வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (29/12/2017)

கடைசி தொடர்பு:20:05 (29/12/2017)

மாம்பழமாம் மாம்பழம், மகத்துவங்கள் நிறைந்த மாம்பழம்! (Sponsored Content)

மா, பலா, வாழை என முக்கனிகளில் முதலாவதாக மாம்பழத்தை முன்னோர்கள் வைக்கக் காரணங்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளம்! காயாக இருக்கும்போது பச்சை நிறத்தில் நம்மை இச்சை கொள்ளச் செய்யும் மாங்காய்; கனிந்தாலோ தித்திக்கும் தனி ருசிதான்! இதனால்தான் எந்தப் பழத்தையும் விட மாம்பழமே உலகம் முழுவதும் அதிகமாக விரும்பி உண்ணப்படுகிறது. செந்தூரம், பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமானி, கொடி மா என எண்ணற்ற வகைகளில் கிடைக்கும் மாங்கனி, உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதில் உற்ற நண்பனாய் விளங்குகிறது. 

வைட்டமின்களின் புதையல்


வைட்டமின் உயிர்ச்சத்துகள் ஏ, பி-6, சி,  இ, கே ஆகியவை மாங்கனிகளில் நிறைந்திருக்கின்றன. தெளிவான கண் பார்வைக்கும், ரத்த உற்பத்திக்கும் துணை செய்கிறது வைட்டமின் ஏ;  மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்கிறது வைட்டமின் பி 6; நோய் எதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியமாக விளங்குகிறது வைட்டமின் சி; ஆண்களின் உடலை வலுவாக்கி வீரியமாக்குகிறது வைட்டமின் இ; எலும்பின் ஆரோக்கியத்தைக் காப்பதோடு இதய நோய் வராமலும் தடுக்கிறது வைட்டமின் கே. அந்த வகையில் மாங்கனியைச் சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். 

இளமையைப் பேண 'மா'பெரும் வழி

பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரச் சத்துகள் மாம்பழத்தில் நிறைந்து காணப்படுகின்றன. மாம்பழம். க்வெர்செட்டின் ( Quercetin) மற்றும் அஸ்ட்ராகலின் (Astragalin) ஆகிய ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகம் நிறைந்திருப்பதால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், இளமையில் மூப்படைதல் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது மாம்பழம். பொலிவான சருமத்திற்கு ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிமுக்கியமாகும். தோல் சுருக்கங்களைப் போக்கி, செழுமையானத் தோற்றத்தைப் பெற இது உதவுகிறது. .

மாம்பழத்தில் மிகுந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ்,  உடலில் உருவாகும் சிதைவை  உண்டாக்கும் பொருள்களை மட்டுப்படுத்துகிறது. அதனால், சீரான வளர்சிதை மாற்றம் உறுதிசெய்யப்பட்டு, உடலில் தேவையற்ற கட்டிகள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.​ ​இதிலுள்ள எஸ்டர்ஸ் (Esters),  டெர்பேன்ஸ் (Terpenes) மற்றும் ஆல்டிஹைட் (Aldehyde) போன்ற உயிரியக்கப் பொருள்கள் பசியுணர்வைத் தூண்டி, செரிமான இயக்கத்தை மேம்படுத்துகின்றன; செரிமானக் கோளாறு மற்றும் அமிலத்தன்மையைச் சரிசெய்யவும் மாம்பழம் உதவுகிறது. 
'மாஸா (Maaza)'  20% மாம்பழக் கூழ் கொண்டு தயாரிக்கப்படும் குளிர்பானமாகும்;​ இன்னும் சில மாதங்களில் வாட்டி வதைக்கும் வெயில்காலம் தொடங்கவிருப்பதால், வெயிலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், மாம்பழச் சாறு விரும்பிகளின் தாகத்தைக் தணிக்கவும் புதுப்பொலிவுடன் பேஷா வருகிறது 'மாஸா'! தீஞ்சுவையான மாஞ்சுவையுடைய மாஸாவை அருந்தி மகிழுவோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க