Published:Updated:

தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் விழாவில் பாலஸ்தீன தூதர்! ஆதரவளித்த இந்தியா அதிர்ச்சி

தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் விழாவில் பாலஸ்தீன தூதர்! ஆதரவளித்த இந்தியா அதிர்ச்சி
தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் விழாவில் பாலஸ்தீன தூதர்! ஆதரவளித்த இந்தியா அதிர்ச்சி

தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் விழாவில் பாலஸ்தீன தூதர்! ஆதரவளித்த இந்தியா அதிர்ச்சி

மீபத்தில் இஸ்ரேல் தலைநகரம் ஜெருசலேம் என்று அமெரிக்கா அங்கீகாரம் செய்தது. அமெரிக்கா அறிவிப்புக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்து, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. பாலஸ்தீன் விவகாரத்தில் இந்தியாவுக்கு என்று தனியான சுதந்திரமானக் கொள்கை உள்ளது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில், 2008ம் ஆண்டு மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத் நடத்திய பொதுக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார் பாகிஸ்தானுக்காக பாலஸ்தீன தூதர் வாலித் அபு அலி.

பாலஸ்தீனத் தூதரின் இந்தச் செயல்பாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லஸ்கர் இ தொய்பா அமைப்பைத் தோற்றுவிற்றவர்களில் ஒருவரான ஹஃபீஸ் சயீத்துடன் தூதரக அஸ்தஸ்த்தில் உள்ள ஒருவர் பொது விழாவில் பங்கேற்கலாமா என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், ''இந்த விவகாரம் குறித்து டெல்லியிலுள்ள பாலஸ்தீன தூதரிடமும் , பாலஸ்தீன நாட்டிடமும் விளக்கம் கேட்டுள்ளோம். இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கிறது'' என்றார்

Difa-e-Pakistan என்ற அமைப்பை ஹஃபீஸ் சயீத் கடந்த 2012ம் ஆண்டு தோற்றுவித்தார். இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக தீவிரமாகச் செயல்படும் 40 அரசியல்கட்சிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் இதில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பு சார்பாக வெள்ளிக்கிழமை ராவல்பிண்டியில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில், பாலஸ்தீன தூதர் சயீத்துக்கு வலது பக்கத்தில் அமர்ந்திருந்தார். இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய, ஹஃபீஸ் சயீத் இந்தியாவிடமிருந்து காஷ்மீரை விடுவிக்க வேண்டும். ஜின்னாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறினார். 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனவரி 14ம் தேதி இந்தியா வருகிறார். தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் பிரதமர் மோடி, பாலஸ்தீனத் தலைநகர் ரமல்லாவுக்குச் செல்கிறார். அதற்குப் பிறகு, பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா முக்கிய முடிவு எடுக்கலாம். 

அடுத்த கட்டுரைக்கு