Published:Updated:

விஷம் அருந்தி ஒருவர் மயக்கம்..! சிவகங்கை எஸ்.பி வளாகத்தில் பரபரப்பு

வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடிய புகார் மீது ஓராண்டு காலமாக நடவடிக்கை எடுக்கக்கோரி பாகனேரியைச் சேர்ந்த ஒருவர் எஸ்.பி அலுவலகத்திற்கு அலைந்து வந்தவர் திடீரென விஷம் அருந்தி மயக்கமடைந்தார். அதனால், ஆட்சியர் அலுவலகம் பரபரப்படைந்தது. ஆட்சியர் அலுவலகம் ஏற்கெனவே பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் பணம் வழங்காத பிரச்னை காரணமாக விவசாயிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் இப்படியொரு சம்பவம் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஷம் அருந்தி ஒருவர் மயக்கம்..! சிவகங்கை எஸ்.பி வளாகத்தில் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் பாகனேரி அருகே வீழனேரியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் பாகனேரியில் உள்ள அரசுடைமை வங்கியில்கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கிக்கணக்கிலிருந்து இவரது அனுமதியின்றி பல ஆயிரம் பணத்தைத் திருடியுள்ளதாக கடந்த ஆண்டு எஸ்பி அலுவலகத்தில் புகார்அளித்துள்ளார். இதில் தீர்வு கிடைக்காமல்அடிக்கடி எஸ்பி அலுவலகத்திற்கு வந்து நடையாய் நடந்து சென்று விரக்தியடைந்து போனார்.

இந்நிலையில்  இன்று ஆட்சியர் வளாகத்தில் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்துவிட்டு கருவூலஅலுவலக வாசல் முன்பு விஷம் குடித்து மயங்கினார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முத்துராமன் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து சிவகங்கை நகர்போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு