Published:Updated:

உயிர்ப் பலிவாங்க காத்திருக்கும் பேருந்து நிலைய மேற்கூரை! அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தின் அவலம்

கரூர் பேருந்துநிலையத்தில் உள்ள கட்டடத்தில் உள்ள இரண்டு கடைகளின் மேற்கூரை சிமென்ட் சிலாப்புகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கே பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுபற்றிப் பேசிய பயணிகள், "இன்று திடீர்ன்னு பஸ்ஸ்டாண்டு உள்ளே உள்ள இரண்டு கடைகளின் மேற்கூரை சிமென்ட் சிலாப்புகள் இடிந்து விழுந்தது. அங்கே யாரும் பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், பேருந்து நிலையத்துக்குள் இருக்கும் கரூர் நகராட்சிக்குச் சாெந்தமான மற்ற கட்டடங்களும் சிதிலமாகி இடியும் தருவாயில்தான் இருக்கின்றன. பலமுறை 'டேமேஜ் ஆன கட்டடங்களை சரிபண்ணுங்க. தினமும் இங்கே ஆயிரக்கணக்கான பேருந்துகளும், பல ஆயிரம் பயணிகளும் வந்து பாேறாங்க. அவங்க தலையில எப்பாே கட்டடம் இடிஞ்சு விழுமோங்கிற நிலைமையில் இருக்கு. அதனால், எங்க உயிர்களுக்கு உலை வைக்க காத்திருக்கும் டேமேஜ் ஆன கட்டடங்களை சரிபண்ணுங்க 'ன்னு புகார் பண்ணிட்டாேம். ஆனா, இந்தா அந்தான்னு பந்தா காட்டறாங்களேயாெழிய, சரிபண்ணவே இல்லை. அதுவும் பாேக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்டத்திலேயே பேருந்துநிலைய கட்டடங்கள் இந்த லட்சணத்தில் இருந்தா, மத்த மாவட்ட நிலைமை எப்படி இருக்கும்ன்னு நீங்களே யூகிச்சுக்குங்க. சீக்கிரம் இந்த டேமேஜ் ஆன கட்டடங்களைப் புதுப்பிக்கலன்னா, பாேராட்டம்தான்!" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு