Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• சித்தியுடன் தகராறு, தலைமறைவு... எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சறுக்கிய அஞ்சலியின் சினிமா வாழ்க்கை, தற்போது ஏறுமுகத்தில். யெஸ், அஞ்சலி பேக் டு தி ஃபார்ம். தமிழில் 'மாப்ள சிங்கம்’ ரிலீஸுக்குக் காத்திருக்க, 'இறைவி’, தரமணி’ படப்பிடிப்பில். தெலுங்கில் மூன்று படங்கள். 'டிக்டேட்டர்’ படத்தில் பாலய்யாவுக்கு ஜோடி. '''டிக்டேட்டர்’ல மாஸ் பெர்ஃபார்மன்ஸ். 'இறைவி’யில் அதுக்கு நேர் எதிர் கதாபாத்திரம். சீரியஸ் படம், கமர்ஷியல் படம் என, நான் இப்ப எதுக்கும் தயார்'' என்கிறார். வரணும்... பழைய ஆனந்தியா வரணும்!

இன்பாக்ஸ்

• டென்மார்க் ஓப்பன் பாட்மின்டன் கோப்பையை ஜஸ்ட் மிஸ் செய்துவிட்டார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. காயம் காரணமாக ஓய்வில் இருந்த சிந்து, அதில் இருந்து மீண்டு இந்தத் தொடரில் பங்கேற்றார். அரை இறுதியில் உலக சாம்பியன் கரோலினா மரினையே சிந்து தெறிக்கவிட, ரசிகர்கள் குஷியாகினர். ஆனால், இறுதிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த லீ ஜுரே, சிந்துவை வீழ்த்தினார். 'எதிராளியை வேகமாகக் கணித்து விளையாட முடியாமல்போய்விட்டது. அவரும் வலுவாக இருந்ததால் நிறையத் தவறுகள் செய்துவிட்டேன். அவற்றை எல்லாம் இனி திருத்திக்கொள்வேன்’ என்கிறார் சிந்து. அடுத்த தடவை செஞ்சிடுங்க!

 'இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபபாய் படேலுக்கு, 3,000 கோடி ரூபாய் செலவில் வெண்கலச் சிலை அமைக்கப்படும்’ என அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. அதை முழுவதும் செய்து முடிக்கப்போவது ஒரு சீன நிறுவனம். ' 'மேக் இன் இந்தியா’ பிரதமர், எப்படி 'மேட் இன் சீனா’-வுக்கு ஓ.கே சொன்னார்?’ என சர்ச்சை கிளம்ப, 'இதன் கட்டுமானப் பணிகளுக்காக எல்-டி நிறுவனத்துடன்தான் ஒப்பந்தம். அவர்கள்தான் சீன நிறுவனத்துக்கு சப்-கான்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள்’ எனச் சமாளிக்கிறார்கள். நல்லா சொல்றீங்க டீட்டெயிலு!

•  'பாகுபலி’யில் கிளாசிக் நடிப்பில் மிரட்டிய தமன்னா, தெலுங்கில் 'பெங்கால் டைகர்’ படத்தில் 'அதுக்கும்மேல’ என இறங்கி அடிக்கிறாராம். 'என் சினிமா கரியரை 'பாகுபலி’க்கு முன்னர் 'பாகுபலி’க்குப் பின்னர்னு பிரிச்சுக்கலாம். அந்தப் படம் வேற ரேஞ்சுக்கு என்னை உயர்த்தியிருக்கு. ஆனா, அதில் கிளாமரா நடிச்சிருந்தேன்னு சொல்றாங்க. சினிமாவில் கிளாமர் சகஜம். ரியல் லைஃப்பில் நான் எப்படி இருக்கிறேன் என்பதுதான் முக்கியம்’  எனக் கோபப்படுகிறார் இந்த மில்க் பியூட்டி. அழகு ஆங்கிரி பேர்ட்!

இன்பாக்ஸ்

•  'என் சினிமா பயணத்தில், இந்தப் படம் மிகவும் முக்கியமானது; கஷ்டமானது. உணர்வாகவும் சரி, உழைப்பாகவும் சரி... இந்த அளவுக்கு வேறு எந்தப் படத்துலயும் நான் ஒன்றி வேலைசெய்தது இல்லை’ - தீபிகா படுகோனை இப்படிப் பேசவைத்திருக்கும் படம் 'பாஜிராவ் மஸ்தானி’. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப் படமான இதுவும், மன்னர் காலத்துக் கதைதான். படத்தின் முதல் பாடலை, ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்கி இருக்கிறார்கள். இதற்காக அந்த அரசக் குடும்பத்தினரிடம் கதையைச் சொல்லி, அனுமதி வாங்கி எடுத்திருக்கிறார்கள். அதுவே பக்கா பப்ளிசிட்டியாக அமைந்துவிட, குஷியில் இருக்கிறது படக் குழு. ராஜ தந்திரம்!

இன்பாக்ஸ்

•  'மைக்கேல் ஜாக்சனுக்குப் பிறகு, சொல்லி அடித்து கலெக்‌ஷனை அள்ளும் மியூஸிக் ஸ்டார் யாருமே இல்லையே!’ என்ற குறையைத் தீர்த்திருக்கிறார் டெய்லர் ஸ்விஃப்ட். இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 317 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார் டெய்லர். அதாவது, ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர் டெய்லரின் அக்கவுன்ட்டில் ஏறுகிறதாம்! சோலோவாக மட்டும் அல்லாமல் ஜோடியாகவும் பணத்தை அள்ளுகிறார் டெய்லர். இவரும் இவரது பாய் ஃப்ரெண்ட் ஹாரீஸ¨ம் இணைந்து ஜோடியாகச் சம்பாதித்த தொகை மட்டும் 146 மில்லியன் டாலராம்! 'அதிகம் சம்பாதிக்கும் ஜோடி’ என இவர்களைக் கை காட்டுகிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. கலெக்‌ஷன் கப்பிள்!

இன்பாக்ஸ்

•  டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான பெண்ணின் கதையை அடிப்படையாகக்கொண்டு உருவான ஆவணப்படம்தான் 'இந்தியா’ஸ் டாட்டர்’. இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்லீ உட்வின் இயக்கிய அந்தப் படம், இந்தியாவில் திரையிட தடைசெய்யப்பட்டது. இதை அமெரிக்காவில் திரையிட உதவியிருக்கிறார் ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப். 'முதல்முறை பார்க்கும்போது, என்னால் எதுவுமே பேச முடியவில்லை. அவள் இப்போது எங்களுக்கும் மகள் ஆகிவிட்டாள். இந்த ஆவணப்படம், தடை செய்யப்படவேண்டியது அல்ல; சிறந்த ஆவணப்படம் என்பதற்கான ஆஸ்கர் விருதை பெறக்கூட தகுதி உடையது’ எனப் பாராட்டியிருக்கிறார் மெரில். சல்யூட்!

இன்பாக்ஸ்

• 'உ.பி முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டுத்தனம்தான்’ என ஒரு விமர்சனம் உண்டு. ஆனால், நிஜமாகவே விளையாட்டில் அகிலேஷுக்கு அதிக ஆர்வம். கிரிக்கெட், கால்பந்து ஆகியவற்றில் தனது மாநில இளைஞர்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தினார். இப்போது டென்னிஸ் பக்கம் திரும்பிய அகிலேஷ், சானியா மிர்சாவை அழைத்து இளம் டென்னிஸ் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கக் கோரியுள்ளார். விளையாட்டுப் புள்ள!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

•  ''எந்திரன்-2’ படத்தில் அர்னால்டு நடிக்கிறாரா?!’ எனக் கேட்காத மீடியாவே இல்லை எனும் அளவுக்கு, செய்தி வைரல் ஆனது. இனி அதன் ஃபாலோஅப்பாக அதை உறுதிசெய்து வெளியிடலாம். 'எந்திரன்-2’ கதை, நடிப்புக்கான தொகை என இரண்டையும் கேட்டு, லாக் செய்திருக்கிறார் அர்னால்டு. இனி, அர்னால்டின் 25 நாட்கள் ஷங்கர் வசம். ஏமியும் அர்னால்டும் புதிதாகச் சேர, டெக்னிக்கல் குழுவுக்கு 'எந்திரன்’ டீமையே டிக் அடித்திருக்கிறாராம் ஷங்கர். ரெட் சிப் அர்னால்டு ரெடி.