டயர்களை பாதுகாக்கும் 8 டிப்ஸ்!

 

ஒரு வாகனத்தின் பிரதானமான உதிரிபாகங்களின் வரிசையில், டயர்-க்கு நிச்சயமாக ஓர் இடம் உண்டு. இதை நாம் முறையாகப் பயன்படுத்தும்போது, எரிபொருளையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்! தவிர சிலநேரங்களில் விபத்திலிருந்தும் தப்பிக்கலாம்; இதைச் சரியாகப் பராமரிப்பதற்கான டிப்ஸ் இதோ...!

Tyre Tips

டயர்களில் சிக்கியிருக்கும் சிறுசிறு கற்கள், ஆணிகள், முட்கள் போன்றவற்றை நீக்கிவிடுவதுடன், பட்டன் பகுதி எப்போதுமே சுத்தமாக இருக்கவேண்டும். வீல் டிஸ்க்கை துருப்பிடிக்காமல் வைத்திருந்தால் அது போனஸ்.

டியூப் டயர் என்றால், நீங்கள் புதிதாக டயரை மாற்றும்போது, டியூப்பையும் மாற்றிவிடுவது நல்லது. மேலும் முதல் நாளில் இருந்தே வாகனத்தின் முன், பின் சக்கரங்களில், பரிந்துரை செய்யப்பட்ட காற்றழுத்தத்தைத்தான் கடைபிடிக்க வேண்டும்.

குறைந்தது பத்து நாட்களுக்கு ஒருமுறையாவது, காற்றின் அளவைப் பரிசோதிக்க மறவாதீர்கள். மேலும் டயரின் வால்வு பகுதி, அதற்கான மூடியால் மூடப்பட்டிருப்பது அவசியம். ஏனெனில் இதுதான் டயருக்குள் மண் மற்றும் தூசு செல்வதைத் தடுக்கும்.

டயரில் கீறல்கள் மற்றும் சீராய்ப்புகள் ஏதேனும் இருந்தால், அதை சரிசெய்தபிறகே, அந்த டயர்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் டயர் வெடித்துவிடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. 

Tyre Tips

 

சில சந்தர்ப்பங்களில், நமக்கு முன்னே செல்லும் வாகனத்திலிருந்து, சொட்டுச் சொட்டாக ஆயில் ஒழுகிக்கொண்டு செல்வதைப் பார்க்கலாம். இதை நாம் கவனிக்காமல் சென்றால், டூ-வீலர் என்றால் சறுக்கிவிழுந்துவிடுவதற்கான அபாயம் இருக்கிறது. எனவே ஆயில், கிரீஸ், பெயின்ட் போன்ற வழுக்கும் தன்மை கொண்ட பொருட்கள், டயர்களில் மீதுபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எனவே அடிக்கடி டயரைச் சோதித்துப் பார்ப்பது நன்மை பயக்கும்.

உங்கள் வாகனத்தின் ஹேண்டில்பார் / ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷன் ஆகியவை, சரியான முறையில் இருந்தாலே, டயர்கள் நீடித்த உழைப்பை உறுதியாகத் தரும். எனவே உங்களைப் போலவே, வாகனத்தின் ஹெல்த்தையும் சரியான கண்டிஷனில் வைக்கவும்.

காரின் டிரைவ் அமைப்பைப் பொறுத்து, முன்பக்க வீல்கள் அல்லது பின்பக்க வீல்கள் விரைவாகத் தேய்மானம் அடையும். எனவே உங்கள் வாகனத்தின் 5 வீல்களையும் (ஸ்பேர் வீல் உட்பட), 5000 கி.மீ-க்கு ஒரு முறை இடம்மாற்றிப் பொருத்துவது அவசியம். இதனால் டயர்களின் தேய்மானம், ஒரே சீராக இருக்கும். டூ-வீலர்களில் வெவ்வேறு அளவிலான டயர்கள் உண்டு என்பதால், இந்த விதிமுறை அந்த வாகனங்களுக்குப் பொருந்தாது.

5,000 கிமீ முதல் 7,000 கி.மீ-யின் போது, ஒவ்வொரு முறையும் வீல் அலைன்மென்ட், வீல் பேலன்ஸிங் ஆகியவற்றைச் செய்யத் தவறாதீர்கள். மேலும் ஒரே ஆக்ஸிலில், இரண்டு விதமான டயர்களைப் பொருத்தக் கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!