நீங்கள் புக் செய்த அபார்ட்மென்டின் தற்போதைய நிலைமையென்ன? (Sponsored Content)

'வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்' எனும் அடைமொழி வீடு கட்டுதல் மற்றும் ஒரு திருமணத்தை முறைப்படி நடத்துவதில் உள்ள சவால்களை எடுத்துரைக்கிறது. இன்று பார்த்து பார்த்து வீடு கட்ட நமக்கு நேரம் இருப்பதில்லை. இங்கேதான் டெவலப்பர்கள் எனப்படும் கட்டுமான நிறுவனங்கள் நமக்குக் கைக்கொடுக்கின்றன. சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற நம் கனவை நனவாக்கும் இந்த கட்டுமான நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

வீட்டை புக் செய்வது முதல் கட்டம்தான், அதன்பின் இந்நிறுவனங்கள் உங்களை எவ்வாறு நடத்துகின்றன, உங்களுக்கு கட்டுமானத்தின் வளர்ச்சி குறித்து தொடர்ந்து அறிவிக்கின்றனவா, வீடு சம்பந்தமான உங்களின் சந்தேககங்களுக்கு சரியாக முகம் கொடுத்து பதில் அளிக்கின்றனவா என்பது மிக மிக முக்கியம். பண இழப்பு/ஏமாற்றப்படும் அபாயம் நிறைந்தது ரியல் எஸ்டேட் துறை, எனவே வீடு ​வா​ங்குபவர்கள் விழிப்புணர்வோடு இருப்பது அத்தியாவசியம். சரி எப்படி ஒரு நிறுவனத்தை எடை போடுவது?...

"அர்பன் ட்ரீ இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ்" கட்டுமான நிறுவனம், கடந்த 7 வருடங்களாக பலநூறு வாடிக்கையாளர்களுக்கு தரமான வீடுகளை வழங்கிவருகிறது. பெயருக்கு ஏற்றார் போல், சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பசுமைக் கட்டிடங்களைக் கட்டுவதில் பெயர்பெற்றுள்ளது இந்நிறுவனம். ​சகோதரர்கள் - திரு அபிஷேக் மேத்தா மற்றும் திரு அபினய் மேத்தா, எனும் இளைஞர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் சென்னையை சேர்ந்த இந்த நிறுவனம், குறைந்த காலத்தில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. எப்படி?

வாங்குபவருக்கு வீட்டின் நிலைமை மற்றும் கட்டுமானத்தின் வளர்ச்சிபற்றிய விவரங்களைத் தொடர்ந்து நிறுவனங்கள் வழங்குவது தற்போது கட்டாயம். மேலும், கட்டப்படும் வீட்டில் ஏதாவது மாற்றம் செய்வதென்றால், முதலில் வாங்குபவரிடம் தெரிவிக்க வேண்டும். பல நிறுவனங்கள், கட்டிடம் கட்டியபின், பயனாளிகளிடம் ஒப்படைத்துவிட்டு அப்பாடா என​த்​ தங்களின் புதிய ​புராஜெக்டை பார்க்க​ச்​ சென்றுவிடுகின்றனர். ஆனால் அர்பன் ட்ரீ, வீட்டைக் கட்டிக்கொடுத்த பின்பும், தாங்கள் கட்டிய வீடு எப்படியுள்ளது, ஏதாவது குறைகள் இன்னும் தீர்க்கப்படவேண்டுமா என்று யோசித்து, வாடிக்கையாளர் சந்திப்புகளை நடத்துகிறது. மேலும், இந்த மீட்டிங்கிற்கு இந்நிறுவனத்தின் இயக்குனர்களே நேரடியாகக் கலந்துகொண்டு வாடிக்கையாளர்களின் கருத்துகளைக் கேட்டறிவது, வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது​ ​நுகர்வோர்களில் 3ல் 2 பங்கு நபர்களிடம்​ ​கட்டுமானத்தின்​​ ​மாற்றங்களுக்கான ஒப்புதலைப் பெற வேண்டும். அர்பன் ட்ரீ, இந்த சட்டம் வருவதற்கு முன்பிலிருந்தே, கஸ்டமரிடம் பில்டிங்கின் வளர்ச்சி/மேம்பாடுகள் குறித்து மாதாமாதம் தகவல்கள் ​அளித்துவருகிறது என்பது அதன் சிறப்பு.

வாடிக்கையாளர் கலந்துரையாடலுக்கு செல்லமுடியாத பட்சத்தில், போன் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல்கள் அனுப்பப்படுகிறது. மேலும், மா​தா​ந்திர நியூஸ்லெட்டர் மூலம் தற்போதைய ​மார்க்கெட்​ நிலவரம், கட்டுமான விவரங்கள், செய்திகள் என பிற பயனுள்ள தகவல்களையும் வழங்கி நுகர்வோருக்கு விழிப்புணர்வு​ஏற்படுத்தப்படுகிறது. 

பொதுவாக, வங்கிக் கடனிலிருந்து குறிப்பிட்ட முன்பணத்தை​ப் பெற்று​​,​ வாங்குபவர்கள் ​வீட்டை ​புக் செய்வ​து வழக்கம்​. இந்த முன்பணத்திற்கு மாத வட்டியுமுண்டு. ஆனால், தற்போது 0% ப்ரீ இ.எம்.ஐ சலுகை மூலம் புக் செய்த வீடு, வாடிக்கையாளர்களின் கைகளில் கிடைக்கும் வரை மாதாந்திர​த்​ தவணையை அர்பன் ட்ரீ-யே வங்கிக்கு நேரடியாக செலுத்திவிடுகிறது.​ ​​மேலும், இந்நிறுவனம், ரூபாய் 25 ஆயிரம் முதல் மாதத் தவணை​த் திட்டத்தைத்​ தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.

அர்பன் ட்ரீ நிறுவனத்தின் புதிய வீட்டும​னை​த் திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ​​www.urbantreehomes.comஎன்ற இணையதளத்திற்கு செல்லலாம்.​​

Do you like the story?

Please Appreciate the Author by clapping!