Published:Updated:

மூலிகை நாள்காட்டி வழங்கி அசத்தும் ஓவியர்..!

மூலிகை நாள்காட்டி வழங்கி அசத்தும் ஓவியர்..!
மூலிகை நாள்காட்டி வழங்கி அசத்தும் ஓவியர்..!

மூலிகை நாள்காட்டி வழங்கி அசத்தும் ஓவியர்..!

மூலிகை நாள்காட்டி வழங்கி அசத்தும் ஓவியர்..!

சிவகங்கையைச் சேர்ந்தவர் ஓவியர் என்.முத்துகிருஷ்ணன். இவர் அஞ்சல் அட்டையில் ‘அணுவைத் துளைத்தெழு கடலை புகட்டி’ என்ற அறிவியல் சிற்றிதழை நடத்தி வருகிறார். இதில் அறிவியல் கருத்துகள், நகைச்சுவை, விளம்பரம் என அஞ்சல் அட்டையில் உருவாக்கி லிம்கா சாதனை படைத்துள்ளார். இவர் தற்போது, 201-8ம் ஆண்டு இணைப்பாக மூலிகைகளுடன் கூடிய நாட்காட்டியை தயாரித்து அவரது வாசகர்களுக்கு அனுப்பி வருகிறார்.

இதுகுறித்து ஓவியர் என்.முத்துகிருஷ்ணன் பேசும்போது, "கடந்த 1988-ம் ஆண்டு முதல் அஞ்சல் அட்டையில் அணு சிற்றிதழை நடத்திவருகிறேன். அணுவைத் துளைத்தெழு கடலைப்புகட்டி என பதிவு செய்துள்ளேன். கடந்த 2004-ம் ஆண்டு முதல் புத்தாண்டுக்கு காலண்டர் இலவசமாக அனுப்பிவருகிறேன். இதில் 15-க்கு 10 அடியில் பெரிய காலண்டர், அரை இஞ்ச் அளவில் காலண்டர், அரச இலையில் காலண்டர் என ஆண்டுதோறும் புதுமையாக வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரியம், மூலிகைகளைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்

மூலிகை நாள்காட்டி வழங்கி அசத்தும் ஓவியர்..!

என்ற நோக்கத்தில் மூலிகை நாட்காட்டியை உருவாக்கியுள்ளேன். தற்போது தொடர்ந்து தும்மினாலே உடனடியாக 
அலோபதி டாக்டரைப் பார்க்கச் செல்கிறோம். இதனைத் தவிர்க்கவும், மூலிகை மருத்துவம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவும், நம்மைச் சுற்றியுள்ள மூலிகைகளையும் அறிந்து கொள்ளவும் மூலிகை நாட்காட்டியை தயாரித்துள்ளேன். சீரகம், மிளகு போன்ற மூலிகைகள் சமையலில் பயன்படுத்துவதால் தெரிந்து கொள்கிறோம். மற்றவற்றையும் தெரிந்துகொள்ளவும் இந்த நாட்காட்டியை தயாரித்துள்ளேன். சித்தர்கள் கண்டறிந்த ஆயிரக்கணக்கான மூலிகைகளில் 365 மூலிகைகளையும் பதப்படுத்தி நாளுக்கு ஒன்றாக நாட்காட்டியில் ஒட்டி, அதில் மூலிகையின் பெயர், நிவர்த்தி செய்யும் நோயின் தன்மை குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது. 
மேலும், ஒவ்வொரு கிழமைகளில் என்னென்ன மூலிகைகளில் சாப்பிடலாம் போன்ற தகவல்களும் தெரியப்படுத்துப்பட்டுள்ளது.
மேலும், நாட்காட்டியின் பின்புறம் நோயற்ற வாழ்வு வாழ  கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள், பழக்கவழக்கங்கள், பயிற்சி முறைகள், நடைமுறை ஒழுக்கம் போன்றவைகளும் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூலிகையும் ஒரே மாதத்தில் கிடைப்பதில்லை. ஜனவரியில் கிடைக்கும் மூலிகை ஆகஸ்டில் கிடைக்காது. எனவே அந்தந்த மாதம் கிடைக்கும் மூலிகைகளை அந்தந்த மாதம் தயாரித்து அனுப்பப்படும்' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு