சினிமா
Published:Updated:

ஹலோ மேகஸின்!

சார்லஸ்

##~##

மிழகத்தில் எஃப்.எம். வரலாற்றில் முதல்முறையாக வாரப் பத்திரிகை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹலோ எஃப்.எம்! எப்போதுமே இரண்டு நிமிடப் பேச்சுக்கு இடையே சினிமா பாடல் களை ஒலிக்கவிடுவதுதான் எஃப்.எம். ரேடியோக் களின் வழக்கம். 'அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளில் இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது’ என்பது அவர்களின் சமாளிப்பு விளக்கம். ஆனால், அதைத் தாண்டி ஒரு வாரப் பத்திரிகையில் என்னென்ன விஷயங்கள் இருக்குமோ அது அத்தனையையும் காற்றலைகளில் தவழவிடுகிறது ஹலோ எஃப்.எம்.

''இந்த நிகழ்ச்சியின் பேரு ஹலோ மேகஸின். அந்தந்த வாரம் மக்களையும் சமுதாயத்தையும் பாதிக்கும் விஷயங்களை அலசப் போறோம். அண்ணா ஹஜாரே முதல் பரமக்குடி கலவரம் வரை அந்தந்த வாரத்தின் ஹாட் விஷயங்களை அலசுற மாதிரி கவர் ஸ்டோரி, கோலிவுட் டு ஹாலிவுட் வரை அலசி எடுக்கும் சினிமா பாரடைஸோ, கதை, கவிதைனு இந்த எஃப்.எம். மேகஸினை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கேட்கலாம்'' என்கிறார் சினிமா செய்திகளைத் தொகுத்து வழங்கும் நீனா.

ஹலோ மேகஸின்!

''வழக்கமா எஃப்.எம். நிகழ்ச்சிகளை ஒண்ணு அல்லது ரெண்டு ஆர்.ஜே-க்கள் தொகுத்து வழங்குவாங்க. ஆனா, ஹலோ மேகஸின் நிகழ்ச்சியை மட்டும் சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடினு தமிழ்நாடு முழுக்க உள்ள ஏழு ஹலோ எஃப்.எம். நிலையங்களில் இருந்தும் ஏழு  தொகுப்பாளர்கள் சேர்ந்து தொகுத்து வழங்குவாங்க'' என்கிறார் 'வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைக் கதை’க்குத் தனது குரலால் உயிர் கொடுக்கும் மணிகண்டன்.

''இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நிருபர், உதவி ஆசிரியர், ஆசிரியர்னு ஒரு பத்திரிகையின் எடிட்டோரியல் டீம் எப்படி இருக்குமோ, அதே மாதிரிதான் செயல்படப்போறோம். ஒரு வாரத்தில் நடக்கும் அத்தனை சுவாரஸ்யங்களும் ஹலோ மேகஸின் மூலமா நேயர்களுக்குக் கொண்டுபோய் சேர்க்கப்போறோம்'' என்கிறார் பிரபு.

''ஹலோ மேகஸின் கேட்டுப்பாருங்க. வாராவாரம் அதைத் தவற விட மாட்டீங்க'' என்று பெருமையோடு சொல்கிறார் ராஜவேல்.

ஹலோ... கலக்குங்க!