Published:Updated:

புத்தாண்டில் இந்த 3 இடங்களில் தயார் நிலையில் 37 ஆம்புலன்ஸ்கள்!

புத்தாண்டில் இந்த 3 இடங்களில் தயார் நிலையில் 37 ஆம்புலன்ஸ்கள்!
புத்தாண்டில் இந்த 3 இடங்களில் தயார் நிலையில் 37 ஆம்புலன்ஸ்கள்!

புத்தாண்டில் இந்த 3 இடங்களில் தயார் நிலையில் 37 ஆம்புலன்ஸ்கள்!

2018 ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது முக்கிய இடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்களைக் கருத்தில் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வோர் ஆண்டும் மேற்கொண்டு வருகிறது. இதே போன்று 2018-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டுக் கொண்டாடங்களின் பொழுது சென்னையில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தளங்கள், மெரினா கடற்கரை, நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள் (Shopping Malls) போன்ற இடங்களில் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 37 ஆம்புலன்ஸ்களும், நான்கு சக்கர (Four Wheel) ஆம்புலன்ஸும் மற்றும் 13 இரண்டு சக்கர ஆம்புலன்ஸ்களும், Hot Spot என்று கண்டறியப்பட்டுள்ள இடங்களில் தயார் நிலையில் நிறுத்தப்படவுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் தகுந்த வசதிகளுடன் தயார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 108 சேவை மையம் (Call Center) கூடுதல் பளுவை எதிர்கொள்ள முடுக்கிவிடப்பட்டுள்ளது, மக்கள் நல்வாழ்வுத்துறை சென்னை மாநகரக் காவல் துறையுடன் இணைந்து செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படாத நிலையை உருவாக்க உறுதி பூண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு