Published:Updated:

திருடப்போன இடத்தில் கொள்ளையனுக்கு நேர்ந்த சோகம்!

திருடப்போன இடத்தில் கொள்ளையனுக்கு நேர்ந்த சோகம்!
திருடப்போன இடத்தில் கொள்ளையனுக்கு நேர்ந்த சோகம்!

திருடப்போன இடத்தில் கொள்ளையனுக்கு நேர்ந்த சோகம்!

மதுரை திருமங்கலத்தை அடுத்த திரளி கிராமத்தில் இரவில் திருட முயன்ற நபர் மாட்டிக்கொண்டதால் தப்பிக்க முயன்று மாடியிலிருந்து குதித்து தன் காலை உடைத்துக்கொண்டுள்ளார்.

திரளி கிராமத்தைச் சேர்ந்த ராஜு அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். கதவு திறந்து இருந்ததை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார் தனக்கண்குளத்தைச் சேர்ந்த பால்சாமி. அவரின் கூட்டாளி இருவரும் ராஜுவின் வீட்டுக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பால்சாமி திருடுவதற்காக அண்டாவை உருட்டியுள்ளார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த ராஜுவின் மனைவி திருடன், திருடன் எனப் பயத்தில் கத்தியுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் எழுந்து பால்சாமியை மடக்கியுள்ளனர் . எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என நினைத்த பால்சாமி ராஜு வீட்டின் மாடியிலிருந்து குதித்துள்ளார். அதனால் அவரின் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து பால்சாமியைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் பால்சாமி உள்ளிட்ட மூன்று பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான 2 பேரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர். பால்சாமியை விசாரித்ததில், இதுவரை 10 வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் 2 வழிப்பறியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு