Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:

•  இரட்டைக்கோபுரத் தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்ட தீவிரவாதியைத் தேடும் எஃப்.பி.ஐ ஏஜென்ட் வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடித்த 'குவான்டிகோ’ சீரியல், அமெரிக்காவில் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த வருடத்தின் சிறந்த சீரியல் நடிகைக்கான விருது பெறப் போட்டி போடும் அளவுக்கு அசத்தியிருக்கிறார் அழகி. 'இந்தப் புகழும் பாராட்டும் 50 பாலிவுட் படங்களில் நடித்தால்கூடக் கிடைக்காது’ என்கிறார் பிரியங்கா. டப்பிங்குக்கு வெயிட்டிங்! 

இன்பாக்ஸ்

•  செல்ல அப்பாவாக லைக்ஸ் குவித்திருக்கிறார் அமீர்கான். அமீரின் மகள் இரா, தன் முதல் ஓவியக் கண்காட்சியை மும்பையில் தொடங்கியிருக்கிறார். தன் மகளின் 'தி டைகர்ஸ் நெஸ்ட்’ எனும் முதல் ஓவியத்தை அமீர்கானே விலைக்கு வாங்கியதோடு, ஓவிய விற்பனையையும் தானே முன்னின்று கவனித்துவருகிறார். அழகழகான ஓவியங்களை ட்விட்டரிலும் ஷேர் செய்து வைரலாக்கி யிருக்கிறார் அமீர். ஆசம் அமீர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

•  'அஞ்சான்’ கூட்டணி, பாலிவுட் செல்கிறது. தமிழில் மியூஸிக்கல் ஹிட்டடித்த 'பையா’ கதையை அப்படியே இந்திக்கு ஏற்றதுபோல் மாற்றி எடுக்க இருக்கிறாராம் இயக்குநர் லிங்குசாமி. 'அஞ்சான்’, 'துப்பாக்கி’ படங்களில் அதிரடியாகக் கலக்கிய வித்யூத் ஜமால்தான் ஹீரோ. அடடா மழைடா!

இன்பாக்ஸ்

•  மக்கள்தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில், ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை மட்டுமே எனும் சட்டம் 1979-ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. ஆனால், 'இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம்’ என இப்போது விதியைத் தளர்த்தியிருக்கிறது சீன அரசு. சீரற்ற ஆண்-பெண் விகிதாசாரம், ஆபத்தான கருக்கலைப்புகள், இளைஞர்கள் பலம் குறைவு... என அடுக்கடுக்கான சிக்கல்களை சமூக ஆர்வலர்கள் முன்வைக்க, சட்டத்தை மாற்ற முடிவெடுத்திருக்கிறார்கள். மாற்றம்... முன்னேற்றம் சீனா!

• மாஸ் ஹிட், கிளாஸ் பர்ஃபார்மன்ஸ் என எல்லா வகையிலும் ஹிட் டிக் அடித்துவிட்டாலும் கரீனாவின் சீனியாரிட்டி குறையவே இல்லை என ஆச்சர்யப்படுகிறது பாலிவுட். 'ஷமிதாப்’ இயக்குநர் பால்கியின் அடுத்த படமான 'கி அண்ட் கா’-வில் ஒரு பாடலுக்கு மும்பை வெயிலில், 32 கிலோ எடையுள்ள லெஹங்கா உடை அணிந்து நடனம் ஆடி, நல்ல பேர் வாங்கியிருக்கிறார் கரீனா. வெயிட் மேட்டர்ல!

•  'ஏ.ஆர்.ரஹ்மான் ஃபர்ஸ்ட், நான் செகண்ட்’ என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. ஹாலிவுட்டுக்கு ரூட் பிடித்த லிஸ்ட் பற்றி சிலிர்க்கிறார் யுவன். இயக்குநர் பிரபாகரன் ஹரிஹரன் இயக்கும் 'வூல்ஃபெல்’ என்ற அனிமேஷன் படத்துக்கு இசையமைக்கிறார். அரசியலை அடிப்படையாக வைத்து ரோபோக்கள் கலக்கும் கதைதான் படம்.  யோயோ யுவன்!

•  கேத்ரீனா கைஃப் பாலிவுட்டில் கால் பதித்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். ஆனால், அழகி இப்போதும் அதே அழகு அதே இளமை அதே துள்ளல் என செம ஃப்ரெஷ். 'அட... நானும் சீனியராகிவிட்டேனா?! அனுபவமும் நிதானமும் வளர்ந்திருக்கிறது. முன்பைவிட இப்போது நடனம், உடைகள், நிகழ்ச்சிகள் என அனைத்திலும் 'மிஸ் பர்ஃபெக்ட்’டாக இருக்க முயற்சிசெய்கிறேன். எனவே, என்னை இன்னும் பழைய கேத்ரினாவாகப் பார்க்காதீர்கள்’ என்கிறார் கைஃப். நீ கலக்கு கண்ணம்மா!

இன்பாக்ஸ்

•  அதைக் கண்டால் பயம்; இதைக் கண்டால் பயம் என பயத்தைப் பற்றி தீவிரமாகப் படித்தும் கேட்டும் வருகிறார் ராதிகா ஆப்தே. காரணம்,  ராதிகாவின் அடுத்த படம் 'ஃபோபியா’. எப்போதும் பயத்துடனே வாழும் பெண்ணின் கதையாம்.  'இயக்குநரின் கதையைவிட, அந்த விஷயத்தைப் பற்றிய என் புரிதல்தான் கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கும். அதனால்தான் மருத்துவர்கள், ஃபோபியா நோயாளிகள் எனத் தேடித் தேடித் தெரிந்துகொள்கிறேன்’ என்கிறார் ராதிகா. சூப்பர்ஸ்டார் ஜோடிக்கு பயமா?

 புகைப்படம் போலத்தான்... ஆனால், வீடியோவாக சில நொடிகள் நகரும் படங்களுக்கு ’GIF' என்று பெயர். சமீபத்தில் GIF படங்களை ஷேர் செய்யும் வசதி ஃபேஸ்புக் ஏற்படுத்தித்தர, எங்கு பார்த்தாலும் GIF எனப் புலம்பினார்கள் டைம் லைனர்கள். இதற்கெனப் பிரத்யேகமாக 'பூமராங்’ எனும் ஆப் ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறது இன்ஸ்டாகிராம். ஒரு நிமிடத்துக்கும் குறைவான வீடியோக்களைப் படம்பிடித்து அதை GIF ஃபைலாக மாற்றி ஷேர்செய்யலாம். இதுபோன்ற ட்ரெண்டி அப்டேட்களால் இந்த ஆண்டு மட்டும் 600 மில்லியன் டாலர் குவித்திருக்கிறதாம் இன்ஸ்டாகிராம். GIF மீம்ஸ் வந்திருமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism