களின் ஊழல் மற்றும் தொழிலதிபர்களின் மோசடிகளை ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பை சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால்,அம்பலப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து தனது ட்விட்டர் தளத்தில் எழுதிய  காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங்,"அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது ஆகும். அவரது  குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லை. ஆதாரத்துடன் புதிய குற்றச்சாட்டுகளை அவர்  தெரிவிப்பாரேயானால், அதன் மீது நாங்கள் கவனம் செலுத்துவோம்.

##~~##
கெஜ்ரிவாலும்,பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்தும் தங்களிடம் ஏதோ இருப்பதுபோல்  காட்டிக் கொள்ள நினைக்கின்றனர்.ஆனால், வெளிப்படுத்துவதற்கு அவர்களிடம் எதுவும்  கிடையாது" கூறியிருந்தார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தன்னை ஒப்பிட்டு திக்விஜய் சிங் கருத்து வெளியிட்டதற்கு கடும் கண்டம் தெரிவித்த ராக்கி சாவந்த்,திக்விஜய் சிங் மன்னிப்பு  கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் தலைவர்கள் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள அவர், திக் விஜய் சிங் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கும் கிண்டலாக பதிலளித்துள் திக்விஜய் சிங்," நான் அவரது பழைய ரசிகன்; எனவே, அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.