Published:Updated:

பைப்களை உடைத்து திருடப்படும் குடிநீர்..! கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

பைப்களை உடைத்து திருடப்படும் குடிநீர்..! கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
பைப்களை உடைத்து திருடப்படும் குடிநீர்..! கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

பைப்களை உடைத்து திருடப்படும் குடிநீர்..! கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது மல்லிப்பட்டி என்ற மழை கிராமம். போக்குவரத்து, மின்சாரம், சாலை என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இக்கிராமத்தினரின் பல்வேறு கட்டப் போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது தண்ணீர் மட்டும்தான். அதுவும், சில கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அத்தியூத்து மலையிலிருந்து மல்லிப்பட்டி கிராமத்திற்கு பைப் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இந்த பைப்களை வழியிலேயே சில விசமிகள் உடைத்து தங்கள் தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் சங்கரேஸ்வரனிடம் பேசினோம், ‘மல்லிப்பட்டி கிராம மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரே உரிமை தண்ணீர் மட்டும்தான். கடந்த 2002-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தண்ணீர் பைப்களை வழியிலேயே உடைத்து. மலைகளிலுள்ள தனியார் தோட்டங்களுக்குப் பாய்ச்சுகிறார்கள். காபி, இலவம், மிளகு போன்ற தோட்டங்கள் அம்மலைப் பகுதிகளில் இருப்பதால் அவற்றிற்கு எளிமையாக தண்ணீர் கிடைக்க வேண்டி, இந்தக் குடிநீர் பைப்களில் கைவைக்கிறார்கள்.

சுமார் 350 பேர் வசிக்கும் மல்லிப்பட்டி கிராமத்திற்கு சரிவர குடிநீர் வந்து சேர்வதில்லை. மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட பைப்களை பராமரிப்பதாகக் கூறி 15 நாள்களுக்கு ஒரு முறை பணம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல், காட்டு விலங்குகளில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழும் இம்மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’’ என்றார் ஆதங்கத்தோடு.

அடுத்த கட்டுரைக்கு